MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: IPL 2026| ராஜஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் களமிறங்கும் குஜராத்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - ஐபிஎல் 2026 - IPL 2026| ராஜஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் களமிறங்கும் குஜராத்

ஐபிஎல் 2026

IPL 2026| ராஜஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் களமிறங்கும் குஜராத்

Admin
Last updated: மே 9, 2026 8:38 காலை
Admin
Share
SHARE

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் ஒரு முறை, எதிர்பிரிவில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் தலா 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

‘பிளே-ஆப்’ சுற்றை எட்டுவதற்கு 8-9 வெற்றிகள் தேவையாகும். இதுவரை 51 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இன்னும் எந்த அணியும் ‘பிளே-ஆப்’ சுற்றை உறுதி செய்யவில்லை.

இந்த நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் 52-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

ராஜஸ்தான் அணி 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி (சென்னை, குஜராத், மும்பை, பெங்களூரு, லக்னோ, பஞ்சாப் அணிகளுக்கு எதிராக), 4 தோல்வியுடன் (2 முறை ஐதராபாத், கொல்கத்தா, டெல்லி அணிகளுக்கு எதிராக) 4-வது இடத்தில் இருக்கிறது. முதல் 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று அமர்க்களமாக தொடங்கிய அந்த அணி அடுத்த 6 ஆட்டங்களில் 4-ல் தோல்வியை சந்தித்து சற்று தடுமாறுகிறது.

ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் வைபவ் சூர்யவன்ஷி (ஒரு சதம், 2 அரைசதத் துடன் 404 ரன்கள்), ஜெய்ஸ்வால் (3 அரைசதத்துடன் 312), துருவ் ஜூரெல் (3 அரைசதத்துடன் 290), டோனவன் பெரேரா (229). கேப்டன் ரியான் பராக் (207) சூப் பர் பார்மில் இருக்கின்றனர். பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் (15 விக்கெட்), ரவி பிஷ்னோய் (11) நல்ல நிலையில் உள்ளனர். நன்ரே பர்கர், ரவீந்திர ஜடேஜா, பிரி ஜேஷ் ஷர்மா ஆகியோரும் பந்து வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டியது அவ சியமானதாகும்.

குஜராத் அணியும் 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி (டெல்லி, லக்னோ, கொல் கத்தா, சென்னை. பெங்களூரு, பஞ்சாப் அணிகளுக்கு எதிராக). 4 தோல்வி (பஞ் சாப், ராஜஸ்தான், மும்பை, பெங்களூரு அணிகளுக்கு எதிராக) கண்டு 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி கடைசி 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வென்ற உற்சாகத்துடன் இந்த ஆட்டத்தில் கால் பதிக்கிறது.

குஜராத் அணியில் பேட்டிங்கில் சாய் சுதர்சன் (ஒரு சதம், 3 அரைசதத்துடன் 385 ரன்கள்), சுப்மன் கில் (3 அரைசதத்துடன் 378), ஜோஸ் பட்லர் (2 அரைசதத்துடன் 335), வாஷிங்டன் சுந்தர் (209) சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ராகுல் திவே தியா ஆட்டம் எதிர்பார்த்தபடி இல்லை. பந்து வீச்சில் ககிசோ ரபடா (16 விக்கெட்), முகமது சிராஜ் (11), ரஷித் கான், ஜாசன் ஹோல்டர் மிரட்டுகிறார்கள்.

குஜராத்துக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதேநேரத் தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க குஜராத் அணி தீவிரம் காட்டும். 7-வது வெற்றியை குறிவைத்து இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்ப தால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 9 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 6 ஆட்டங்களில் குஜராத்தும். 3 ஆட்டங்களில் ராஜஸ்தானும் வென்றுள்ளன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

ராஜஸ்தான்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, துருவ் ஜூரெல், ரியான் பராக் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, டோனவன் பெரேரா, சுபம் துபே, ஜோப்ரா ஆர்ச்சர். ரவி பிஷ்னோய். நன்ரே பர்கர், பிரி ஜேஷ் ஷர்மா, துஷர் தேஷ்பாண்டே.

குஜராத்: சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், நிஷாந்த் சிந்து, வாஷிங்டன் சுந்தர், ராகுல் திவேதியா, ஜாசன் ஹோல்டர், அர்ஷத் கான், ரஷித் கான், ககிசோ ரபடா, மானவ் சுதர், முகமது சிராஜ்.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மேற்கு வங்​கத்​தில் ஆட்சி மாறியதால் ‘த பெங்கால் ஃபைல்ஸ்’ திரைப்​படம் ரிலீஸ்
Next Article LSG vs RCB: மழைக்கு நடுவே செஞ்சுரி.. வெளுத்து வாங்கிய லக்னோ வீரர் மிட்செல் மார்ஷ்.. ஆர்சிபி சொதப்பல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மனைவி ஒருவர் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் தொடர்பான செய்தி

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

You Might Also Like

ஐபிஎல் 2026விளையாட்டு

IPL 2026 | சஞ்சு சாம்சன் வரலாறு படைத்தார்…. முதல் கிரிக்கெட் வீரராக… நிகழ்த்திய சாதனை!

Sanju Samson | டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக ஐபிஎல் போட்டியில் விளையாடிய சஞ்சு சாம்சன், ஒரு மகத்தான மைல்கல்லை எட்டினார்.

0 Min Read
ஐபிஎல் 2026விளையாட்டு

IPL | தேர்தல் நேரத்தில் கிரிக்கெட் ஜூரம்… தமிழகத்தில் சிஎஸ்கே விளையாடும் தேதிகள் இதுதான்!

IPL | தேர்தல் நேரத்தில் கிரிக்கெட் ஜூரம்... தமிழகத்தில் சிஎஸ்கே விளையாடும் தேதிகள் இதுதான்!Published by:Last Updated:Mar 27, 2026 7:23 AM ISTஐபிஎல் தொடரில் இதுவரை…

2 Min Read
ஐபிஎல் 2026விளையாட்டு

IPL 2026 : வெற்றியை தீர்மானித்த கடைசி பந்து.. 1 ரன் வித்தியாசத்தில் டெல்லியை வென்றது குஜராத் டைட்டன்ஸ்..

IPL 2026 : வெற்றியை தீர்மானித்த கடைசி பந்து.. 1 ரன் வித்தியாசத்தில் டெல்லியை வென்றது குஜராத் டைட்டன்ஸ்..Published by:Last Updated:Apr 09, 2026 12:03 AM…

2 Min Read
ஐபிஎல் 2026விளையாட்டு

IPL 2026 | மும்பை இந்தியன்ஸுக்குப் பிறகு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தான்… ஐபிஎல் சாதனையில் இது புதுசு!

SRH vs PBKS | ஐபிஎல் தொடரில் பஞ்சாப்பை வீழ்த்தி ஹைதராபாத் அணி முதலிடத்துக்கு முன்னேறியது. இந்த வெற்றியின் மூலம் புதிய சாதனைகளை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி…

0 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?