MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர்: பிசிசிஐ அறிவிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - விளையாட்டு - இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர்: பிசிசிஐ அறிவிப்பு

விளையாட்டு

இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர்: பிசிசிஐ அறிவிப்பு

Admin
Last updated: ஜூன் 6, 2026 12:24 மணி
Admin
Share
SHARE

மும்பை: இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட உள்ளார். இதற்கான ஒப்புதலை இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) வழங்கியுள்ளது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களுக்கான இந்திய அணியைத் தேர்வு செய்ய அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவினர் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் கூடினர். இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ஸ்ரேயாஸ் ஐயருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதனால், அவர் புதிய டி20 கேப்டனாக அறிவிக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு ஸ்ரேயாஸ் ஐயரின் பெயரை முன்மொழிந்தனர். பிசிசிஐயின் உயர்மட்ட நிர்வாகிகள் அதை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்துள்ளனர். சமீபத்தில் இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் சூர்யகுமார் யாதவ், கேப்டன் பதவியை இழப்பது மட்டுமின்றி, இந்திய அணியிலிருந்தும் நீக்கப்பட உள்ளார். கடந்த சில மாதங்களாக அவரது பேட்டிங் மிகவும் சுமாராக இருந்ததால், தேர்வுக்குழுவினர் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளனர். ஐபிஎல் 2026 தொடர் முடியும் வரை காத்திருந்த தேர்வுக்குழுவினர், தற்போது இந்த இறுதி முடிவை எடுத்துள்ளனர். இந்த முடிவு சூர்யகுமார் யாதவிடம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுவிட்டதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த 2023 டிசம்பர் மாதத்திற்குப் பிறகு இந்திய அணிக்காக எந்தவொரு டி20 போட்டியிலும் விளையாடவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் அணியில் இடம் பெற்றிருந்தாலும், விளையாடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 2024 இல் சாம்பியனாக்கியும், 2025 இல் பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றும் தனது சிறந்த தலைமைப் பண்பை அவர் நிரூபித்துள்ளார்.

அடுத்த சில நாட்களில் தொடங்க உள்ள இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் தனது கேப்டன்சி பயணத்தைத் தொடங்குகிறார். இந்திய அணி அயர்லாந்தில் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், அதனைத் தொடர்ந்து இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாலைக்குள் பிசிசிஐ தரப்பிலிருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:BCCIShreyas IyerT20 Captainஇந்திய கிரிக்கெட்டி20 கேப்டன்பிசிசிஐஸ்ரேயாஸ் ஐயர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தவெகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்: இபிஎஸ் ஷாக்!
Next Article அண்ணாமலை புதிய இயக்கம்: த.வெ.க. வளர்ச்சிக்கு சவாலா?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மனைவி ஒருவர் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் தொடர்பான செய்தி

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

You Might Also Like

விளையாட்டு

ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்குத் திரும்பினார்: குல்தீப் யாதவ் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மாற்றம்

ஐபிஎல் 2026 சீசன் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய ரிஷப் பண்ட், தனது பழைய அணியான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்குத்…

2 Min Read
விளையாட்டு

9 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் டெஸ்ட் போட்டி: இந்தியா vs இலங்கை அட்டவணை அறிவிப்பு

9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. ஆகஸ்ட் மாதம் நடைபெறும் இந்த டெஸ்ட் தொடருக்கான அட்டவணையை இலங்கை கிரிக்கெட் வாரியம்…

2 Min Read
விளையாட்டு

IPL 2026: விராட் கோலி மாபெரும் சாதனை படைக்க வாய்ப்பு.. மும்பை இந்தியன்ஸ்-க்கு எதிராக வரலாறு

பெங்களூரு: ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி வீரர் விராட் கோலி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 1000 ரன்கள் எடுக்க இன்னும் 28 ரன்களே தேவை என்ற நிலை…

1 Min Read
விளையாட்டு

ரோஹித் சர்மா ஓய்வுக்குப் பின் ஜெய்ஸ்வால் தான் ஓப்பனர்: சேவாக் கணிப்பு

ரோஹித் சர்மா ஓய்வுக்குப் பிறகு ஜெய்ஸ்வால் இந்திய ஒருநாள் அணியின் துவக்க வீரராக வருவார் என வீரேந்தர் சேவாக் கணித்துள்ளார். மனோஜ் திவாரியும் இக்கருத்தை ஆதரித்துள்ளார்.

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?