MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: புனித சலேத் மாதா கோவில்: அற்புத நீரூற்று அதிசயம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - ஆன்மிகம் - புனித சலேத் மாதா கோவில்: அற்புத நீரூற்று அதிசயம்!

ஆன்மிகம்

புனித சலேத் மாதா கோவில்: அற்புத நீரூற்று அதிசயம்!

Admin
Last updated: மே 24, 2026 3:52 மணி
Admin
Share
SHARE

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே மறவபட்டிபுதூரில் உள்ள புனித சலேத் மாதா திருத்தலத்தில் நடைபெற்ற திருவிழாவில், தேர் பவனிக்கு மத்தியில் திடீரென நீரூற்று தோன்றியது பக்தர்களிடையே பெரும் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.

நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில், நவநாள் சிறப்பு வழிபாடு கடந்த 13-ஆம் தேதி தொடங்கி தினமும் மாலை சிறப்பு திருப்பலிகளுடன் நடைபெற்றது. கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்ற மின் தேர் பவனி மற்றும் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் பக்தர்களை வெகுவாக கவர்ந்தன. நேற்று முன்தினம் நடைபெற்ற பெரிய தேர் பவனிக்கு பின்னர், புனித சலேத் மாதா சப்பரத்தை சுற்றி பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி முழங்கால் படியிட்டு வழிபட்டனர்.

திருப்பலி முடிந்த சில நிமிடங்களில், திருத்தலத்தின் வடகிழக்கு திசையில் உள்ள பாறை பகுதியிலும், அதே நேரத்தில் கோவிலின் தென்பகுதியிலும் திடீரென நீரூற்றுகள் பொங்கி எழுந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்த வேளையில் நிகழ்ந்த இந்த அற்புதம், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த செய்தி பரவியதும், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திருத்தலத்திற்கு வந்து நீரூற்றுகளை கண்டு மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டனர்.

கடந்த மார்ச் 29-ஆம் தேதி முதன்முதலாக சிறிய அளவில் நீரூற்று தோன்றிய நிலையில், கோடை காலத்திலும் வறட்சியிலும் தொடர்ந்து பல இடங்களில் நீரூற்று ஏற்பட்டு வருவது பக்தர்களுக்கு பெரும் வியப்பை அளித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 35 முறைக்கு மேல் திருத்தலத்தைச் சுற்றி நீரூற்று தோன்றியுள்ளது. இதனை அன்னையின் அருளின் அடையாளமாக பக்தர்கள் கருதுகின்றனர். இந்த அதிசய நீரூற்றால், மறவபட்டிபுதூர் புனித சலேத் மாதா திருத்தலம் தற்போது பக்தர்களின் முக்கிய கவனத்தை ஈர்த்து வருகிறது. வரும் நாட்களில் பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Churchesதிருவிழாநீரூற்று அதிசயம்புனித சலேத் மாதாமறவபட்டிபுதூர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மின்வெட்டை போக்க போர்க்கால நடவடிக்கை தேவை – பழனிசாமி
Next Article இளநீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்: நோய்களைத் தடுக்கும் அற்புத பானம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மனைவி ஒருவர் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் தொடர்பான செய்தி

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

புனித அந்தோணியர் ஆலய திருவிழாவில் இந்துக்கள் சீர்வரிசை எடுத்துச் சென்றனர்

புனித அந்தோணியர் ஆலய திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் பங்கேற்றனர். இந்துக்கள் சீர்வரிசை எடுத்துச் சென்று மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர்.

0 Min Read
ஆன்மிகம்

ஆரணி ஆதி அரியாத்தம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது

ஆரணி வி.ஏ.கே. நகரில் உள்ள ஆதி அரியாத்தம்மன் கோவிலில் திருப்பணிகள் முடிந்து மகா கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை…

1 Min Read
ஆன்மிகம்

12 திருக்கல்யாணங்கள்: மதங்க ரிஷிக்கு மணக்கோலத்தில் சிவன்-அம்பாள் காட்சி!

திருநாங்கூரில் 12 கோவில்களின் சிவபெருமான்-அம்பாள் ரிஷப வாகனங்களில் எழுந்தருளி, மதங்க ரிஷிக்கு திருமணக் கோலத்தில் காட்சி கொடுத்த ஐதீக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

2 Min Read
ஆன்மிகம்

கருங்கண்ணி புனித அந்தோணியார் ஆலய திருவிழா: தேர் பவனி ஜூலை 6ல்

நாகை மாவட்டம் கருங்கண்ணியில் புனித அந்தோணியார் ஆலயத்தின் ஆண்டுப்பெருவிழா தொடங்கியது. தேர் பவனி ஜூலை 6 அன்று நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?