MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நடுவானில் இண்டிகோ விமானத்தில் தீ விபத்து: பயணிகள் திக் திக் நிமிடங்கள்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நடுவானில் இண்டிகோ விமானத்தில் தீ விபத்து: பயணிகள் திக் திக் நிமிடங்கள்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நடுவானில் இண்டிகோ விமானத்தில் தீ விபத்து: பயணிகள் திக் திக் நிமிடங்கள்!

தமிழ்நாடு

நடுவானில் இண்டிகோ விமானத்தில் தீ விபத்து: பயணிகள் திக் திக் நிமிடங்கள்!

Fernandez
Last updated: அக்டோபர் 12, 2026 12:41 மணி
Fernandez
Share
SHARE

டெல்லியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் திடீரென தீ விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 36,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தின் லக்கேஜ் கேபினில் இருந்து புகை வந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். உடனடியாக விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஹைதராபாத் விமான நிலையத்தில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

நேற்று (அக்.11) டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் மதியம் 1.10 மணிக்கு சென்னைக்குப் புறப்படவிருந்தது. எனினும், 20 நிமிடங்கள் தாமதமாக மதியம் 01.30 மணிக்கு விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 174 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 180 பேர் பயணம் செய்தனர்.

விமானம் நடுவானில் சுமார் 36,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, பயணிகள் அமரும் இடத்திற்கு மேலே உள்ள லக்கேஜ் கேபினில் இருந்து புகை வருவதைக் கண்டு பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக விமானப் பணிப்பெண்கள் இதுகுறித்து விமானிக்குத் தகவல் தெரிவித்தனர். அப்போது விமானம் ஹைதராபாத் அருகே வந்து கொண்டிருந்தது.

விமானி உடனடியாக ஹைதராபாத் விமான நிலையத்தின் அவசர கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு நிலைமையை விளக்கினார். அனுமதி கிடைத்ததை அடுத்து, பிற்பகல் 3 மணியளவில் விமானத்தை விமானி அவசர அவசரமாக ஹைதராபாத் விமான நிலையத்தில் தரையிறக்கினார். அதற்குள் லக்கேஜ் கேபினில் தீ பரவத் தொடங்கியதால், பயணிகள் மற்றும் விமானப் பணிப்பெண்கள் தீயணைப்பான்களைப் பயன்படுத்தி தீயை அணைக்கப் போராடினர்.

விமானம் தரையிறங்கியதும், பயணிகள் அனைவரும் உடனடியாக விமானத்திலிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பின்னர், ஹைதராபாத் விமான நிலைய தீயணைப்புத் துறையினர் விமானத்திற்குள் விரைந்து தீயை முழுமையாக அணைத்தனர். இந்த அசம்பாவிதம் காரணமாக, சென்னைக்குச் செல்லவிருந்த பயணிகள் மாற்று இண்டிகோ விமானம் மூலம் மாலை 6 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து இண்டிகோ விமான நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், விமானத்தில் பயணித்த ஒருவர் தனது செல்போனுக்கு சார்ஜ் ஏற்றப் பயன்படுத்தும் பவர் பேங்கை லக்கேஜில் வைத்து கேபினில் வைத்திருந்ததாகவும், அதிலிருந்து ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் விமானப் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ChennaiDelhiFire AccidentHyderabadIndigo Airlinesஇண்டிகோ விமானம்சென்னைடெல்லிதீ விபத்துவிமானப் பாதுகாப்புஹைதராபாத்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் 'லவ் ஆல்வேஸ்' வெப் தொடர் ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘லவ் ஆல்வேஸ்’ வெப் தொடர் வெளியீடு
Next Article அவிநாசி மகளிர் சக்தி மாரத்தான் 2026-ல் பங்கேற்கும் பெண்கள் அவிநாசியில் 10,000 பெண்கள் பங்கேற்ற மகளிர் சக்தி மாரத்தான்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாஜக எம்பி நிஷிகாந்த் துபே

ஸ்டார்லிங்க் அனுமதி: நாட்டுக்கு அச்சுறுத்தல் – பாஜக எம்பி எச்சரிக்கை

இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என பாஜக…

அக்டோபர் 12, 2026

ரியாத் விமான நிலைய தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ரியாத் விமான நிலையத்தை…

அக்டோபர் 12, 2026

டெல்லி மெட்ரோ நிலையங்கள் மூடல்: உச்ச நீதிமன்றம் கடும் கேள்வி

டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்ட விவகாரத்தில்,…

அக்டோபர் 12, 2026

அதானி ஆலையில் 70 அடி உயர துர்கா தேவி சிலை!

அதானி சிமெண்ட் நிறுவனம், நவராத்திரி மற்றும் துர்கா…

அக்டோபர் 12, 2026

யூடியூபர் துருவ் ராத்தி டெல்லியில் கைது

டெல்லியில் சிஜேபி போராட்டம் நடைபெற்ற நிலையில், யூடியூபர்…

அக்டோபர் 11, 2026

You Might Also Like

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்
தமிழ்நாடு

பேரவையில் பேசுவது தேர்வுக்கு தயாராவது போல: பிரேமலதா விஜயகாந்த்

சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வுக்கு தயாராவது போல பேரவையில் பேசுவதற்கு தயாராகி வருகின்றனர் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஆதவ் அர்ஜுனா பேசிய பிறகுதான் பிரச்சனையே…

1 Min Read
தாராபுரம் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பெட்டிகள்
தமிழ்நாடு

தாராபுரத்தில் தவெக முன்னிலை: விஜயின் விசில் சத்தத்தால் தேர்தல் களம் அதிர்கிறது!

தாராபுரத்தில் 9-வது சுற்று முடிவில் தவெக வேட்பாளர் சத்தியபாமா முன்னிலை. மதுராந்தகத்திலும் தவெக முன்னிலை வகிப்பதாக தகவல். தேர்தல் களம் பரபரப்பு.

1 Min Read
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
தமிழ்நாடு

மாமன்னர் பூலித்தேவர்: டிடிவி தினகரன் புகழாரம்

மாமன்னர் பூலித்தேவரின் 303வது பிறந்தநாளை முன்னிட்டு, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி ட்விட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார்.

1 Min Read
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவசரகால மீட்புப் பணிகள் குறித்து பேசுகிறார்
தமிழ்நாடு

அவசரகால மீட்புப் பணிகளில் பொறியாளர்கள் கவனம் – அமைச்சர் அறிவுறுத்தல்

அவசரகால மீட்பு நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்கு பொறியாளர்கள் மிகுந்த கவனத்துடனும், துடிப்புடனும் பணியாற்ற வேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?