MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நீட் தேர்வு ரத்து: ஜூன் 21-ல் மறுதேர்வு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நீட் தேர்வு ரத்து: ஜூன் 21-ல் மறுதேர்வு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - கல்வி & வேலைவாய்ப்பு - நீட் தேர்வு ரத்து: ஜூன் 21-ல் மறுதேர்வு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

கல்வி & வேலைவாய்ப்பு

நீட் தேர்வு ரத்து: ஜூன் 21-ல் மறுதேர்வு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Admin
Last updated: மே 15, 2026 12:37 மணி
Admin
Share
SHARE

மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 5-ந்தேதி நடைபெற்ற தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு புகார்கள் எழுந்த நிலையில், சுமார் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய இந்தத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை (NTA) அதிரடியாக அறிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் 'கெஸ் பேப்பர்' என்ற பெயரில் வினாத்தாள் கசிந்து, அதில் இருந்து சுமார் 600 மதிப்பெண்களுக்கு மேல் வினாக்கள் ஒத்துப் போனதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகாரைத் தொடர்ந்து, தேசிய தேர்வு முகமை உடனடியாக விசாரணையைத் தொடங்கியது. மத்திய முகமைகளுக்குத் தேவையான ஆவணங்களை வழங்கி, இந்த விசாரணையை தீவிரப்படுத்தியிருந்தது.

இந்நிலையில், தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நீட் மறுதேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூன் 21-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நீட் மறுதேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை (NTA) முடிவு செய்துள்ளது. இந்திய அரசின் ஒப்புதலுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புமாறும், சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது. நீட் தேர்வு தொடர்பான அனைத்து அறிவிப்புகளும் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ தகவல் வழிமுறைகள் மூலமாக மட்டுமே வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:National Testing AgencyNEET ExamNTATamil Nadu Studentsநீட் தேர்வுமருத்துவ படிப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article டி20 உலகக் கோப்பை: சூர்யகுமார் யாதவ் ஃபார்ம், சஞ்சு சாம்சன் கேப்டன்சி – ரவி சாஸ்திரி கருத்து
Next Article சாலையில் புதைந்த அடிபம்பு: சேத்தியாதோப்பில் பொதுமக்கள் அதிருப்தி!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

பெங்களூரு: குழந்தையை கொன்ற தந்தை – பரபரப்பு தகவல்

பெங்களூருவில் 11 மாத குழந்தையை கோபத்தில் தரையில்…

ஜூலை 7, 2026

மும்பையில் 7 அடி முதலை: கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்து பீதி

மும்பையில் கனமழையால் போவாய் ஏரியிலிருந்து 7 அடி…

ஜூலை 7, 2026

You Might Also Like

இந்தியா

நீட் தேர்வு நாளை: மாணவர்கள் மறக்கக்கூடாத ஆவணங்கள்!

நாளை நடைபெறும் நீட் தேர்வுக்கு மாணவர்கள் கொண்டு வர வேண்டிய முக்கிய ஆவணங்கள் குறித்த அரசு அறிவிப்பு. தேர்வு மைய நுழைவு நேரம் மற்றும் முக்கிய விதிமுறைகள்.

1 Min Read
தமிழ்நாடு

மும்மொழி திட்டத்தை ஏற்க கூடாது: வைகோ வலியுறுத்தல்!

மும்மொழி திட்டத்தை தமிழக அரசு ஏற்கக் கூடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வு விவகாரம் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.

1 Min Read
அரசியல்

த.வெ.க அமைச்சரவை: ஆ.ராசா கடும் விமர்சனம்

திமுக எம்.பி ஆ.ராசா, த.வெ.க அமைச்சரவையில் இடம் கொடுத்தவர்களையும், அமைச்சர்களானவர்களையும் கடுமையாக விமர்சித்துள்ளார். முதல்வருக்கு தைரியம் இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

1 Min Read
இந்தியா

நீட் தேர்வு ரத்து விரக்தியில் மாணவி தற்கொலை: கலபுராகியில் சோகம்

நீட் தேர்வு ரத்து மற்றும் மறுதேர்வு அறிவிப்பால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி பாக்யஸ்ரீ, கர்நாடக மாநிலம் கலபுராகியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீசார் விசாரணை நடத்தி…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?