MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: திமுக போட்டி?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: திமுக போட்டி?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: திமுக போட்டி?

தமிழ்நாடு

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: திமுக போட்டி?

Fernandez
Last updated: செப்டம்பர் 9, 2026 4:38 மணி
Fernandez
Share
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் குறித்த ஆலோசனை
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் குறித்த ஆலோசனை
SHARE

தமிழகத்தில் மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.

ஆட்சி அமைந்த சில மாதங்களிலேயே நடைபெறும் இந்த இடைத்தேர்தல், தற்போதைய ஆட்சியின் செயல்பாடுகளையும், கொள்கைகளையும் மக்கள் எவ்வாறு ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதை நிரூபிக்கும் களமாக பார்க்கப்படுகிறது. இதனால், இந்த இடைத்தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்பதில் த.வெ.க. தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. அதேநேரத்தில், அ.தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ.க்களாக தேர்வானவர்கள் ராஜினாமா செய்ததால் ஏற்பட்ட இந்த இடைத்தேர்தலில், அந்தந்த தொகுதிகளில் அ.தி.மு.க.வின் செல்வாக்கை இழக்கக்கூடாது என்பதில் அ.தி.மு.க.வும் தீவிரமாக உள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுமா அல்லது புறக்கணிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக முடிவு செய்ய, இன்று முக ஸ்டாலின் வீட்டில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, இடைத்தேர்தலில் போட்டியிட தி.மு.க. முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த தேர்தலில் தாராபுரம் தொகுதியில் தி.மு.க. இரண்டாம் இடத்தைப் பிடித்து தோல்வியடைந்தது. மதுராந்தகம் தொகுதியில் தி.மு.க. மூன்றாம் இடத்தைப் பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இடைத்தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்தால் கட்சி நிர்வாகிகள் சோர்வடைந்துவிடுவார்கள் என்றும், தி.மு.க.வை கடுமையாக விமர்சிக்கும் விஜய்க்கு தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, தேர்தலில் போட்டியிடும் முடிவை தி.மு.க. தலைமை எடுத்திருப்பதாக தெரிகிறது.

நாளை அல்லது நாளை மறுநாள் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இடைத்தேர்தல் முடிவுகள், தற்போதைய ஆட்சியின் நிலைத்தன்மையை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKBye ElectionDharapuramDMKMaduranthagamTVKஅதிமுகஇடைத்தேர்தல்த.வெ.க.தாராபுரம்திமுகமதுராந்தகம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தப்படும் முட்டை ஓடுகள் முட்டை ஓடு: செடிகளுக்கு உரம், தண்ணீர் சேமிப்புக்கு ஒரு வழி
Next Article இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட் மைதானத்தில் பேட்டிங் செய்கிறார் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்: பாண்டிங், ஸ்டீவ் வாஹ் சாதனையை முறியடித்தார்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பீகார் எம்எல்ஏ ஆனந்த் சிங் மகள் திருமணத்தில் மணமகனுக்கு பரிசளிக்கப்பட்ட கார்

ரூ.2.5 கோடியில் கார்: பீகார் எம்எல்ஏ மகள் திருமணத்தில் மாப்பிள்ளைக்கு அசத்தல் பரிசு!

பீகாரில் எம்எல்ஏ ஆனந்த் சிங் மகள் திருமணத்தில், மணமகனுக்கு ரூ.2.5 கோடியில் கார்…

நவம்பர் 11, 2026

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது…

நவம்பர் 10, 2026

காற்று மாசு மரணங்களை மறைக்கிறதா மோடி அரசு? காங்கிரஸ் கேள்வி

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை மத்திய…

நவம்பர் 9, 2026

பாபர் மசூதி இடிப்பு: சோனியா காந்தியின் கருத்து – பாஜக விமர்சனம்

1992ல் பாபர் மசூதி இடிப்பைக் கண்டு கண்கலங்கியதாக…

நவம்பர் 9, 2026

மாரடைப்பால் இறந்த வேட்பாளர் திவ்யா வெற்றி பெற்றார்

ஆந்திராவில் மண்டல பரிஷத் தேர்தலில் போட்டியிட்ட ஜனசேனா…

நவம்பர் 8, 2026

You Might Also Like

பிரபல மல்யுத்த வீரர் பெஞ்சமின் சடர்லி
தமிழ்நாடு

பிரபல மல்யுத்த வீரர் பெஞ்சமின் சடர்லி திடீர் மரணம்

பிரபல மல்யுத்த வீரர் பெஞ்சமின் சடர்லி (40) அமெரிக்காவின் சிகாகோவில் போட்டி முடிந்த சில மணி நேரங்களில் திடீரென காலமானார். அவரது மரணத்திற்கான காரணம் மர்மமாக உள்ளது.

2 Min Read
கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோயிலில் சந்தனக் காப்பு ராஜ அலங்காரத்தில் காட்சியளிக்கும் விநாயகர் சிலை
தமிழ்நாடு

கோவை புலியகுளம் விநாயகருக்கு 50 கிலோ சந்தனக் காப்பு ராஜ அலங்காரம்!

கோவை புலியகுளம் முந்தி விநாயகருக்கு 50 கிலோ சந்தனக் காப்பு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. திண்டுக்கல்லில் 32 அடி உயர விநாயகருக்கு 5 டன் வண்ணப் பூக்களால்…

2 Min Read
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பு
தமிழ்நாடு

வெளியேறுபவர்கள் வெளியேறட்டும்: அதிமுக மீண்டும் எழும் – எடப்பாடி பழனிசாமி உறுதி

அதிமுகவில் இருந்து விலகிச் செல்வோர் குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். வெளியேறுபவர்கள் வெளியேறட்டும், நிச்சயம் அதிமுக மீண்டும் எழும் என அவர் நிர்வாகிகளிடம் உறுதி…

2 Min Read
சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் விளக்கம் அளிக்கிறார்
தமிழ்நாடு

சட்டப்பேரவை மாலை அமர்வு: சபாநாயகர் பிரபாகர் விளக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் மாலை நேர அமர்வு குறித்து சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார். நடைமுறை விதிகள், உறுப்பினர்களின் வசதி மற்றும் நிர்வாக காரணங்களை அவர் சுட்டிக்காட்டினார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?