MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: டாஸ்மாக் கடைகள் மூடல்: தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: டாஸ்மாக் கடைகள் மூடல்: தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - டாஸ்மாக் கடைகள் மூடல்: தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகள் மூடல்: தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

Fernandez
Last updated: ஜூலை 27, 2026 3:04 மணி
Fernandez
Share
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிடுகிறார்
டாஸ்மாக் கடைகள் மூடல் தொடர்பாக தவெக அரசை விமர்சித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்.
SHARE

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, ஆட்சிக்கு வந்தவுடன் கோயில் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் உள்ள 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு இணங்க, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கடைகள் மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும், மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் குறித்த மர்மங்கள் நீடிப்பதாகவும், இது தொடர்பாக தவெக அரசு ஒரு வெள்ளையறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

தனது அறிக்கையில், "நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 717 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டோம் என ஜோசப் விஜய் தலைமையிலான அரசு தம்பட்டம் அடித்துக் கொள்கிறது. ஆனால், மூடப்பட்ட கடைகளின் முகவரிகள் மற்றும் அது தொடர்பான முக்கிய தகவல்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் இதுவரை வெளியிடப்படவில்லை. மூடப்பட்டதாகக் கூறப்படும் கடைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனவா என்ற கேள்விக்குக்கூட RTI-யிடம் இருந்து பதில் இல்லை. மேலும், விஜய் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு புதிய டாஸ்மாக் கடைகள் ஏதேனும் திறக்கப்பட்டுள்ளனவா என்ற கேள்விக்கான பதிலையும் தற்போதைய அரசு மென்று முழுங்குகிறது" என நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

"மொத்தத்தில், மூடப்பட்டதாகக் கூறப்படும் 717 டாஸ்மாக் கடைகள் பற்றி எது கேட்டாலும், 'அந்தந்த மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகவும்' என்ற ஒரே பதில் மட்டுமே RTI-யிடம் இருந்து கிடைக்கிறது. அந்தந்த மாவட்ட மேலாளரிடம் தரவுகள் இருக்குமாயின், அவற்றைச் சேகரித்து RTI மூலம் எளிதாக மக்கள் பார்வைக்கு வெளிப்படுத்துவதில் அரசுக்கு என்ன சிக்கல்?" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

"தவெக ஆட்சியில் இதுவரை மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் முழு விவரங்களையும், முகவரிகளையும், அங்கு பணிபுரிந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மாற்றுப் பணிகள் குறித்தும் ஒரு வெள்ளையறிக்கையை வெளியிட ஆளும் அரசு எதற்குத் தயங்குகிறது?" என்று நயினார் நாகேந்திரன் மேலும் வினவியுள்ளார்.

"உண்மையிலேயே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளனவா அல்லது ஆட்சிக்கு வந்த புதிதில் எதையாவது செய்து மக்களிடம் நற்பெயர் வாங்க வேண்டும் என்ற நோக்கில் தவெக அரசே இந்த புரளியைக் கிளப்பியதா?" போன்ற மக்களின் கேள்விகளுக்கு முதல்வர் உடனடியாகப் பதிலளிக்க வேண்டும் என்றும், "வெட்டி வசனமும், வீண் விளம்பரமும் இனி கதைக்காகாது" என்றும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, தனக்குக் கிடைத்த பதில்களின் விவரங்களையும் நயினார் நாகேந்திரன் தனது பதிவில் இணைத்துள்ளார். இவரைப் போன்றே பலரும் இந்த ஆவணத்தைக் குறிப்பிட்டு, மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் தொடர்பாக முழுமையான விவரங்களை வெளியிடாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த விவகாரம் தற்போது பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:BJPDMK GovtNainar NagesendranTamil NaduTasmac ShopsVIJAYடாஸ்மாக் கடைகள்தமிழ்நாடுதவெக அரசுநயினார் நாகேந்திரன்பாஜகமதுபான கடைகள்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article குற்றாலம் புலியருவியில் நீர்வரத்து இன்றி வறண்டு காணப்படும் காட்சி குற்றாலம் புலியருவி வறண்டது: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
Next Article கோத்தகிரி குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் கரடி கோத்தகிரி: குடியிருப்பு பகுதிக்குள் கரடி – மக்கள் பீதி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்லும் போக்குவரத்து சங்கத்தினர்

இ20 பெட்ரோலுக்கு எதிர்ப்பு: ஆக.4-ல் நாடாளுமன்றம் நோக்கி பேரணி

எத்தனால் கலந்த இ20 பெட்ரோல் விற்பனையை எதிர்த்து, ஆகஸ்ட் 4-ம் தேதி டெல்லியில்…

ஜூலை 27, 2026

ரயிலின் ஏசி கோச்சில் பூஜை: பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – ரயில்வே விசாரணை

ரயிலின் ஏசி கோச்சில் எண்ணெய் விளக்கு ஏற்றி…

ஜூலை 27, 2026

தர்மேந்திர பிரதான் ராஜினாமா: நாடாளுமன்றத்தில் உற்சாக வரவேற்பும், கடும் விமர்சனமும்

மத்திய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த…

ஜூலை 27, 2026

இந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல் சம்பாதிப்போர் 4 மடங்கு அதிகரிப்பு!

இந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும்…

ஜூலை 27, 2026

லிவ் இன் உறவு கலாச்சார சீரழிவு – மோகன் பகவத்

ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்…

ஜூலை 27, 2026

You Might Also Like

இந்தியா

பிரதமர் அறிவுரை மீறல்: பாஜக பிரமுகருக்கு முதல்வர் அதிரடி நோட்டீஸ்!

பிரதமர் மோடியின் எரிசக்தி சிக்கன வேண்டுகோளை மீறி மத்தியப் பிரதேசத்தில் பாஜக பிரமுகர் நடத்திய வாகன ஊர்வலம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் மோகன் யாதவ் விளக்கம்…

2 Min Read
இந்தியா

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது

காவிரி நீரைப் பகிர்ந்தளிப்பது தொடர்பாக, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 51-வது கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. தமிழகத்திற்குத் தண்ணீர் திறப்பு, மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்கப்படும்.

1 Min Read
குற்ற கும்பல் தலைவனாக மாறிய முன்னாள் காவலர் கார்த்தி
தமிழ்நாடு

போலீஸ் டூ ரவுடி: கார்த்தி கடத்தல் பின்னணி அம்பலம்

முன்னாள் காவலர் கார்த்தி, குற்றக் கும்பல் தலைவனாக மாறி தனசேகரை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்கின்றனர்
இந்தியா

நாடாளுமன்றத்தை நோக்கி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் பேரணி

நாடு முழுவதும் இருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் இன்று டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் குவிந்துள்ளனர். அங்கிருந்து நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?