MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: த.வெ.க. அரசு பெரும்பான்மையை நிரூபிக்க இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > த.வெ.க. அரசு பெரும்பான்மையை நிரூபிக்க இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!
தமிழ்நாடு

த.வெ.க. அரசு பெரும்பான்மையை நிரூபிக்க இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!

Admin
Last updated: May 13, 2026 7:21 am
Admin
Share
SHARE

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) அரசு, இன்று (மே 13) காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்கிறது. பேரவை கூடியதும், பெரும்பான்மையை நிரூபிப்பது தொடர்பாக முதலமைச்சர் விஜய் தொடக்க உரையாற்றுவார். அதன் பின்னர் பெரும்பான்மையை நிரூபிக்கும் நடவடிக்கை தொடங்கும்.

சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி, விஜய் தலைமையிலான த.வெ.க. 108 இடங்களைக் கைப்பற்றி அதிகபட்சமாக வெற்றி பெற்றது. இருப்பினும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் இல்லாததால், மற்ற கட்சிகளின் ஆதரவை நாடியது.

அதன்படி, காங்கிரஸ் (5), மார்க்சிய கம்யூனிஸ்ட் (2), இந்திய கம்யூனிஸ்ட் (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2), மற்றும் விடுதலை சிறுத்தைகள் (2) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சி அமைக்க உரிமை கோரியது. இதைத் தொடர்ந்து முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

கடந்த மே 10-ஆம் தேதி 17-வது சட்டப்பேரவை கூடியது. நேற்று முன்தினம் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர். நேற்று, சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி பிரபாகர், துணைத் தலைவர் ரவி சங்கர், கொறடா சபரிநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், முதலமைச்சர் விஜய் இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி தனது பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பு காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் உறுப்பினர்கள் சரிபாதிக்கு மேல் வாக்களிக்க வேண்டும்.

வாக்கெடுப்பு குரல் ஓட்டுகள் மூலமாகவோ அல்லது உறுப்பினர்களின் எண்ணிக்கையை எண்ணுவதன் மூலமாகவோ நடத்தப்படலாம்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அதிமுகவின் சட்டமன்ற குழுத் தலைவர் யார்? – சபாநாயகரின் முடிவு என்னவாக இருக்கும்?
Next Article பிளே-ஆப் வாய்ப்பை வலுப்படுத்துமா பெங்களூரு? கொல்கத்தாவுடன் இன்று பலப்பரீட்சை
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வெளிநாடு செல்வோர் நலத்திட்ட உதவிகள் பெற முடியாது – மேற்கு வங்க, பீகார் அதிரடி

மேற்கு வங்காளத்திலும், பீகாரிலும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அரசு நலத்திட்ட உதவிகளை…

May 14, 2026

கேரளாவில் முதல்-மந்திரி யார்? ராகுலுக்கு எதிராக பேனர்கள் வைப்பால் பரபரப்பு!

கேரளாவில் முதல்-மந்திரி யார் என்பதில் காங்கிரஸ் கட்சிக்குள்…

May 14, 2026

திருப்பதி: 15 மணி நேர காத்திருப்பு! பக்தர்களுக்கு புதிய ஏற்பாடுகள்?

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை காரணமாக…

May 14, 2026

சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை: சாமானியர்களுக்கு நிவாரணமா?

உள்நாட்டு சந்தையில் சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்தவும்,…

May 14, 2026

உ.பி.யில் கனமழை: 56 பேர் பலி – முதல்வர் யோகி உத்தரவு

உத்தரபிரதேசத்தில் கனமழை மற்றும் புயல் காரணமாக 56…

May 14, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சாலை தடுப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ப. ரவிச்சந்திரன் மீது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்த…

1 Min Read
தமிழ்நாடு

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து!

தமிழ்நாட்டின் அரசியலில் வரலாற்றிலேயே நல்ல ஒரு தொடக்கம் அமையட்டும் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனையடுத்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது எக்ஸ்…

1 Min Read
தமிழ்நாடு

முதல்-அமைச்சர் விஜய்க்கு நடிகர் சத்யராஜ் வாழ்த்து

தமிழகத்தின் 13-ஆவது முதல்-அமைச்சராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் இன்று காலை 10.15 மணியளவில் பதவியேற்றார். தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு முதல்-அமைச்சராக…

1 Min Read
தமிழ்நாடு

சேப்பாக்கம் எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின்

தமிழக முதலமைச்சராக விஜய் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். பதவி ஏற்றதும் மக்கள் முன்னிலையில் முதலமைச்சர் 3 கோப்புகளில் கையெழுத்திட்டார். வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?