MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: குண்டர் சட்ட உத்தரவு தவறு – சமூக வலைதளங்களில் பொய் பிரசாரம்: லஞ்ச ஒழிப்பு இயக்குநர் அருண்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: குண்டர் சட்ட உத்தரவு தவறு – சமூக வலைதளங்களில் பொய் பிரசாரம்: லஞ்ச ஒழிப்பு இயக்குநர் அருண்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - குண்டர் சட்ட உத்தரவு தவறு – சமூக வலைதளங்களில் பொய் பிரசாரம்: லஞ்ச ஒழிப்பு இயக்குநர் அருண்

தமிழ்நாடு

குண்டர் சட்ட உத்தரவு தவறு – சமூக வலைதளங்களில் பொய் பிரசாரம்: லஞ்ச ஒழிப்பு இயக்குநர் அருண்

Admin
Last updated: மே 28, 2026 11:36 காலை
Admin
Share
SHARE

சென்னை கொளத்தூரில், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷின் மனைவி பூர்ணஜோதிக்கு சொந்தமான நிலத்தில் 234 அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி, அதில் 78 குடியிருப்புகளை வழங்கியதில் முறைகேடு செய்ததாக கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மா கைது செய்யப்பட்டார். இவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அமர்வு, குண்டர் சட்டத்தில் சந்தோஷ் சர்மாவை சிறையிலடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பாக, சென்னை மாநகர காவல்துறையின் அப்போதைய ஆணையரும், மூத்த ஐபிஎஸ் அதிகாரியுமான அருணை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றத்தில் ஆஜரான லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் அருண், மனுதாரரால் 199 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களிடம் போலி கையெழுத்து வாங்கி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்தில் இறங்கியதால், அவர் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கம்பெனி லா போர்டு முன்பும் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விளக்கினார்.

குண்டர் சட்டம் ஏன் போடப்பட்டது என நீதிபதிகள் கேட்டபோது, பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பிரச்சனை பெரிதாகிவிட்டதால் குண்டர் சட்டம் போடப்பட்டதாக அருண் பதிலளித்தார். உங்களை பற்றி சமூக வலைதளங்களில் ஏராளமான பதிவுகள் வருவதாக நீதிபதிகள் கேட்டதற்கு, தன்னை பற்றி சோசியல் மீடியாவில் தவறான, பொய்யான செய்திகளை பதிவிடுவதாகவும், காவல்துறையில் இதற்கு பதிலளிக்க உரிய அமைப்பு இல்லை என்றும் அருண் கூறினார். கடந்த 28 ஆண்டு கால போலீஸ் பணி அனுபவத்தில் தன் மீது ஒரு புகார் கூட இல்லை என்றும், நேர்மையாக பணி செய்யக்கூடியவர் என்றும், தவறு நடக்கும்போது நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

தனக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்ட குற்றவாளிகள், அயோக்கியர்கள் ஒன்று சேர்ந்து தனக்கு எதிராக சோசியல் மீடியாக்களில் தவறான பதிவுகளை எழுதுவதாகவும், அவர்கள் 100 சதவீதம் பொய் பேசுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். பேச்சு சுதந்திரம் சமூக வலைதளங்களில் எழுதுபவர்களுக்கு மட்டுமே உள்ளதாகவும், அரசு ஊழியர்களாகிய தங்களுக்கு அது இல்லை என்றும், இதனால் நீதிமன்றம்தான் தங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தனது பணி பதிவுகளை வாங்கி பார்த்தால் தனக்கு எதிராக ஒரு எழுத்து இருந்தாலும் நடவடிக்கை எடுக்கலாம் என்றும், தனக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் ரவுடிகளை வைத்து சோசியல் மீடியாக்களில் ஆதாரமில்லாமல் விஷம பிரச்சாரம் செய்வதாகவும் அவர் கூறினார். மேலும் சில சமூக ஊடகங்கள் தான் தன் மீது பொய்யான, ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிடுவதாகவும் அருண் தெரிவித்தார். இதையடுத்து, சந்தோஷ் சர்மாவை குண்டர் சட்டத்தில் அடைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தவறானது என்பதை தெரிவிப்பதற்காகவே உங்களை ஆஜராக உத்தரவிட்டதாக குறிப்பிட்ட நீதிபதிகள், சந்தோஷ் சர்மாவின் 4 வார ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை நாளை மறுநாள் பிறப்பிப்பதாக தெரிவித்து விசாரணையை தள்ளிவைத்தனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:policeகட்டுமான நிறுவனம்குண்டர் சட்டம்சமூக வலைதளம்சென்னை உயர்நீதிமன்றம்லஞ்ச ஒழிப்பு துறை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love1
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பயிர்க் கடன் தள்ளுபடி: நபார்டு நிபந்தனையால் தவிக்கிறதா த.வெ.க அரசு?
Next Article இலைக் கட்சி: 4 எம்.எல்.ஏக்கள் விலகல் – பின்னணியில் ‘சி’ பேரமா?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ஆறுதல்

உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை…

ஆகஸ்ட் 21, 2026

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை
தமிழ்நாடு

ஆதியோகி, தியானலிங்கத்தில் பராமரிப்பு: ஜூலை 7 தரிசனம் ரத்து

கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி, தியானலிங்கம் மற்றும் லிங்கபைரவி ஆகிய இடங்களில் ஜூலை 7-ஆம் தேதி பராமரிப்பு பணிகள் காரணமாக தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

1 Min Read
திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவிக்கும் காட்சி
தமிழ்நாடு

திமுக எம்.எல்.ஏ கைது: ஜனநாயக வழியில் பாடம் புகட்டும் தவெக அரசு – கனிமொழி எம்.பி.

திமுக எம்.எல்.ஏ மார்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு திமுக खासदार கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் பாடம் புகட்டப்படும் என அவர் கூறியுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. இந்த திடீர் முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

ஒகேனக்கல்: சாலையோரம் இளைப்பாறும் யானைகள் – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் வறட்சி காரணமாக வெளியேறிய யானைகள் சாலையோரம் இளைப்பாறி, சாலையில் சென்றதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?