நடிகை ட்விஷா தற்கொலை: கணவர் பணம் தர மறுத்ததாக எப்ஐஆர் தகவல்

நடிகையும் மாடலுமான ட்விஷா சர்மா, கடந்த மே 12 அன்று போபாலில் உள்ள தனது கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், ட்விஷாவின் மாமியார் மற்றும் ஓய்வு பெற்ற கூடுதல் மாவட்ட நீதிபதியான கிரிபாலா சிங், திருமணத்தின் போது 2 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு ட்விஷாவை கட்டாயப்படுத்தியுள்ளார். ட்விஷாவின் பெற்றோர் இந்தத் தொகையை கொடுத்துள்ளனர்.

திருமணம் நடந்து சில மாதங்களிலேயே, ட்விஷாவின் கணவர் சமர்த் சிங் மற்றும் மாமியார் கிரிபாலா சிங் ஆகியோரால் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். அடிப்படைத் தேவைகளுக்குக் கூட அவரது கணவரும் மாமியாரும் பணம் கொடுக்க மறுத்துள்ளனர்.

இதனால், ட்விஷாவின் பெற்றோர் ஆன்லைன் மூலம் பணம் அனுப்பி வந்துள்ளனர். இந்தத் தகவல்கள் அனைத்தும் சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version