திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மற்றும் அவரது 5 வயது மகன் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காளிமுத்து என்பவர் தனது மூத்த மகன் சின்னராஜ் (12) மற்றும் இளைய மகன் ஜெயராஜ் (5) ஆகியோருடன் நெல்லிக்காய் பறிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு கும்பல் காரில் வந்து காளிமுத்துவின் வாகனம் மீது மோதி அவரை கீழே தள்ளிவிட்டு சரமாரியாக வெட்டியுள்ளது. இதில், காளிமுத்துவின் தலையை மட்டும் நெடுஞ்சாலையின் நடுவே வைத்துவிட்டு அந்தக் கும்பல் தப்பியோடியது. இந்த கொடூர சம்பவத்தில் 5 வயது சிறுவன் ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். மேலும், மூத்த மகன் சின்னதுரை பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன்பு பெருமாள் பாண்டியன் என்பவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழி தீர்க்கும் வகையில் இந்த கொலை நடந்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக காளிமுத்து சேர்க்கப்பட்டிருந்தார். தற்போது, காளிமுத்துவின் தலையை அறுத்து எடுத்துச் சென்ற கும்பல், மூலச்சி ஊருக்குள் வைத்துச் சென்றது. இந்த கொடூர கொலை கும்பலை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
You Might Also Like
போலீஸ் என மிரட்டி நகை, பணம் பறித்த இருவர் கைது
சென்னை கோடம்பாக்கத்தில் தனியாக வசித்த பெண்ணிடம், போலீஸ் என மிரட்டி நகை மற்றும் பணத்தை பறித்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
1 Min Read
காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞர் கைது
கோவையில், காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணின் வீட்டிற்குள் பெட்ரோல் குண்டுகளை வீசிய இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.…
1 Min Read
ரூ. 2 கோடி காப்பீட்டு பணத்திற்காக கணவனை கொன்ற மனைவி
ரூ. 2 கோடி காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக, போலியான ஆவணங்களைத் தயாரித்து, தனது கணவனை விஷ ஊசி போட்டு கொலை செய்த மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை…
1 Min Read
40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
தமிழ்நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது. சென்னை, தூத்துக்குடி, நெல்லை, புதுக்கோட்டை, திருச்செங்கோடு, திருப்பத்தூர், மயிலாடுதுறை…
1 Min Read
