இரத்த சோகை: காரணங்கள் மற்றும் தீர்வுகள்!

உடலில் இரத்த சோகை ஏற்படுவதற்கான பல்வேறு காரணங்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து விரிவாக காண்போம்.

பொதுவாக, ஒருவருக்கு இரத்த சோகை இருந்தால், அடிக்கடி மயக்கம், தலைவலி, உடல் சோர்வு, நெஞ்சு வலி, தோல் வெளுப்பு, பசியின்மை, மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் தோன்றும். இந்த பாதிப்பிலிருந்து மீள்வதற்கான வழிகளை இந்தப் பதிவில் காணலாம்.

இரத்த சோகை ஏற்பட முக்கிய காரணங்களாக வைட்டமின் மற்றும் இரும்புச்சத்து குறைபாடு, தன்னெதிர்ப்பு நோய்கள், இரத்தப்போக்கு, சில மருந்து மாத்திரைகள் ஆகியவை அமைகின்றன. குறிப்பாக, மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு உள்ள பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள், மற்றும் வைட்டமின், இரும்புச்சத்து குறைவாக எடுத்துக்கொள்பவர்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இரும்புச்சத்து அதிகமுள்ள பயறு வகைகள், சோயா பன்னீர், பச்சை நிறக் காய்கறிகள், மாதுளைப் பழம், முருங்கைக்கீரை, பீன்ஸ், உருளைக்கிழங்கு, ஆலிவ் போன்ற உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்வது இரத்த சோகையைக் குணப்படுத்த உதவும். மேலும், வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதும் இரத்த சோகைக்கு தீர்வாக அமையும்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version