MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தாய் கண்டித்ததால் மாணவி தற்கொலை: சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தாய் கண்டித்ததால் மாணவி தற்கொலை: சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்

தமிழ்நாடு

தாய் கண்டித்ததால் மாணவி தற்கொலை: சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்

Admin
Last updated: ஜூன் 21, 2026 10:38 காலை
Admin
Share
SHARE

சேலம் எடப்பாடி அருகே, தாய் கண்டித்ததால் மனமுடைந்த 18 வயது மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பூலாம்பட்டி காவல் துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம், இருப்பாளி கிராமத்தைச் சேர்ந்த சுசீலா, கணவர் வெங்கடாசலம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்ட நிலையில், மகன் அஜித் குமார் மற்றும் மகள் கௌசல்யா தேவி ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். கூலி வேலை செய்து குழந்தைகளை படிக்க வைத்து வந்துள்ளார்.

கௌசல்யா தேவி மேட்டூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். முதலாம் ஆண்டு தேர்வில் 10 பாடங்களில் தோல்வியடைந்ததாகக் கூறப்படுகிறது. படிப்பில் கவனம் செலுத்தாமல், எப்போதும் செல்போன் பயன்படுத்தியதால் தாய் சுசீலா அவரை அடிக்கடி கண்டித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன், அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்தியதால் தாய் சுசீலா அவரை கடுமையாக சாடியுள்ளார். ‘இனிமேல் செல்போன் பார்க்கக் கூடாது, ஒழுங்காகப் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்’ என்று எச்சரித்துள்ளார்.

தாயின் கண்டிப்பால் மனவேதனையடைந்த கௌசல்யா, கடந்த 15-ஆம் தேதி கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வந்ததும், வீட்டில் இருந்த விவசாய பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை கௌசல்யா தேவி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பூலாம்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Newsசெல்போன்சேலம்தாய் கண்டிப்புமாணவி தற்கொலை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி!
Next Article சமந்தா அம்ம ஆகிறாரா? ரசிகர்கள் வாழ்த்து மழை!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தின் அலுவலகம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு இந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

மும்பையில் கனமழையால் குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை மன்குர்ட் பகுதியில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு…

ஜூலை 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தமிழ்நாட்டைக் காக்கும் வலிமை திமுகவிடம் உள்ளது – ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகம் 'Dirty Politics' செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியைத் தக்கவைக்க முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.

2 Min Read
தமிழ்நாடு

ரஜினிகாந்தை சந்தித்த நயினார் நாகேந்திரன்: மோடி திட்டங்கள் குறித்த நூல்கள் வழங்கல்

நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்த நயினார் நாகேந்திரன், பிரதமர் மோடியின் கடந்த 12 ஆண்டுகால ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த நூல்களை வழங்கினார்.

1 Min Read
நடிகர் கமல்ஹாசன் மற்றும் அவரது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் லோகோ
தமிழ்நாடு

கமல்ஹாசன் நிறுவனத்தில் ரூ.38 லட்சம் மோசடி முயற்சி: சைபர் கிரைம் போலீசில் புகார்

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் ரூ.38 லட்சம் மோசடி செய்ய முயற்சி நடந்திருப்பதாக சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வட மாநில கும்பல் ஊழியர்களின்…

2 Min Read
தமிழ்நாடு

யூடியூப் பார்த்து பிரசவம்: ரத்தப்போக்கால் தாய் பலி – திருப்பூர் சோகம்

திருப்பூரில் யூடியூப் பார்த்து வீட்டில் பிரசவம் பார்த்ததில் தாய் சசிகலா (32) ரத்தப்போக்கு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். கர்ப்ப காலத்தில் பரிசோதனைக்கு செல்ல மறுத்த அவர், யூடியூப்…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?