தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமிக்கப்பட்ட விவகாரத்தில், இந்த நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்தை முதல்வர் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். வெங்கட் நாராயணாவின் நியமனம் தற்போது பல விவாதங்களையும் விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகள் குறித்த ஆழமான புரிதல் இல்லாத ஒருவரை இந்தப் பொறுப்பில் நியமித்தது சரியான நடவடிக்கை அல்ல. வெங்கட் நாராயணாவின் நியமனத்தை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே, டெல்லி சிறப்பு பிரதிநிதியாக மிகவும் பொருத்தமான ஒருவரை முதல்வர் நியமிக்க வேண்டும்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
You Might Also Like
4 மாதங்களில் தவெக ஆட்சி கலையும்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி
திருவண்ணாமலையில் அதிமுக நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இன்னும் 4 மாதங்களில் தவெக ஆட்சி கலையும் அல்லது மாற்றம் ஏற்படும் என எடப்பாடி பழனிசாமி…
2 Min Read
அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம் பேரம்: டிஜிபி அலுவலகத்தில் புகார்
அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம் குதிரை பேரம் நடைபெற்றதாகக் குற்றஞ்சாட்டி, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
1 Min Read
சென்னையில் இன்று மாலை மழை பெய்ய வாய்ப்பு!
சென்னையில் இன்று மாலை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் மழை எதிர்பார்க்கப்படுகிறது.
1 Min Read
உண்மையான ஜிடிபி வளர்ச்சி என்ன? – காங்கிரஸ் கேள்வி
இந்தியாவின் ஏப்ரல்-ஜூன் 2026 காலாண்டிற்கான ஜிடிபி வளர்ச்சி 7.8% என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்தக் கணக்கீடுகள் வெறும் 'கணக்கு வித்தை' என காங்கிரஸ் கட்சி…
2 Min Read
