MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: அ.தி.மு.க.வின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?- எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - அ.தி.மு.க.வின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?- எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

லைஃப் ஸ்டைல்

அ.தி.மு.க.வின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?- எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

Admin
Last updated: மே 9, 2026 8:26 காலை
Admin
Share
SHARE

தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் அந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் கட்சி த.வெ.க. வுக்கு ஆதரவு தெரிவித்தது. அதனை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளும் த.வெ.க. ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் மூலம் த.வெ.க. 116 எம்.எல்.ஏ.க்கள் பலத்தை பெற்றுள்ளது. இருப்பினும் ஆட்சி அமைக்க இன்னும் 2 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலை உள்ளது.

இந்த நிலையில் அ.தி.மு.க.வை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கடந்த 6- ந்தேதி இரவு முதல் புதுச்சேரி பூரணாங்குபத்தை அடுத்த புதுக்குப்பத்தில் உள்ள சொகுசு விடுதிக்கு வரவழைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். மொத்தம் 37 அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் அங்கு தங்கியிருந்தனர்.

நேற்று முன்தினம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சென்று, சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். ஒரு மணிநேர ஆலோசனைக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து சென்னை திரும்பினார். தொடர்ந்து 3-வது நாளாக நேற்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதியில் தங்கி இருந்தனர்.

இந்த நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இன்று காலை 11 மணிக்குள் சென்னைக்கு திரும்ப அ.தி.மு.க. கட்சி தலைமை அறிவுறுத்தியது.

அதன்படி புதுச்சேரி விடுதியில் தங்கியிருந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நேற்று இரவு முதல் ஒவ்வொருவராக சென்னைக்கு திரும்ப தொடங்கினார்கள். இன்று காலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் விடுதியை காலி செய்தனர்.

இந்த நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இன்று சென்னை திரும்பினார்கள். அவர்கள் இன்று காலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்கு சென்றனர்.

இதையடுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

விஜய் ஆட்சி அமைக்க ஒருபுறம் தீவிரம் காட்டி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தியதால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article குஜராத்தில் புனரமைக்கப்பட்ட சோமநாதர் கோவில் 75-வது ஆண்டு நிறைவுவிழா: பிரதமர் மோடி பங்கேற்கிறார்
Next Article IPL 2026: “வைபவ் சூர்யவன்ஷி 21 வயதில் ஓய்வு பெற்றுவிடுவார்”.. வாகன் வெளியிட்ட அதிரடித் தகவல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முதலமைச்சர் விஜய் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் காட்சி

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் இரண்டு முறை…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

அழுக்குச் சிந்தனையை கழுவி ஊற்றிய மகள்! | என் பாதையில்

தன்னை முற்போக்காளனாகக் கருதிக்கொள்கிற ஆண்களில் நானும் ஒருவன். ஒரே மகள் பொறியியல் பட்டதாரி. பெங்களூருவில் வேலையில் இருந்தவளுக்கு சென்னையில் வேறு நிறுவனத்தில் வேலை கிடைத்ததால் அதன் நிமித்தமாக…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: ரிக்டரில் 7.8 – சுனாமி எச்சரிக்கை

பிலிப்பைன்ஸின் மின்டானோ அருகே ரிக்டர் அளவில் 7.8 என பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோர மக்களுக்கு உயரமான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

சென்னையில் மீத்தேன் வாயு கசிவு: கட்டுமானப் பணியால் பரபரப்பு

சென்னையில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணியின் போது, மீத்தேன் வாயு குழாயில் உடைப்பு ஏற்பட்டு வாயு கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதால்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ஐபிஎல்: வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பில் பிசிசிஐ தலையிடாது

ஐபிஎல் போட்டிகளில் காயம் காரணமாக வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க முடியாத விவகாரத்தில் பிசிசிஐ தலையிடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அணிகளுக்கு ஒரு சவாலாக அமையும்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?