MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: 65 ஆண்டுகள் ஆனாலும் ‘பாசமலர்’ வாடாத மலர்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > சினிமா > 65 ஆண்டுகள் ஆனாலும் ‘பாசமலர்’ வாடாத மலர்!
சினிமா

65 ஆண்டுகள் ஆனாலும் ‘பாசமலர்’ வாடாத மலர்!

Admin
Last updated: May 27, 2026 1:26 pm
Admin
Share
SHARE

1961 ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதி வெளியாகி, அண்ணன் – தங்கை பாசத்தை மையமாக வைத்து ரசிகர்களின் மனங்களை வென்ற 'பாசமலர்' திரைப்படம், திரைக்கு வந்து 65 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. சிவாஜி கணேசன் – சாவித்திரி அண்ணன் தங்கையாக வாழ்ந்த இந்த படத்தில், சாவித்திரியின் கணவராக ஜெமினி கணேசன் நடித்திருந்தார். அன்றைய காலகட்டத்தில், சாவித்திரி – ஜெமினி கணேசன் ஜோடி நிஜ வாழ்க்கையிலும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். பிரபல இயக்குனர் பீம்சிங் இயக்கத்தில் வெளியான 'பாசமலர்' திரைப்படம் 3 மணி நேரம் 17 நிமிடங்கள் ஓடியது. விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைத்த இந்தப் படத்தில் இடம்பெற்ற 'வாராயென் தோழி..', 'மலர்ந்தும் மலராத..', 'எங்களுக்கும் காலம் வரும்..' போன்ற பாடல்கள் இன்றும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளன.

'பாசமலர்' திரைப்படம் வெள்ளி விழா கண்டதுடன், 2013 ஆம் ஆண்டில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு, தமிழகத்தில் 70 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. பல திரையரங்குகளில் ஒரு மாதம் வரை ஓடி சாதனை படைத்தது. 50 ஆண்டுகளுக்கு முன்பு படத்தைப் பார்த்து கண்ணீர் சிந்திய அதே ரசிகர்கள், மீண்டும் திரையரங்குகளில் அதே உணர்வுகளை அனுபவித்தனர். இதுவே, 'பாசமலர்' திரைப்படத்தை காலத்தால் அழியாத காவியமாக நிலைநிறுத்தியது. அண்ணன் – தங்கை பாசத்தையும், எந்தச் சூழ்நிலையிலும் அறுபடாத பாசப்பிணைப்பையும் சித்தரித்த இந்தப் படத்திற்கு, திரைத்துறையில் ஒரு உன்னதமான இடம் வழங்கப்பட்டது. கிராமங்களில் இருந்து மக்கள் மாட்டு வண்டிகளில் பல மைல்கள் பயணித்து குடும்பத்துடன் வந்து 'பாசமலர்' படத்தைப் பார்த்தனர்.

இளமையும், எளிமையும், இலக்கிய நயமும் கொண்ட வசனங்களை 24 வயதே ஆன ஆரூர்தாஸ் எழுதியிருந்தார். படம் வெளியான முதல் நாளில், மாறுவேடத்தில் திரையரங்குக்கு சென்ற நடிகை சாவித்திரி, பெண்களுடன் அமர்ந்து படத்தை பார்த்தார். படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பெண்கள், 'பிறந்தால் இப்படியொரு அண்ணனுக்கு தங்கையாக பிறக்க வேண்டும்' என்று பேசிக்கொண்டிருந்ததை கேட்டு கண்கலங்கிய சாவித்திரி, 'சிவாஜியின் தங்கையாக நான் நிஜத்தில் பிறக்காவிட்டாலும், அவருடைய தங்கையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன்' என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

'பாசமலர்' வெளியீட்டிற்கு முன்பாக, 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படப்பிடிப்பில் இருந்த சிவாஜி கணேசன், ஜெமினி கணேசனை தொடர்பு கொண்டு, படத்தில் வெள்ளையத்தேவன் வேடத்தில் நடித்துக் கொடுக்க அழைத்தார். ஜெமினி கணேசன் தயக்கம் காட்டியபோது, சிவாஜி உடனடியாக சாவித்திரிக்கு போன் செய்து, 'தங்கச்சி மாப்ள தயங்குறான்மா.. அவர் நடிச்சா அற்புதமா இருக்கும்.. புத்தி சொல்லி அனுப்பி வை.. இதுக்கப்புறம் நான் போன் பண்ண மாட்டேன்' என்று கூறிவிட்டார். சிவாஜியை அண்ணனாகவே ஏற்றுக்கொண்ட சாவித்திரி, உடனடியாக தன் கணவர் ஜெமினி கணேசனை படப்பிடிப்புக்கு அனுப்பி வைத்தார். இந்த அண்ணன் – தங்கை பாசப் பிணைப்பின் காரணமாகவே, 65 ஆண்டுகள் கடந்தும் 'பாசமலர்' இன்றைக்கும் அனைவரது மனதிலும் வாடாத மலராக நிலைத்து நிற்கிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:65th AnniversaryTamil Cinemaசாவித்திரிசிவாஜி கணேசன்பாசமலர்ஜெமினி கணேசன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தோனி ஓய்வு பெற நேரம்: ஸ்டெய்ன் கருத்து
Next Article சிறப்பு திருத்தம்: தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு – உச்ச நீதிமன்றம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக டி.கே.சிவகுமார் புதிய முதல்வராக…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா

கர்நாடகாவில் முதல்வர் பதவி மாற்றம் குறித்த இழுபறிக்கு…

May 28, 2026

You Might Also Like

சினிமா

மஞ்சு வாரியாரின் ‘ஹேப்பி லூப்’ பட பூஜை: புதிய பட அறிவிப்பு!

மலையாள திரையுலகின் முன்னணி நடிகையான மஞ்சு வாரியார், 'ஹேப்பி லூப்' என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் பூஜை நேற்று (மே 27) சிறப்பாக…

1 Min Read
சினிமா

கருப்பு: சூர்யாவின் மாஸ், பாலாஜியின் மிரட்டல் – ஒரு பார்வை!

சூர்யாவின் அதிரடி, ஆர்.ஜே.பாலாஜியின் மிரட்டல் நடிப்பில் உருவான 'கருப்பு' படத்தின் விமர்சனம்.

2 Min Read
சினிமா

‘சிலந்தி-2’.. மீண்டும் இணையும் மாளவிகா மேனன் – ஆதிராஜன் கூட்டணி

2008 ஆம் ஆண்டு வெளியான சிலந்தி படத்தின் பாகம் இரண்டை ‘சிலந்தி-2’ என இயக்குனர் ஆதிராஜன் இயக்கவுள்ளார். ஆதிராஜன் கூறுகையில், ‘சிலந்தி-2’ படம் எனக்கு வாய்த்த 5…

1 Min Read
சினிமா

“மக்கள் நல அரசினை வழிநடத்துவீர்கள் என்று நம்புகிறேன்” – பா.ரஞ்சித்

தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள விஜய், மக்கள் நல அரசினை வழிநடத்துவார் என்று நம்புவதாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார் சி. ஜோசப் விஜய். இந்த…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?