MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: குஜராத்தில் புனரமைக்கப்பட்ட சோமநாதர் கோவில் 75-வது ஆண்டு நிறைவுவிழா: பிரதமர் மோடி பங்கேற்கிறார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > லைஃப் ஸ்டைல் > குஜராத்தில் புனரமைக்கப்பட்ட சோமநாதர் கோவில் 75-வது ஆண்டு நிறைவுவிழா: பிரதமர் மோடி பங்கேற்கிறார்
லைஃப் ஸ்டைல்

குஜராத்தில் புனரமைக்கப்பட்ட சோமநாதர் கோவில் 75-வது ஆண்டு நிறைவுவிழா: பிரதமர் மோடி பங்கேற்கிறார்

Admin
Last updated: May 9, 2026 8:26 am
Admin
Share
SHARE

புகழ்பெற்ற பன்னிரு ஜோதிர் லிங்க தலங்களில் முதன்மையானது சோமநாதர் கோவில். இது மேற்கு கடற்கரையோரம் குஜராத் மாநிலம் வெராவல் பகுதியில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோவில் முகலாய மன்னர்களால் பலமுறை சூறையாடப்பட்டது. வரலாற்றில் கஜினி முகமதுவின் படையெடுப்பில் மிகவும் பாதிக்கப்பட்டதாக தெரியவருகிறது. கஜினி முகமது 17 முறை இந்த கோவிலை சூறையாடி இருக்கிறார்.

பல்வேறு தாக்குதல்களுக்கு உள்ளான இந்த கோவில் தொடக்கத்தில் இருந்தே பலமுறை புனரமைக்கப்பட்டாலும் சுதந்திரத்துக்கு பிறகு புனரமைப்புப்பணி தொடங்கி 1951-ம் ஆண்டு திறப்புவிழா கண்டதை பெரிதாக கொள்கிறார்கள். இந்த புனரமைப்பின் 75-வது ஆண்டு நிறைவு விழா 11-ம் தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

இதனை முன்னிட்டு, பிரதமர் மோடி, “சோமநாத்தும், பாரதத்தின் வெல்ல முடியாத மனோபலமும்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் இந்த கோவிலைப் பற்றிய பல்வேறு தகவல்களை குறிப்பிட்டிருக்கிறார். சோமநாத் வெறும் ஒரு கோவில் மட்டுமல்ல, அது நமது நாகரிகத்தின் அசைக்க முடியாத உறுதியின் சின்னம் என்று அவர் கூறியுள்ளார்.

சர்தார் வல்லபாய் படேல்தான் கடந்த 1947-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த கோவில் மீண்டும் புத்துயிர்பெற காரணமாக இருந்தவர். இவரது முயற்சியால் கட்டப்பட்ட கோவிலை, அவரது மறைவுக்கு பிறகு அப்போதைய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் 1951-ம் ஆண்டு மே மாதம் 11-ம் தேதி திறந்து வைத்தார். இதனை கட்டுரையில் குறிப்பிட்டுள்ள மோடி, 75 ஆண்டுகளுக்குப் பிறகு அதே தினத்தில் அங்கே செல்கிறார்.

“நாட்டு மக்கள் அனைவரும் புனிதமான சோமநாதர் கோவிலுக்குச் சென்று அதன் மகத்துவத்தைக் காணுமாறு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் சோமநாதர் நதிக்கரையில் நிற்கும்போது, அதன் தொன்மையான எதிரொலிகளை உங்களுக்குள் உணர்வீர்கள். அங்கே, நீங்கள் பக்தியை மட்டுமல்ல, ஒருபோதும் ஓயாத, அதன் தீவிரம் குறையாத ஒரு நாகரிக உணர்வின் சக்திவாய்ந்த துடிப்பையும் அனுபவிப்பீர்கள். அங்கே, ஒவ்வொரு பின்னடைவையும் மீறி தனது அடையாளத்தையும், கலாசாரத்தையும் சிதைக்காமல் பேணிவரும் பாரதத்தின் அசைக்க முடியாத மனஉறுதியை உணர்வீர்கள்” எனக்கூறி கட்டுரையை முடித்துள்ளார். மேலும் பிரதமர் மோடி, சோமநாத் அறக்கட்டளையின் தலைவராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article “இத்தனை ஆண்டுகளில் பார்க்காத குதிரை பேரம்” – தவெக மீது திமுக எம்.பி வில்சன் குற்றச்சாட்டு
Next Article அ.தி.மு.க.வின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?- எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போதைப்பொருள் கடத்தல்: தமிழகம், புதுச்சேரிக்கு கேரள முதல்வர் கடிதம்

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு கேரள முதல்வர் வி.டி.சதீசன்…

June 25, 2026

25 ஆண்டுகளுக்குப் பிறகு சிறுவயதில் இறந்தவர்களுக்கு திருமணம்

சிறுவயதில் இறந்தவர்களுக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தாடை,…

June 25, 2026

அயோத்தி ராமர் கோவிலை தகர்க்க சதியா? பயங்கரவாதி பகீர் வாக்குமூலம்

பெங்களூருவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி, அயோத்தி ராமர்…

June 25, 2026

ஈரான் உச்ச தலைவர் இறுதிச்சடங்கு: மோடிக்கு அழைப்பா?

ஈரான் உச்சபட்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி…

June 25, 2026

இமாச்சலில் கனமழை: 5 பேர் மாயம், 17 பேர் காயம்

இமாச்சல பிரதேசத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவால் 5…

June 24, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

குடும்பங்களுக்கான பட்ஜெட் 7 சீட்டர்..! மைலேஜ், அம்சங்கள், விலை ஒப்பீடு – எது பெஸ்ட் மாடல்

Budget 7 Seater: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 15 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கும்,  7 சீட்டர் கார்களின் விவரங்கள் கீழே ஒப்பீடு செய்யப்பட்டுள்ளன. குடும்பங்களாக பயணிப்பவர்கள்…

5 Min Read
லைஃப் ஸ்டைல்

5 தொகுதி இடைத்தேர்தல்: ஆகஸ்டில் ஓட்டுப்பதிவு?

தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அடுத்த மாதம் (ஜூலை) இறுதியில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

துலாம் ராசி: 2026 ஆனி மாத பலன்கள் – திடீர் ஏற்றம், ஆரோக்கிய எச்சரிக்கை!

துலாம் ராசிக்கு 2026 ஆனி மாத ராசிபலன்கள்: மாதத் தொடக்கத்தில் திடீர் ஏற்றம், ஆனால் செவ்வாய் பெயர்ச்சியால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுக்ரன் லாப ஸ்தானம் வருவதால்…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

ராகவா லாரன்ஸ் அரசியல்: ரஜினி, விஜய் அளவுக்கு நெருக்கம் – தாயார் அனுமதிக்கு காத்திருப்பு

நடிகர் ராகவா லாரன்ஸ், முதல்வர் விஜய்யுடனும் ரஜினிகாந்த் அளவுக்கு நெருக்கம். தாயார் அனுமதித்தால் அரசியலுக்கு வர தயார், மக்களின் முடிவே இறுதியானது என தெரிவித்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?