MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திருமாவளவனை முதல்வராக்க சொன்னேன் – சி.வி.சண்முகம் உண்மை உடைப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திருமாவளவனை முதல்வராக்க சொன்னேன் – சி.வி.சண்முகம் உண்மை உடைப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திருமாவளவனை முதல்வராக்க சொன்னேன் – சி.வி.சண்முகம் உண்மை உடைப்பு

தமிழ்நாடு

திருமாவளவனை முதல்வராக்க சொன்னேன் – சி.வி.சண்முகம் உண்மை உடைப்பு

Fernandez
Last updated: ஆகஸ்ட் 10, 2026 3:31 மணி
Fernandez
Share
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்
SHARE

திமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுகதான் நடத்தியது என்று கூறுவது முற்றிலும் பொய் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

'திமுகவுக்கு நாங்கள்தான் கூட்டணி பேசினோம்' என்று கூறுவது, ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்று சி.வி.சண்முகம் கடுமையாக விமர்சித்தார். மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை முதல்வராக்க வேண்டும் என்று நான்தான் பரிந்துரைத்தேன் என்றும் அவர் வெளிப்படையாக கூறினார்.

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைமருமான ஈ.பி.எஸ் தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்கும் போது, திருமாவளவனை முதலமைச்சராக்கிவிட்டு, மற்ற அதிமுகவினரை அமைச்சர்களாக்கலாம் என அப்போதைய சூழலில் நான் கூறியதாக சி.வி.சண்முகம் நினைவு கூர்ந்தார்.

தொடர்ந்து அதிமுகவின் தோல்விகளுக்கு ஈ.பி.எஸ்ஸே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார். வெற்றி என்றால் ஈ.பி.எஸ் என்றும், தோல்வி என்றால் மாவட்ட செயலாளர்கள் பொறுப்பேற்க வேண்டுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஈ.பி.எஸ்ஸுக்கே அவரது சொந்த மாவட்டத்தில் செல்வாக்கு இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வட மாவட்டங்களில் பாமகவின் ஆதரவால் அதிமுக வெற்றி பெற்றதாகவும், ஆனால் தென் தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றிருப்பதாகவும் அவர் புள்ளிவிவரங்களுடன் விளக்கினார்.

ஈ.பி.எஸ்ஸே அதிமுகவின் பொதுச்செயலாளராக தொடர்கிறார் என்றும், அவர் பொறுப்பேற்ற பிறகு அதிமுக ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறவில்லை என்றும் சி.வி.சண்முகம் குறிப்பிட்டார்.

அதிமுக குறித்து பேசுவதற்கு அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு என்ன தகுதி இருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். சிறையில் இருக்கும் ஒரு குற்றவாளி எங்களுக்கு பாடம் எடுக்கிறார் என்றும் அவர் விமர்சித்தார்.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி வேளாண்துறை அமைச்சராக இருந்தபோது, தன் கீழ் பணியாற்றிய ஒருவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அமைச்சரவையிலிருந்தும் நீக்கப்பட்டார். மேலும் அவர் சிறையிலும் அடைக்கப்பட்டார். அந்த வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளது. அப்படிப்பட்ட குற்றவாளி எங்களுக்கு பாடம் எடுக்கிறார் என்று சி.வி.சண்முகம் ஆவேசமாக கூறினார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKCV ShanmugamDMKEPSThirumavalavanVCKஅதிமுகஈபிஎஸ்சி.வி.சண்முகம்திமுகதிருமாவளவன்விடுதலை சிறுத்தைகள் கட்சி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article ஷவர் மற்றும் குழாய்களில் படிந்துள்ள வெள்ளைக் கறைகள் வினிகர் கொண்டு ஷவர், குழாய் வெள்ளைக் கறைகளை நீக்குவது எப்படி?
Next Article மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு நாடாளுமன்றத்தில் பேசுகிறார் டெல்லி மாணவர் போராட்டம்: நாடாளுமன்றத்தில் அமித் ஷா பதிலளிப்பார் – கிரண் ரிஜிஜு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

நொய்டா திரையரங்கில் மருத்துவ அவசரப் பெட்டியுடன் அனுமதிக்க மறுக்கப்பட்ட பெண்

நொய்டா திரையரங்கில் சர்க்கரை நோயாளிக்கு அனுமதி மறுப்பு: மன்னிப்பு கோரிய PVR INOX

நொய்டாவில் சர்க்கரை நோயாளிக்கு அவசர மருந்து பெட்டியுடன் திரையரங்கில் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட…

ஆகஸ்ட் 10, 2026

குடிபோதையில் கார் ஓட்டிய பெண் யூடியூபர்: ஓட்டுநர் உரிமம் ரத்து

சென்னையில் குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய…

ஆகஸ்ட் 10, 2026

காவிரி நீர்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் புதிய மனு – ஆக.13-ல் விசாரணை

கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு காவிரி நீரை உடனடியாக விடுவிக்க…

ஆகஸ்ட் 10, 2026

போலி ஐஏஎஸ் அதிகாரி கைது: ரூ.100 கோடி மோசடி அம்பலம்

பாட்னாவில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின்…

ஆகஸ்ட் 10, 2026

டெல்லி மாணவர் போராட்டம்: நாடாளுமன்றத்தில் அமித் ஷா பதிலளிப்பார் – கிரண் ரிஜிஜு

டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை…

ஆகஸ்ட் 10, 2026

You Might Also Like

தமிழ்நாடு

திமுக துணையோடு ஆட்சி அமைக்க இபிஎஸ் ஒப்புக்கொள்ளவில்லை: அக்ரி கிருஷ்ணமூர்த்தி

முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ளார். திமுக துணையோடு ஆட்சி அமைக்க இபிஎஸ் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், திருமாவளவனை முதலமைச்சராக்க எடப்பாடி பழனிசாமி…

1 Min Read
தமிழ்நாடு

அரசு பெரும்பான்மையை நிரூபிக்க இன்று சட்டசபையில் வாக்கெடுப்பு

தமிழக சட்டசபையில் இன்று அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

2 Min Read
தமிழ்நாடு

தயாளு அம்மாள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

திமுக தலைவர் கருணாநிதியின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

1 Min Read
காஞ்சிபுரத்தில் மின்வெட்டு காரணமாக விடுமுறை அளிக்கப்பட்ட பள்ளி
தமிழ்நாடு

மின்வெட்டால் பள்ளிக்கு விடுமுறை: மாணவர்கள் ஏமாற்றம்

காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியில் மின்வெட்டு காரணமாக தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் பள்ளிக்கு வந்த பின்னரே விடுமுறை அறிவிக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?