லஞ்சம் வாங்கியதாக பொறியாளர் கைது

சிவகங்கை: சிவகங்​கை​யில் ரூ.1 லட்​சம் லஞ்​சம் வாங்​கிய நெடுஞ்​சாலைத் துறை உதவி செயற்​பொறி​யாளர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்​டம், காளை​யார்​கோ​வில் அருகே கிளுவச்சியைச் சேர்ந்​தவர் கந்​த​சாமி. முதல்​நிலை ஒப்பந்ததாரரான இவர், நெடுஞ்​சாலைத் துறை​யில் ரூ.2.15 கோடி மதிப்​பிலான 3 சாலைப் பணி​களுக்கு ஒப்​பந்​தம் எடுத்​தார். பணி முடிந்த நிலை​யில், ரூ.18.47 லட்​சம் விடுவிக்​கப்​ப​டா​மல் இருந்​தது.

இதற்​காக, அவர் நெடுஞ்​சாலைத்​துறை உதவி செயற்​பொறி​யாளர் சையது இப்​ராஹிமை அணுகி​னார். அவர் ரூ.1 லட்​சம் லஞ்​சம் கேட்​டார். லஞ்​சம் கொடுக்க விரும்​பாத கந்​த​சாமி, லஞ்ச ஒழிப்பு போலீ​ஸாரிடம் புகார் தெரி​வித்​தார். போலீ​ஸாரின் அறி​வுறுத்​தல்​படி, லஞ்சப் பணம் கொடுக்கப்பட்டது. இதை பெற்றபோது சையது இப்​ராஹிமை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்​தனர்​.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version