MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தவெக ஆட்சியை கவிழ்க்க சதி: 6 பேர் கைது – பரபரப்பில் தமிழக அரசியல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தவெக ஆட்சியை கவிழ்க்க சதி: 6 பேர் கைது – பரபரப்பில் தமிழக அரசியல்

தமிழ்நாடு

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி: 6 பேர் கைது – பரபரப்பில் தமிழக அரசியல்

Admin
Last updated: ஜூலை 1, 2026 2:34 மணி
Admin
Share
SHARE

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள ஒரு சம்பவத்தில், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கவிழ்க்க நடத்தப்பட்ட சதி தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் கட்சி மாறுவதற்காக மர்ம நபர்கள் சிலர் பேரம் பேசிய புகாரின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருவல்லிக்கேணி போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில், சென்னையைச் சேர்ந்த யூடியூபர் திருநாவுக்கரசு என்பவர் முதலில் கைது செய்யப்பட்டார். இவர், லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் என்ற பெயரில் தேர்தலுக்கு தேர்தல் கருத்து கணிப்புகளை வெளியிடுபவர் என தெரியவந்துள்ளது. திருநாவுக்கரசு அளித்த தகவலின் பேரில், கரூரைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகிய மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

இது குறித்து சென்னை மாநகர போலீஸ் வெளியிட்ட அறிக்கையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் ஆகியோரின் தூண்டுதலின் பேரில்தான் யூடியூபர் திருநாவுக்கரசு, ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் கட்சி மாறுவது குறித்து பேரம் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர உள்ளதாகவும், அதில் ஆளுங்கட்சி உறுப்பினராக இருந்தாலும், வாக்கெடுப்பின்போது தங்களுக்கு சாதகமாக வாக்களிக்க வேண்டும் என்றும், அதற்காக ரூ.35 கோடி வரை தருவதாகவும் திருநாவுக்கரசு எம்எல்ஏ இளையராஜாவிடம் ஆசை வார்த்தை காட்டியுள்ளார். இதற்கு எம்எல்ஏ இளையராஜா மறுப்பு தெரிவித்ததோடு, இது குறித்து வெளியே தெரிவித்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் திருநாவுக்கரசு மிரட்டியுள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ.வாகிய தன்னிடம், தனது மக்கள் பணியை செய்ய விடாமல் தடுக்கும் வகையிலும், லஞ்சம் கொடுக்க முயன்றதோடு, தனக்கும் குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் விடுத்த திருநாவுக்கரசு மற்றும் அவருக்குப் பின்னணியில் செயல்படும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்எல்ஏ இளையராஜா புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க, திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதால், அந்த கட்சிகளில் இருந்து பலர் தவெகவில் இணைந்து வருவதாகவும், குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இன்னும் முயற்சிப்பதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:6 பேர் கைதுஆட்சியை கவிழ்க்க சதிதமிழக அரசியல்தவெகயூடியூபர் திருநாவுக்கரசு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article டாடா சியரா EV: ரூ.3 லட்சம் முன்பணம், ரூ.23379 EMI- முழு விவரம்!
Next Article ஹுண்டாயின் 4 புதிய எஸ்யுவிக்கள்: பஞ்ச் EV, விக்டோரிஸ்க்கு சவால்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தின் அலுவலகம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு இந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

மும்பையில் கனமழையால் குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை மன்குர்ட் பகுதியில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு…

ஜூலை 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர் சூட்டப்பட்டது!

தாம்பரம் ரயில் நிலையம் முதல் வேளச்சேரி வரையிலான சாலைக்கு, வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது.

1 Min Read
அதிமுக மூத்த தலைவர் கே.பி. முனுசாமி செய்தியாளர்களை சந்திக்கிறார்.
தமிழ்நாடு

அதிமுக தலைவர் அண்ணாமலையா? கே.பி. முனுசாமி கடும் கோபம்!

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு அண்ணாமலையை நியமிக்கலாம் என நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்ததாக வெளியான செய்திக்கு கே.பி.முனுசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது...

2 Min Read

சென்னையில் மூதாட்டி கொலை: ஆட்டோ டிரைவர் உட்பட இருவர் தேடல்

சென்னையில் தனியாக வசித்த மூதாட்டி, நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். ஆட்டோ டிரைவர் உட்பட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

2 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

தமிழகம் முழுவதும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். 52.91 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?