MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தவெக எம்எல்ஏ-வுடன் வாக்குவாதம்: ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தவெக எம்எல்ஏ-வுடன் வாக்குவாதம்: ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - தவெக எம்எல்ஏ-வுடன் வாக்குவாதம்: ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

அரசியல்

தவெக எம்எல்ஏ-வுடன் வாக்குவாதம்: ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

Admin
Last updated: மே 23, 2026 3:15 மணி
Admin
Share
SHARE

சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்! ராயபுரம் பகுதியில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமணத்தை தட்டிக்கேட்ட பெண் சமூக ஆர்வலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராயபுரம் காவல் ஆய்வாளர் சிதம்பரம் பாரதி, காத்திருப்பு பட்டியலுக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கை காவல் துறையினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் விவரங்கள் அறியையில், ராயபுரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இஸ்லாமிய இளைஞர் ஒருவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது, பெண் சமூக ஆர்வலர் ஒருவர், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் சில உறவினர்களுடன் அங்கு சென்று, நீதி கோரி பதாகைகளை ஏந்தி திருமணத்தை நிறுத்தும்படி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் திருமண மண்டபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ராயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் சிதம்பரம் பாரதி தலைமையிலான போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அந்தப் பெண் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், 8 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்த அவர், வடபழனியில் தங்கி அதே பகுதியில் உள்ள ஒரு மாலில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அவருடன் வேலைபார்த்த சூளைமேடு பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், தன்னை அந்த இளைஞர் இஸ்லாம் மதத்திற்கு மாறச் சொன்னதால் அவரும் மதமாற்றம் செய்துள்ளார். தற்போது வேறொரு பெண்ணுடன் அவருக்கு திருமணம் நடைபெறுவதை அறிந்ததும், அதைத் தடுக்க வந்ததாக அந்தப் பெண் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தின் போது, இளம் பெண்ணுக்கு ஆதரவாக வந்த சமூக ஆர்வலர் மற்றும் சிலரை ஆய்வாளர் சிதம்பரம் பாரதி ஒருமையில் திட்டியதோடு தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நியாயம் கேட்டு காவல் நிலையம் சென்ற ராயபுரம் தொகுதி தவெக எம்எல்ஏ விஜய் தாமுவிடமும் வரம்பு மீறி பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இதுகுறித்து விசாரணை நடைபெற்றதில், ஆய்வாளர் சிதம்பரம் பாரதியை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Chennai NewsPolice Transferகாவல் ஆய்வாளர்சென்னை செய்திகள்தவெக எம்எல்ஏராயபுரம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திருப்பதி: வரலாறு காணாத கூட்டம்! 5 கி.மீ. தூரம் வரை நீண்ட வரிசை!
Next Article கோவை சிறுமி கொடூரம்: முதல்வர் விஜய் கடும் நடவடிக்கை உறுதி!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த செய்தியாளர் சந்திப்பு

பஞ்சாபில் பாஜக-அகாலி தளம் கூட்டணி: தேர்தல் பலன் கிடைக்குமா?

பஞ்சாபில் பாஜகவும் சிரோமணி அகாலி தளமும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணி…

நவம்பர் 24, 2026

யானைகளை இடமாற்றம் செய்யக் கோரி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா

கர்நாடகாவில் காட்டு யானைகள் தாக்கி 2 பேர்…

நவம்பர் 24, 2026

திருப்பதி உண்டியலில் ரூ.3.81 கோடி காணிக்கை: பக்தர்கள் பரவசம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரு நாள் உண்டியல்…

நவம்பர் 23, 2026

சிந்து நதி நீர் ஒப்பந்தம்: பேச்சுவார்த்தைக்கு தயார் – பாகிஸ்தான் அமைச்சர்

புதுடெல்லியில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில்…

நவம்பர் 23, 2026

இந்தியாவிற்கு வெளிநாட்டு முதலீடு தேவை: காங்கிரஸ்

இந்தியாவின் மூலதனச் சந்தைகளில் வெளிப்படைத்தன்மைக்கு பதிலாக வெளிநாட்டு…

நவம்பர் 22, 2026

You Might Also Like

அரசியல்

தவெக அமைச்சர்களின் அணுகுமுறை: விமர்சனமும் வரவேற்பும்

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்று இரு வாரங்கள் ஆகிவிட்டன. சில அமைச்சர்களின் பேச்சுக்கள் வரவேற்பைப் பெற்றாலும், சிலரின் செயல்பாடுகள் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் கிளப்பியுள்ளன. இது…

3 Min Read
அரசியல்

வெளிநாட்டு குடியுரிமை பெற்றும் வாக்களித்த 17 பேர் கைது!

வெளிநாட்டு குடியுரிமை பெற்றும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்த 17 பேர் விமான நிலையங்களில் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

2 Min Read
அரசியல்

கோவை சிறுமி கொடூரம்: அதிமுக கண்டனம், அரசுக்கு இபிஎஸ் கடும் எச்சரிக்கை!

கோவை சிறுமி கொலை சம்பவத்தில் காவல்துறை துரிதமாக செயல்படவில்லை என்றும், அரசின் அலட்சியத்தால் சிறுமியின் உயிரை காப்பாற்ற முடியவில்லை என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

1 Min Read
அரசியல்

திமுக அதிர்ச்சி! அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு – புதிய கூட்டணி?

அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், திமுக கூட்டணியில் உள்ள தமாகாவை 'எங்கள் கூட்டணிக் கட்சிகள்' என்று குறிப்பிட்டது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முதல்வர் ஸ்டாலின் -…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?