MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சென்னையில் மூதாட்டி கொலை: ஆட்டோ டிரைவர் உட்பட இருவர் தேடல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சென்னையில் மூதாட்டி கொலை: ஆட்டோ டிரைவர் உட்பட இருவர் தேடல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சென்னையில் மூதாட்டி கொலை: ஆட்டோ டிரைவர் உட்பட இருவர் தேடல்

தமிழ்நாடு

சென்னையில் மூதாட்டி கொலை: ஆட்டோ டிரைவர் உட்பட இருவர் தேடல்

Admin
Last updated: மே 15, 2026 6:58 மணி
Admin
Share
SHARE

சென்னையில் தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர் சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்த பொன்னம்மாள், தனது கணவர் மறைவுக்குப் பிறகு, பென்ஷன் பணத்தை நம்பி தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆறு பெண் பிள்ளைகள் உள்ளனர், அவர்களும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

சம்பவத்தன்று, பொன்னம்மாளின் வீட்டிலிருந்து வெளியே வந்த புதிய முகங்களைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், சந்தேகமடைந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அதிர்ச்சி காத்திருந்தது. பொன்னம்மாள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையிலும், முகம் முழுவதும் காயங்களுடனும் கிடந்துள்ளார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவக் குழுவினர், பொன்னம்மாள் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர். கழுத்தை நெரித்தும், கொடூரமாக தாக்கியும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனைக்காக உடல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, இரண்டு வாலிபர்கள் பொன்னம்மாளின் வீட்டிற்குள் செல்வதும், பின்னர் பதற்றமின்றி வெளியேறி ஆட்டோவில் ஏறி தப்பிச் செல்வதும் பதிவாகியுள்ளது. குறிப்பாக, அவர்கள் பொன்னம்மாளின் வீட்டிற்கு சற்று தொலைவிலேயே ஆட்டோவை நிறுத்திவிட்டு, வீட்டிற்குள் சென்றுள்ளனர். தப்பிச் செல்லும் வழியில், அவர்கள் ஓட்டிச் சென்ற ஆட்டோ, ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதும் பதிவாகியுள்ளது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில், போலீசார் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மேலும், பொன்னம்மாள் சமீபத்தில் சூரப்பட்டு பேருந்து நிலையம் அருகே சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள தனது நிலத்தை விற்றுள்ளார் என்றும், அதில் தலா 5 லட்சம் ரூபாயை தனது ஆறு மகள்களுக்கும் கொடுத்துவிட்டு, மீதம் ஒரு லட்சம் ரூபாயை வீட்டில் வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று, பொன்னம்மாள் ஒருவரிடம் போனில் பேசியபோது, 'இடத்தை விற்றுவிட்டதாகவும், வீட்டில் ஒரு லட்சம் ரூபாய் இருப்பதாகவும்' கூறியது ஆட்டோ டிரைவரின் கவனத்திற்குச் சென்றுள்ளது. இந்த தகவலைப் பயன்படுத்தி, இறக்கிவிட்ட சில நிமிடங்களிலேயே தனது கூட்டாளிகளுடன் வந்து இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பணம் பறிப்பதற்காக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Auto DriverChennai NewsElderly Woman Murderசென்னை கொலைநகை கொள்ளை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article காங்கோவில் எபோலா: 65 பேர் பலி – பீதியில் மக்கள்!
Next Article கேரளா முதல்வர் வி.டி.சதீசன்: போராட்டங்கள், வெற்றிகள் ஒரு பார்வை!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

நாடாளுமன்றத்தில் 'வந்தே மாதரம்' பாடல் இசைக்கப்படும் காட்சி

நாடாளுமன்றத்தில் முதன்முறையாக ‘வந்தே மாதரம்’ பாடல் இசைப்பு

இந்திய நாடாளுமன்றத்தில் முதன்முறையாக 'வந்தே மாதரம்' தேசியப் பாடல் வியாழக்கிழமை அன்று இசைக்கப்பட்டது.…

ஆகஸ்ட் 14, 2026

கார்கே பங்கேற்ற நிகழ்ச்சியில் ‘சுத்திகரிப்பு’ சடங்கு: விசாரணைக்கு பாஜக தலைவர் உத்தரவு

உத்தரகண்டில் கார்கே பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் 'சுத்திகரிப்பு' சடங்கு…

ஆகஸ்ட் 14, 2026

விபத்து பகுதிக்கு செல்ல ஆம்புலன்சுக்கு 10 நிமிட கெடு

விபத்து நடந்த இடங்களுக்கு ஆம்புலன்ஸ்கள் 10 நிமிடங்களுக்குள்…

ஆகஸ்ட் 14, 2026

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் மீது தாக்குதல்: ஒருவர் கைது

பஞ்சாபின் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங்…

ஆகஸ்ட் 13, 2026

கார்கே பொதுக்கூட்டம் நடத்திய இடத்தை சுத்தம் செய்த பாஜகவினர் மீது வழக்குப்பதிவு: காங்கிரஸ் வலியுறுத்தல்

உத்தராகண்ட் ஹல்த்வானியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே…

ஆகஸ்ட் 13, 2026

You Might Also Like

மதுரை மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

மதுரைக்கு அசத்தல் திட்டங்கள்: ரூ.150 கோடியில் வைகை-குண்டாறு இணைப்பு!

மதுரைக்கு வைகை-குண்டாறு நதிநீர் இணைப்பு திட்டம், சிறப்பு அரசு சட்டக் கல்லூரி உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரூ.150 கோடி செலவில் வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

3 Min Read
வங்கி மேலாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் கயல்விழி
தமிழ்நாடு

வங்கி மேலாளரை அறைந்த கயல்விழி: அடையாறு SBI லிப்ட் தகராறு

சென்னை அடையாறு எஸ்பிஐ வங்கியில் லிப்ட் கோளாறு தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட கயல்விழி, வங்கி மேலாளரை கன்னத்தில் அறைந்ததாக புகார். சிசிடிவி காட்சிகள் வெளியானது.

2 Min Read
தமிழ்நாடு

அதிமுக மகளிரணி: 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை ராயப்பேட்டையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பெண்கள் பாதுகாப்பு, தேர்வு முறைகேடுகள், மின்வெட்டு உள்ளிட்ட 6 முக்கிய தீர்மானங்கள்…

1 Min Read
டிடிவி தினகரன் அறிக்கை வெளியிடும் காட்சி
தமிழ்நாடு

வழக்கறிஞர் நியமனங்களில் லஞ்சம்: ஜோசப் விஜய் அரசு மீது தினகரன் குற்றச்சாட்டு

தமிழக வெற்றிக் கழக அரசு மீது வழக்கறிஞர் நியமனங்களில் லஞ்சம் குற்றச்சாட்டை டிடிவி தினகரன் முன்வைத்துள்ளார். முதலமைச்சர் ஜோசப் விஜய் ஏன் மௌனம் சாதிக்கிறார் என்றும் கேள்வி…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?