MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மும்பையில் கனமழை: ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மும்பையில் கனமழை: ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மும்பையில் கனமழை: ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்!

தமிழ்நாடு

மும்பையில் கனமழை: ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்!

Admin
Last updated: ஜூலை 6, 2026 9:31 காலை
Admin
Share
மும்பையில் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட சாலைகள்
மும்பையில் கனமழை காரணமாக வெள்ளக்காடாக மாறிய சாலைகள்
SHARE

மஹாராஷ்டிர மாநிலத்தின் முக்கிய நகரமான மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தானே, ராய்கட், பால்கர் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொட்டித் தீர்த்த கனமழையால், சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழையின் காரணமாக, மும்பையில் பேருந்து போக்குவரத்து மட்டுமின்றி, புறநகர் ரயில் சேவைகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. மேலும், சூறைக்காற்றுடன் கூடிய கனமழையால் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மும்பையில் மழை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் அவசியமின்றி வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மும்பை, தானே, பால்கர் பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மும்பை பல்கலைக்கழகம் இன்று நடைபெறவிருந்த தேர்வுகளை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. இந்தத் தேர்வுகளுக்கான புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால், இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மும்பை மற்றும் புனே இடையேயான ரயில் வழித்தடத்தில், குறிப்பாக கர்ஜத்-லோனாவாலா போர் காட் பகுதியில், கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் ரயில் தண்டவாளங்களில் பாறைகள் விழுந்ததன் காரணமாக, இன்று அதிகாலையில் ரயில் சேவைகள் ஸ்தம்பித்தன. இந்தச் சூழல் குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு மேற்கொண்டார்.

இது தொடர்பாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், 'மும்பை-புனே மலைப்பாதைப் பகுதியில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவு மற்றும் ரயில் தண்டவாளங்களில் பாறைகள் விழுந்தது தொடர்பான சூழல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்றும் பலத்த மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து ரயில் சேவைகளையும் விரைவாகச் சீரமைப்பதை உறுதிசெய்ய, அதிகாரிகளை ஒரே அணியாக இணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளேன்' என்று தெரிவித்தார்.

இந்திய வானிலை மையம், மும்பை, பால்கர், ராய்கட் மற்றும் தானே ஆகிய பகுதிகளில் மணிக்கு 50-60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. இதன் காரணமாக, இப்பகுதிகளுக்கு அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும், அவசர தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Heavy RainMumbaiRed AlertWeatherகனமழைமஹாராஷ்டிராமும்பைரெட் அலர்ட்வானிலை மையம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கியா 7 சீட்டர் ஹைப்ரிட் எஸ்யுவி காரின் புகைப்படம் கியாவின் புதிய 7 சீட்டர் ஹைப்ரிட் எஸ்யுவி விரைவில் அறிமுகம்!
Next Article அசாம் சட்டமன்ற கட்டிடம் அசாம் சட்டசபையில் இந்திக்கு அனுமதி: முதல் முறை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

துப்பாக்கியுடன் வங்கி ஊழியர் மானஸ் மிஸ்ரா

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி மற்றும்…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

1984 சீக்கியர் கலவர வழக்கு: ஆயுள் தண்டனை கைதி சஜ்ஜன் குமார் மரணம்

1984 சீக்கியர் கலவர வழக்கில் ஆயுள் தண்டனை…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) ஐடி பிரிவு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கிண்டல் பதிவு
தமிழ்நாடு

திமுக-அதிமுக கூட்டுக்களவாணி ஆட்சி: எடப்பாடி பழனிசாமியை கிண்டல் செய்த த.வெ.க ஐடி விங்!

சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலடி தரும் வகையில், த.வெ.க ஐடி பிரிவு 'இரவல் ஆட்சி' விமர்சனத்தை கிண்டல் செய்துள்ளது.

1 Min Read
சேம்பர் ஆஃப் டிரேட் அண்ட் இண்டஸ்ட்ரி (CTI) தலைவர் பிரிஜேஷ் கோயல்
தமிழ்நாடு

கிரிக்கெட் நேரலை: ஆணுறை, டேட்டிங் செயலி விளம்பரங்களுக்கு தடை கோரிக்கை!

கிரிக்கெட் நேரலை ஒளிபரப்பின் போது ஆணுறை மற்றும் டேட்டிங் செயலி விளம்பரங்களை தடை செய்ய வேண்டும் என CTI அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து ஜெய்…

3 Min Read
தமிழ்நாடு

திருவள்ளூர்: மின்கம்பத்தில் மோதி தந்தை, மகன் பலி – அதிர்ச்சி சம்பவம்!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உறவினர் நிகழ்ச்சியில் வீடு திரும்பியபோது, மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதி தந்தை, மகன் உயிரிழந்த சோகம். மூவர் படுகாயம்.

1 Min Read
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கறிக்கோழி விற்பனை நிறுத்தம் குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

தமிழகம், புதுச்சேரியில் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்: வணிகர்கள் அறிவிப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 31-ஆம் தேதி முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தப்படும் என தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கோழிகளின் எடையில் நடைபெறும் மோசடிகளைத்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?