MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஆளுநரின் ஆய்வு: ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காரணம் – உதயநிதி ஸ்டாலின்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஆளுநரின் ஆய்வு: ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காரணம் – உதயநிதி ஸ்டாலின்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஆளுநரின் ஆய்வு: ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காரணம் – உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு

ஆளுநரின் ஆய்வு: ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காரணம் – உதயநிதி ஸ்டாலின்

Admin
Last updated: ஜூலை 2, 2026 9:40 மணி
Admin
Share
SHARE

மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காமல், ஆளுநர் ஆய்வு செய்யும் நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

'ஆளுநர் ஆய்வு செய்தார்' என்ற கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, தற்போதைய குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது. மதுரை சென்றிருந்த ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், தான் நியமன பதவியில் – அதுவும் கூடுதல் பொறுப்பில் தமிழ்நாடு ஆளுநராக இருப்பதை மறந்து, மக்கள் பிரதிநிதி போல ஆய்வு நடத்தி இருக்கிறார். அரசியலமைப்புக்கும் மாநில உரிமைக்கும் எதிரான இந்த செயலில் ஈடுபட்ட ஆளுநருக்கும், இதை அனுமதித்த #SofaModel அரசிற்கும் கடும் கண்டனங்கள்.

ஆளுநர் மாளிகையின் பராமரிப்பே தமிழ்நாடு அரசிடம் இருக்கும் போது, வைகையை அரசு சீரமைக்காவிட்டால் ஆளுநர் மாளிகை களம் இறங்கும் என்று அடாவடியாக பேசி இருக்கிறார். ஆளுநரின் இந்த அசட்டுத் துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காரணம். ஆளுநர் பங்கேற்ற அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவம் குறைக்கப்படும் அளவுக்கு, என்ன Compromise செய்யப்பட்டது என்று சட்டமன்றத்தில் கேட்டிருந்தோம். அதற்கு உரிய பதிலைச் சொல்லாத ஆளுங்கட்சியினர், இன்றைக்கு ஆளுநரை ஆய்வு செய்யவிட்டு, மாநில உரிமைகளை compromise செய்திருப்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.

சட்டத்துக்குப் புறம்பாக அடுத்தக் கட்சி எம்.எல்.ஏ.க்களை Panic buying செய்யும் ஆளுங்கட்சி, ஆளுநர் நடவடிக்கை எடுத்துவிடுவாரோ என்ற anxiety-யில் அவரது ஆய்வை அனுமதிக்கிறதா? முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய ஆளுநர் ஆய்வுகளில் ஈடுபட்ட போது, அவர் சென்ற இடங்களில் எல்லாம் கழகத்தினர் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தோம். கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை நாங்கள் அனுமதித்ததில்லை. ஆகவே, மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளைத் தாரை வார்க்காமல், ஆளுநர் ஆய்வு செய்யும் நடைமுறையை உடனே நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKDMKஆளுநர் ஆய்வுஉதயநிதி ஸ்டாலின்தமிழக அரசுமாநில உரிமைகள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article லியோ சிவக்குமாரின் ‘டெலிவரி பாய்’ டீசர் நாளை வெளியீடு
Next Article வெற்றிக் கழகமா? வெற்று வாக்குறுதிக் கழகமா? – நயினார் நாகேந்திரன் கேள்வி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வந்தே பாரத் ரயில்

பிரேக் செயலிழந்தும் 463 கி.மீ. ஓடிய வந்தே பாரத் ரயில்: விசாரணை தீவிரம்

பிரேக் செயலிழந்த நிலையில் சுமார் 463 கி.மீ. தூரம் பயணித்த வந்தே பாரத்…

நவம்பர் 16, 2026

டேட்டிங் செயலி காதல்: கனடா பெண் இந்தியா வருகை

டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான இளைஞரை திருமணம்…

நவம்பர் 16, 2026

பசியின் கோரம்: நாயிறைச்சியை உண்ட இளைஞர் – ஒடிசாவில் அதிர்ச்சி சம்பவம்

ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தில், சாலையில் இறந்த நாயின்…

நவம்பர் 15, 2026

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்திற்கு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு இல்லை: பிரியங்கா காந்தி

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்துவது குறித்து எதிர்க்கட்சிகளுக்கு…

நவம்பர் 14, 2026

இந்தியா, உலகத்துடன் நவீன ஆராய்ச்சிகளைப் பகிர வேண்டும்: பிரதமர் மோடி

இந்தியாவின் பண்டைய அறிவு மற்றும் நவீன ஆராய்ச்சிகளின்…

நவம்பர் 13, 2026

You Might Also Like

காஞ்சீபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவில்
தமிழ்நாடு

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் தங்கத்தேரோட்டம்: 12-ல் கோலாகலம்!

காஞ்சீபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் வருகின்ற 12-ஆம் தேதி அன்று தங்கத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

1 Min Read
ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 11 அடி உயர கிருஷ்ணர் சிலை
தமிழ்நாடு

ஒரே கல்லில் 11 அடி உயர கிருஷ்ணர் சிலை நெல்லை வருகை

குமரியில் இருந்து லாரி மூலம் திருநெல்வேலிக்கு 15 டன் எடை கொண்ட 11 அடி உயர கிருஷ்ணர் சிலை கொண்டுவரப்பட்டது. ஒரே கல்லில் உருவான இந்த சிலை…

1 Min Read
தமிழ்நாடு

முகூர்த்தம், வார இறுதி: சிறப்பு பேருந்துகள் இயக்கம் – பயணிகளுக்கு அறிவிப்பு

கோடை விடுமுறை, முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து அரசு…

1 Min Read
தமிழ்நாடு

நள்ளிரவில் DMK நிர்வாகியை கைது செய்ய முயற்சி: போலீஸ் சோதனை!

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே ஜென் Z திமுக நிர்வாகி அன்பானந்தம் வீட்டில் நள்ளிரவில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?