MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தெய்வத்தை கிண்டல் செய்த விவகாரம்: சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்பு கோரிய ரன்வீர்சிங்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தெய்வத்தை கிண்டல் செய்த விவகாரம்: சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்பு கோரிய ரன்வீர்சிங்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - தெய்வத்தை கிண்டல் செய்த விவகாரம்: சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்பு கோரிய ரன்வீர்சிங்

சினிமா

தெய்வத்தை கிண்டல் செய்த விவகாரம்: சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்பு கோரிய ரன்வீர்சிங்

Admin
Last updated: மே 27, 2026 8:25 காலை
Admin
Share
SHARE

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில், பாலிவுட் நடிகர் ரன்வீர்சிங், 'காந்தாரா' படத்தில் வரும் 'தெய்வா' கடவுளைப் போல் முகபாவனைகளை கிண்டலாக செய்து, அவர் ஒரு பேய் என்று விமர்சித்தார். இது துளு மொழி பேசும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றத்தில், நடிகர் ரன்வீர்சிங் தனது செயலுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக மனு தாக்கல் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அவருக்கு எதிரான நடவடிக்கைகளை ரத்து செய்தது. மேலும், தெய்வா கடவுள் மற்றும் கர்நாடக மக்களின் ஆன்மிக நம்பிக்கை குறித்து அறிய மைசூரு சாமுண்டி மலைக்கு செல்லவும் உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவின் பேரில், நடிகர் ரன்வீர்சிங் நேற்று மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலுக்குச் சென்றார். அங்கு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். அப்போது, தான் தெய்வா கடவுளை அவதூறாக விமர்சிக்கவில்லை என்றும், தனது செயலுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் வேண்டினார்.

கோவிலின் தலைமை அர்ச்சகர் அவருக்கு பிரசாதம் வழங்கினார். அதை பெற்றுக்கொண்ட ரன்வீர்சிங், அம்மன் முன்பு அமர்ந்து சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ரன்வீர்சிங் நடிப்பில் வெளியான 'துரந்தர்' மற்றும் 'துரந்தர்-2' திரைப்படங்கள் உலகளவில் சுமார் ரூ.4 ஆயிரம் கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Ranveer Singhகாந்தாராசாமுண்டீஸ்வரி அம்மன்தெய்வாமன்னிப்புரன்வீர்சிங்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல் 2026: ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு 5வது முறை தகுதி; குஜராத் டைட்டன்ஸ் தோல்வி
Next Article கோவை சிறுமி கொலை: குற்றப்பத்திரிகை தயாரிப்பில் போலீஸ் தீவிரம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கைது செய்யப்பட்ட யூடியூபர் துருவ் ராத்தி

யூடியூபர் துருவ் ராத்தி டெல்லியில் கைது

டெல்லியில் சிஜேபி போராட்டம் நடைபெற்ற நிலையில், யூடியூபர் துருவ் ராத்தி கைது செய்யப்பட்டுள்ளார்.…

அக்டோபர் 11, 2026

சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே உள்ளிட்டோர் விடுவிப்பு

சிஜேபி கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே, நிர்வாகிகள்…

அக்டோபர் 11, 2026

காங்கிரஸ் விலகல்: சிஜேபி போராட்டத்தில் ராகுல் காந்தி ஏன் பங்கேற்கவில்லை?

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி…

அக்டோபர் 11, 2026

விமானத்தில் 3 பேர் கைது: பெண் போலீஸ் ஏன் பயன்படுத்தப்பட்டனர்?

டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்தில்…

அக்டோபர் 11, 2026

டெல்லி போலீஸ் அபிஜித் தீப்கேவை கடத்தியது: சிஜேபி குற்றச்சாட்டு

சவுரவ் தாஸ் மற்றும் அபிஜித் தீப்கே ஆகியோரை…

அக்டோபர் 10, 2026

You Might Also Like

சினிமா

65 ஆண்டுகள் ஆனாலும் ‘பாசமலர்’ வாடாத மலர்!

1961ல் வெளியாகி 65 ஆண்டுகளை நிறைவு செய்த 'பாசமலர்' திரைப்படம், அண்ணன் - தங்கை பாசத்தை சித்தரித்து இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. சிவாஜி,…

2 Min Read
சினிமா

சூர்யாவின் மாஸ் கம்பேக்: ‘கருப்பு’ அதிரடி ஆக்‌ஷன் பட விமர்சனம்!

சூர்யா நடிப்பில் வெளியான 'கருப்பு' படத்தின் அதிரடி ஆக்‌ஷன் விமர்சனம்! நீதித்துறையில் நடக்கும் ஊழல்களுக்கு எதிராக ஒரு கடவுளின் போராட்டம்.

2 Min Read
ஆர்த்தி ரவி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பதிவு
சினிமா

ரவி மோகனின் முன்னாள் மனைவி ஆர்த்தி ரவியின் வைரல் பதிவு!

தொழிலதிபர் ரவி மோகனின் முன்னாள் மனைவி ஆர்த்தி ரவி, இன்ஸ்டாகிராமில் 'அவர்களை விரட்டி அடியுங்கள்' என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

1 Min Read
பிக் பாஸ் தனுஜா கதாநாயகியாக அறிமுகமாகும் புதிய ஹாரர் திரில்லர் படத்தின் அறிவிப்பு
சினிமா

பிக் பாஸ் தனுஜா ஹீரோயினாக அறிமுகம்: புதிய ஹாரர் திரில்லர் பட அறிவிப்பு

பிக் பாஸ் தனுஜா புட்டசாமி, கிரண் அப்பாவரம் தயாரிக்கும் கே.ஏ புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் புதிய ஹாரர் திரில்லர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அனுஷ் கோரக் இயக்குகிறார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?