MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ‘கருப்பு’ பட ‘கருப்பசாமி’ பாடல் உருவான கதை: சூர்யா பகிர்வு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - சினிமா - ‘கருப்பு’ பட ‘கருப்பசாமி’ பாடல் உருவான கதை: சூர்யா பகிர்வு

சினிமா

‘கருப்பு’ பட ‘கருப்பசாமி’ பாடல் உருவான கதை: சூர்யா பகிர்வு

Admin
Last updated: மே 24, 2026 10:31 மணி
Admin
Share
SHARE

சூர்யா மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம், வெளியாகி குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

உலகளவில் ரூ.207 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி வசூலித்துள்ள இந்தப் படம், விரைவில் ரூ.300 கோடியைக் கடந்து சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகச்சிறந்த வசூல் சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் மட்டுமன்றி உலகளவிலும் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளுக்குச் சென்று கொண்டாடி வருகிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிடைத்த இந்த பிரம்மாண்ட வெற்றியை பத்திரிகையாளர்களுடன் கொண்டாடிய நடிகர் சூர்யா, ‘கருப்பு’ படம் எடுக்கும் முடிவு அரை மணி நேரத்தில் எடுக்கப்பட்டது என்றும், இது முழுக்க முழுக்க இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி மீது வைத்த நம்பிக்கை என்றும் தெரிவித்தார். இந்த வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர், திரையரங்குகளில் நீண்ட நாட்களுக்குப் பிறகு காணப்படும் இந்த கொண்டாட்டத்தையும் அன்பையும் கண்டு மகிழ்வதாகக் கூறினார்.

மேலும், படத்தின் எடிட்டிங் முடிந்த பிறகு, தனது உதவியாளர் கருப்பசாமி பாடல் இருந்தால் சரியாக இருக்கும் என்று கூறியதால், 5 மாதங்கள் கழித்து அந்தக் பாடல் படமாக்கப்பட்டதாக சூர்யா தெரிவித்தார். பொருட்செலவு உள்ளிட்ட காரணங்களால் வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம் என்றாலும், சரியாக இருக்கும் என்று நம்பி படமாக்கப்பட்ட இந்தப் பாடல் இன்று திரையரங்குகளில் கொண்டாடப்படுவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தப் படத்திற்காக அனைவரும் சேர்ந்து உழைத்ததை இன்று திரையரங்குகளில் காண முடிவதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:KarrpuRJ BalajiSuriyaTrishaஆர்.ஜே. பாலாஜிகருப்பசாமி பாடல்கருப்புசூர்யாதிரிஷா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஈரான் மீதான முற்றுகை தொடரும் – ட்ரம்ப் திட்டவட்டம்
Next Article மேற்கு வங்காளம்: பால்டா தொகுதியில் பா.ஜ.க. மகத்தான வெற்றி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மனைவி ஒருவர் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் தொடர்பான செய்தி

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

You Might Also Like

சினிமா

டபுள் ஆக்​குபன்​சி: ‘உயிரே’ பாடல் வெளியீடு!

‘டபுள் ஆக்​குபன்​சி’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'உயிரே' வெளியிடப்பட்டுள்ளது. ரொமான்டிக் பேன்டஸி திரைப்படமான இது விரைவில் திரைக்கு வரவுள்ளது.

1 Min Read
சினிமா

கே. பாக்யராஜ் இறுதிச் சடங்குகள் எப்போது? குடும்பத்தார் தகவல்

பிரபல நடிகர் கே. பாக்யராஜ் மறைவு தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறுதிச் சடங்குகள் எப்போது நடைபெறும் என்பது குறித்த தகவல்களை…

1 Min Read
சினிமா

சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகஸ்ட் 14-ல் வெளியீடு

சூர்யா நடித்துள்ள 46-வது படமான 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் ஆகஸ்ட் 14-ந்தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்த புதிய போஸ்டர் தற்போது வைரலாகி…

1 Min Read
சினிமா

கேன்ஸ் விழாவில் ஆலியா பட்: முதல் வருகை, அசத்தும் அழகு!

பிரபல ஹாலிவுட் திரைப்பட விழாவான கேன்ஸ் திரைப்பட விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த ஆண்டு விழாவில் நடிகை ஆலியா பட் முதன்முறையாக சிவப்பு கம்பளத்தில் நடந்து…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?