சமைக்காத உணவுகளால் இவ்வளவு நன்மைகளா?

நாம் பொதுவாக உணவை சமைத்து சாப்பிடுகிறோம். ஆனால், சமைக்கும்போது உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறையக்கூடும். இதனால் சிலர் பச்சையான உணவுகளை எடுத்துக்கொள்கின்றனர். பச்சை காய்கறிகள், பழங்கள் மட்டுமின்றி, சுத்திகரிக்கப்படாத பால், சமைக்கப்படாத இறைச்சி மற்றும் பச்சையான முட்டைகளையும் சிலர் சாப்பிடுகின்றனர். இப்படி பச்சையாக உணவை உண்பதால் என்ன நன்மைகள் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

சமைத்த உணவுகளுடன் ஒப்பிடும்போது, சமைக்காத உணவுகளில் நார்ச்சத்து அதிகமாகக் காணப்படுகிறது. இந்த நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகள் ஆகியவை நம் உடல் எடையைக் குறைத்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். மேலும், இந்த சமைக்காத உணவுகள் நம் ரத்த சர்க்கரை அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவும்.

குளிர்பானம், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சிப்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கலோரி அதிகமாக இருக்கிறது. இந்த அதிக கலோரி உண்பவர்களுக்கு உடற்பருமன், நீரிழிவு நோய், உயர் ரத்தக் கொழுப்பு ஆகியவை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். ஆனால், இந்த பச்சை உணவுகள் பதப்படுத்தப்படாதவை என்பதால் அவற்றால் நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு.

பொதுவாக உணவு சமைக்கப்படும் போது ஊட்டச்சத்துகள் இழக்கப்படும். ஆனால், சமைக்கப்படாத உணவுகளில் ஊட்டச்சத்துகள் பாதுகாக்கப்படும். நம் குடலில் உள்ள நுண்கிருமிகள் நம் உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்பவையாகும். சமைக்கப்பட்ட உணவுகளால் குடல் நுண்கிருமிகளுக்கு பாதிப்பு ஏற்படலாம். எனவே, சமைக்காத உணவுகளை உண்பது உடல் நலத்திற்கு நன்மை பயக்கும்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version