MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஆந்திராவில் 4 விமான நிலையங்களில் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் விரைவில்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஆந்திராவில் 4 விமான நிலையங்களில் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் விரைவில்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - ஆந்திராவில் 4 விமான நிலையங்களில் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் விரைவில்

இந்தியா

ஆந்திராவில் 4 விமான நிலையங்களில் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் விரைவில்

Admin
Last updated: மே 26, 2026 9:35 காலை
Admin
Share
SHARE

திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு வசதியாக, ஆந்திராவில் உள்ள 4 விமான நிலையங்களில் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் விற்பனை விரைவில் தொடங்கப்பட உள்ளது. திருப்பதி ஏழுமலையானை ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் ரூ.10,500 கட்டணம் செலுத்தி தரிசிக்க பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒரு நபர் ரூ.10,000 நன்கொடை அளித்தும், விஐபி பிரேக் தரிசனத்திற்காக கூடுதலாக ரூ.500 செலுத்தியும் இந்த தரிசனத்தைப் பெற முடியும்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியின் போது அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் வரும் நிதி, எஸ்.சி, எஸ்.டி, பி.சி பிரிவினர் வசிக்கும் பகுதிகளில் இந்து தர்ம பிரச்சாரத் துறையின் கீழ் இந்து கோயில்களைக் கட்ட பயன்படுத்தப்படுகிறது. அதன்படி, தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் கட்டப்பட்டு வருகின்றன. பக்தர்களிடையே இதற்கு பெரும் ஆதரவு இருப்பதால், திருமலையில் 800 ஆன்லைன் டிக்கெட்டுகளும், திருப்பதி விமான நிலையத்தில் தினமும் 200 டிக்கெட்டுகளும் வழங்கப்படுகின்றன.

ஆன்லைனில் வழங்கப்படும் 800 டிக்கெட்டுகள் அன்றைய தினம் காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டு, அதேநாள் மாலை 4.30 மணிக்கு சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றன. இதனால் ஒரே நாளில் சுவாமியை தரிசித்து விடலாம் என்ற எண்ணத்தில் பலர் இந்த டிக்கெட்டுகளை பதிவு செய்ய முன்வருகின்றனர். இதனால் இதற்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகளும் ஆன்லைனில் வெறும் 2 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன.

மேலும், 3 மாதங்களுக்கு முன்பே தினமும் 500 டிக்கெட்டுகள் வீதம் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது. இதுவும் உடனடியாக விற்றுத் தீர்ந்துவிடுகிறது. இதனால், திருப்பதி விமான நிலையத்தில் வழங்கப்படும் தினசரி 200 டிக்கெட்டுகளைப் பிரித்து, திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம், ராஜமுந்திரி ஆகிய விமான நிலையங்களில் தலா 50 டிக்கெட்டுகள் தினசரி வழங்க தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது. இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Srivani DarshanTirupatiஆந்திராதிருப்பதிதிருமலைவிமான நிலையம்ஸ்ரீவாணி தரிசனம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இந்தியாவில் தொழில்முனைவோர் பெருக்கம்: நிதி ஆயோக் அதிகாரி தகவல்
Next Article 12 பவுன் நகை மோசடி: கூட்டுறவு வங்கி ஊழியர்கள் கைது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்

எல்லைப் பிரச்சனை: தீர்வு காண சீனா செல்லும் அஜித் தோவல்

எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்…

ஆகஸ்ட் 23, 2026

திருப்பதி: ஓட்டல்களில் காலிபிளவர் உணவுகளுக்கு தற்காலிக தடை

திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், காலிபிளவரால் தயாரிக்கப்படும் அனைத்து…

ஆகஸ்ட் 23, 2026

அரைகுறை ஆடையுடன் மாணவிகளுடன் குளித்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

மாவட்ட நிர்வாகத்தின் தடை உத்தரவை மீறி, அரசு…

ஆகஸ்ட் 23, 2026

சாலையில் படுத்து ரீல்ஸ்: இளம்பெண் வீடியோவால் பரபரப்பு

சாலையில் படுத்து ரீல்ஸ் வீடியோ எடுத்த இளம்…

ஆகஸ்ட் 23, 2026

ரூ.200 கொடுக்க மறுத்ததால் திருநங்கை கொலை: வாலிபர் கைது

சென்னை: ரூபாய் 200 கொடுக்க மறுத்ததால் தேவி…

ஆகஸ்ட் 23, 2026

You Might Also Like

பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றுகிறார்
இந்தியா

கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா வரலாற்றுச் சாதனைகள்: பிரதமர் மோடி

டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி, கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா பாதுகாப்பு, மின்னணுப் பொருட்கள், ரயில் உற்பத்தி, இணையப் பயன்பாடு, டிஜிட்டல்…

2 Min Read
அபிஜித் திப்​கே​யின் தாய் அனிதா
இந்தியா

இளம் வயது சாதனை குறித்து அபிஜித் திப்​கே​யின் தாய் அனிதா பெருமிதம்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் திப்​கே​யின் தாய் அனிதா, தனது மகன் இளம் வயதில் மிகப்​பெரிய சாதனை செய்துள்ளதாக பெருமிதம் தெரி​வித்​தார்.

1 Min Read
மதுபோதையில் அரசு பேருந்தை ஓட்டிச் செல்லும் ஜேசிபி ஆபரேட்டர் வெங்கையா
இந்தியா

மதுபோதையில் அரசு பேருந்து கடத்தல்: 21 கிமீ ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஜேசிபி ஆபரேட்டர்

செங்கல்பட்டு அருகே, மதுபோதையில் அரசு பேருந்தை கடத்திச் சென்ற ஜேசிபி ஆபரேட்டர் வெங்கையா, 21 கிமீ தூரம் பேருந்தை ஓட்டி சுங்கச்சாவடியில் மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம்…

2 Min Read
மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பண்டி சாய் பகீரத்
இந்தியா

போக்சோ வழக்கு: மத்திய இணை அமைச்சர் மகனுக்கு நிபந்தனை ஜாமீன்

போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பண்டி சாய் பகீரத்-துக்கு, தெலங்கானா உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?