MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: “நான் இப்போது முதல்வர்… அனைவருக்கும் பொதுவானவன்!” – சுவேந்து அதிகாரி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: “நான் இப்போது முதல்வர்… அனைவருக்கும் பொதுவானவன்!” – சுவேந்து அதிகாரி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - “நான் இப்போது முதல்வர்… அனைவருக்கும் பொதுவானவன்!” – சுவேந்து அதிகாரி

இந்தியா

“நான் இப்போது முதல்வர்… அனைவருக்கும் பொதுவானவன்!” – சுவேந்து அதிகாரி

Admin
Last updated: மே 9, 2026 4:58 மணி
Admin
Share
SHARE

பதவியேற்பு விழா மேடையில் சுவேந்து அதிகாரிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

கொல்கத்தா: “நான் இப்போது முதல்வராக இருக்கிறேன்; நான் அனைவருக்கும் பொதுவானவன்” என்று மேற்கு வங்கத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

பதவியேற்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுவேந்து அதிகாரி, “இந்த நாள் நாட்டுக்கும் மேற்கு வங்கத்துக்கும் மிகவும் முக்கியமான நாள். ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாளான இன்று, புதிய அரசு பதவியேற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விரும்பினார். அதன் காரணமாக, பிரதமர் மோடியின் தலைமையில் ரவீந்திரநாத் தாகூருக்கு அஞ்சலி செலுத்திய பிறகு பதவியேற்பு விழா நடத்தப்பட்டது.

ஜோராசங்காவில் உள்ள ரவீந்திரநாத் தாகூர் பிறந்த இல்லத்துக்குச் சென்று வணங்கிய பிறகே நான் எனது முதல்வர் பணிகளை தொடங்க உள்ளேன்” என தெரிவித்தார்.

தேர்தலின்போது பல்வேறு மோதல்கள் நிகழ்ந்த நிலையில், முதல்வராக உங்களது செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த சுவேந்து அதிகாரி, “டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிக்கு (பாஜக) வேறு எந்தச் சான்றிதழும் தேவையில்லை. நான் இப்போது முதல்வராக இருக்கிறேன். நான் அனைவருக்கும் பொதுவானவன். தேர்தல் முடிவுகளைப் பற்றியே இன்னும் விவாதித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல புத்தி கிடைக்கட்டும்.

மேற்கு வங்கம் பெருமளவில் சீர்குலைந்துள்ளது. கல்வி சீர்குலைந்துள்ளது, கலாச்சாரம் சீர்குலைந்துள்ளது. நாங்கள் மேற்கு வங்கத்தை மீண்டும் கட்டியெழுப்புவோம். எங்கள் தோள்களில் மிகப் பெரிய பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது. மற்றவர்கள் பேசிக் கொண்டிருக்கட்டும். நாங்கள் முன்னோக்கிச் செல்வோம்” என்று தெரிவித்தார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின்போது பாஜக – திரிணமூல் காங்கிரஸ் இடையேயும் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையேயும் மோதல்கள் நிகழ்ந்த நிலையில், சுவேந்து அதிகாரியின் எதிர்கால செயல்பாடு குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், தான் அனைவருக்கும் போதுவான நபர் என அவர் கூறி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

முன்னதாக, நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 207 தொகுதிகளில் வெற்றி பெற்று, அறுதிப் பொரும்பான்மையுடன் கூடிய தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. மம்தா பானர்ஜி போட்டியிட்ட பபானிபூர் தொகுதியிலும், நந்திகிராம் தொகுதியிலும் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றவர் சுவேந்து அதிகாரி.

பாஜகவின் சட்டப்பேரவைக் குழு தலைவராக நேற்று தேர்ந்தெடுக்கப்பட்ட சவேந்து அதிகாரி, இன்று மாநில முதல்வராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். சுவேந்து அதிகாரியுடன் திலிப் கோஷ், அக்னிமித்ரா பால், நிஷித் ப்ரமாணிக், அஷோக் கீர்த்தன்யா, குதிராம் டூடு ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜே.பி. நட்டா, தர்மேந்திர பிரதான், முதல்வர்கள் மாணிக் சர்க்கார், ஹிமந்த பிஸ்வா சர்மா, ரேகா குப்தா, புஷ்கர் சிங் தாமி, யோகி ஆதித்யநாத், சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இன்று இந்திய தேசிய கீதத்தை இயற்றிய வங்க கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள் என்பதால், பதவியேற்பு விழா மேடையில் அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. அதற்கு பிரதமர் மோடி, சுவேந்து அதிகாரி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வி.சி.க பதவி கேட்பதாக வரும் தகவல் பொய்..!- ரவிக்குமார் எம்.பி
Next Article தவெகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு? – திருமாவிடம் கடிதத்தை பெறும் ஆதவ் அர்ஜுனா?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. ஜம்மு - காஷ்மீர்,…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

இந்தியா

புதிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்ட வரைவு விதிமுறைகள் வெளியீடு

மத்திய அரசு 'வளர்ச்சியடைந்த பாரதம் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு மற்றும் வாழ்வாதார திட்டம்' என்ற புதிய திட்டத்தை ஜூலை 1 முதல் அமல்படுத்துகிறது. இதற்கான வரைவு விதிமுறைகள்…

1 Min Read
இந்தியா

மேற்கு வங்கத்தில் ரூ.5-க்கு மீன் உணவு: அசத்தும் அரசு

மேற்கு வங்க அரசு கேன்டீன்களில் இனி வெறும் 5 ரூபாய்க்கு மீன் உணவு வழங்கப்பட உள்ளது. இது மக்களின் கலாச்சார அடையாளத்தையும் பாதுகாக்கும் ஒரு முயற்சியாக பார்க்கப்படுகிறது.

1 Min Read
சீன அதிபர் ஜி ஜின்பிங்
இந்தியா

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வருகை?

செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங் வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இருநாட்டு உறவுகளில்…

1 Min Read
இந்தியா

திருமண ஏற்பாடு என கூறி 42 குடும்பங்களை ஏமாற்றிய தம்பதி கைது

மத்திய பிரதேசத்தில், திருமணத்திற்கு மணப்பெண்களை ஏற்பாடு செய்வதாக கூறி 42 குடும்பங்களை ஏமாற்றிய தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை பெற்று…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?