MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பத்மினி ஏகாதசி: குழந்தை பாக்கியம் தரும் விரதம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பத்மினி ஏகாதசி: குழந்தை பாக்கியம் தரும் விரதம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - ஆன்மிகம் - பத்மினி ஏகாதசி: குழந்தை பாக்கியம் தரும் விரதம்

ஆன்மிகம்

பத்மினி ஏகாதசி: குழந்தை பாக்கியம் தரும் விரதம்

Admin
Last updated: மே 26, 2026 10:56 மணி
Admin
Share
SHARE

பெருமாளின் அருளைப் பெற உகந்த விரதங்களில் முதன்மையானதாகக் கருதப்படும் ஏகாதசி விரதம், செல்வச் செழிப்பையும் வாழ்விற்குப் பின் மோட்சத்தையும் அருளும் என்பது ஐதீகம். மாதத்திற்கு இரண்டு முறை வரும் ஏகாதசிகளில், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அதிக மாதத்தில் வரும் ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதற்கு பத்மினி ஏகாதசி என்று பெயர். கமலா ஏகாதசி, அதிக ஏகாதசி, புருஷோத்தம ஏகாதசி போன்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசியன்று விரதம் இருந்து பகவானை வழிபட்டால், அதிக புண்ணியங்கள் கிடைக்கும்.

பத்மினி ஏகாதசியில் விரதம் இருப்பது, பல ஆண்டுகள் தவம் மற்றும் யாகங்கள் செய்ததற்கு இணையான பலனைத் தரும் என பத்ம புராணம் கூறுகிறது. ஸ்கந்த புராணத்தின்படி, அஸ்வமேத யாகம் செய்ததற்கு இணையான பலனை இந்த விரதம் அளிக்கும். இது பாவங்களை நீக்குவதுடன், முக்தியையும் அருளக் கூடியது. குறிப்பாக, குழந்தைப்பேறு வேண்டி விரதம் இருப்பவர்களுக்கு இது மிக அற்புதமான பலனைத் தரக்கூடிய நாளாகும்.

இந்த விரதத்தின் மகிமைகள் குறித்து பகவான் கிருஷ்ணர் யுதிஷ்டிரரிடம் விளக்கமாக கூறியுள்ளார். 'இந்த ஏகாதசி மற்ற ஏகாதசிகள் போன்று கிடையாது. பிரம்மதேவரால்கூட இதன் சிறப்பை முழுமையாக விவரிக்க முடியாது. இந்த ஏகாதசி விரதம் கடைப்பிடிக்கும் பக்தர்களுக்கு எனது மிகச்சிறந்த கருணை நிச்சயம் கிடைக்கும். அவர்கள் எனது முழுமையான கருணை மற்றும் திருவருளுக்கு பாத்திரமாகிறார்கள்' என கிருஷ்ணர் தெரிவித்தார்.

விரத முறைப்படி, பக்தர்கள் முழு விரதம் இருக்க வேண்டும். தானியங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். முழு விரதம் இருக்க முடியாதவர்கள், பசும்பால் மற்றும் தண்ணீர் அருந்தி விரதத்தை கடைப்பிடிக்கலாம். முந்தைய நாளான தசமி தினத்தில் இருந்தே விரதத்தைத் தொடங்க வேண்டும். தசமி அன்று சூரிய அஸ்தமனத்திற்கு முன்னதாகவே உணவை முடித்துவிட வேண்டும். மறுநாள் ஏகாதசியன்று அதிகாலை நீராடி, பூஜை செய்ய வேண்டும். துவாதசியன்று காலையில் நீராடி, நிவேதனம் செய்து பிரசாதம் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என கிருஷ்ணர் வழிகாட்டுகிறார்.

பத்மினி ஏகாதசியின் சிறப்பு குறித்து புலஸ்திய முனிவர், நாரதருக்கு கூறியதையும் கிருஷ்ணர் நினைவுகூர்ந்தார். சக்தி வாய்ந்த ராவணன், மன்னர் கார்த்தவீரியார்ஜுனனிடம் தோற்றதற்குக் காரணம், கார்த்தவீரியாஜுனனின் தாயான பத்மினி தேவி, அதிக மாதத்தில் ஏகாதசி விரதம் இருந்து பகவானை வழிபட்டதே என்று புலஸ்திய முனிவர் விளக்கினார். பத்மினி தேவி ஏகாதசி விரதம் இருந்து பகவானின் அருளால் பெற்றெடுத்த குழந்தை என்பதால் கார்த்தவீரியாஜுனன் அதிக சக்தி கொண்டிருந்தான். இதனால், பக்தி மட்டுமல்ல பௌதிக விஷயங்களிலும் வெற்றியை கொடுக்கக்கூடிய பத்மினி ஏகாதசி நாளை (27.5.2026) கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து பகவானை மனதார வழிபட்டால், பகவானின் அருள் கிடைப்பதுடன், பக்தியில் உள்ள தடைகளும் நீங்கும்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Ekadashi FastingPadmini Ekadashiஏகாதசி விரதம்பத்மினி ஏகாதசிபெருமாள் வழிபாடு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல் 2026: ரஜத்தின் அதிரடி சதம்! ஆர்சிபி மெகா ஸ்கோர்!
Next Article மதுரை உசிலம்பட்டியில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவையைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்…

அக்டோபர் 7, 2026

பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரி…

அக்டோபர் 7, 2026

விமானப் படை புதிய தளபதி: அசுதோஷ் தீட்சித் நியமனம்

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஏர்…

அக்டோபர் 7, 2026

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை: 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை தொடர்பாக, வரும்…

அக்டோபர் 7, 2026

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின்…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

கோயில்களில் செல்போன் தடை குறித்து ஆலோசனை நடத்தும் அறநிலையத்துறை அதிகாரிகள்
ஆன்மிகம்

கோயில்களில் செல்போன் தடை: பக்தர்கள் எதிர்ப்பால் குழப்பத்தில் அறநிலையத்துறை

தமிழக முக்கிய கோயில்களில் செல்போன் தடைக்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், திட்டத்தை தொடர்வதா அல்லது கைவிடுவதா என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.

2 Min Read
ஸ்ரீ ஆண்டாள் தாயார் துவாரகை கண்ணன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தல்
ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் ஆடிப்பூர உற்சவம்: ஆண்டாள் அருள்பாலிப்பு

ஸ்ரீரங்கம் ஆடிப்பூர உற்சவத்தின் ஐந்தாம் நாளில், துவாரகை கண்ணன், சோலைமலை பெருமாள் மற்றும் பரகால நாயகி திருக்கோலங்களில் ஆண்டாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

2 Min Read
ஆன்மிகம்

குரு பெயர்ச்சி: கடக ராசிக்கு உச்சம் பெறும் குரு – யாருக்கு யோகம்?

கடக ராசிக்கு உச்சம் பெறும் குரு பகவான், மே 26, 2026 அன்று பெயர்ச்சி அடைகிறார். இது பல ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை அள்ளித் தரும்.

2 Min Read
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பவித்ரோற்சவத்தின் போது புனித மாலைகள் சமர்ப்பிக்கப்படும் காட்சி
ஆன்மிகம்

திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பவித்ரோற்சவம்: சிறப்பு பூஜைகள் நடைபெற்றன

திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நடைபெற்றது. மூலவர், உற்சவர்களுக்கு புனித பவித்ர மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டு, வேத சடங்குகள், ஹோமங்கள், ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற்றன.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?