இஸ்ரோ பெண் விஞ்ஞானிக்கு சர்வதேச அளவில் கவுரவம்

ஆமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை கடந்த 1947-ம் ஆண்டு விஞ்ஞானி விக்ரம் சாராபாய் நிறுவினார். இந்திய விண்வெளித் துறையின் கீழ் இயங்கும் இந்த நிறுவனம், வானியல், வளிமண்டல அறிவியல் மற்றும் கிரக ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் கோள் அறிவியல் பிரிவில் பேராசிரியராக இஸ்ரோ விஞ்ஞானி குல்ஜீத் கவுர் மர்ஹாஸ் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், இந்திய கோள் அறிவியல் வரலாற்றில் ஒரு மைல்கல் நிகழ்வாக, 1933-ம் ஆண்டு தொடங்கப்பட்ட விண்கல் ஆய்வு மற்றும் கோள் அறிவியலில் உலகின் மிகவும் மதிப்புமிக்க கவுரவங்களில் ஒன்றான விண்கல் ஆய்வு சங்கத்தின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் இந்திய பெண் என்ற பெருமையை குல்ஜீத் கவுர் மர்ஹாஸ் பெற்றுள்ளார்.

கடந்த 93 ஆண்டு கால வரலாற்றில், மறைந்த தேவேந்திர லால் மற்றும் ஜே.என்.கோஸ்வாமி ஆகியோருக்கு பிறகு, இந்த கவுரவத்தைப் பெறும் 3-வது இந்திய விஞ்ஞானி பேராசிரியர் மர்ஹாஸ் ஆவார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version