MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சென்னை, டெல்டாவில் காலை வெயில், மாலை மழை: வானிலை மையம் அறிவிப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - சென்னை, டெல்டாவில் காலை வெயில், மாலை மழை: வானிலை மையம் அறிவிப்பு!

அரசியல்

சென்னை, டெல்டாவில் காலை வெயில், மாலை மழை: வானிலை மையம் அறிவிப்பு!

Admin
Last updated: மே 16, 2026 8:29 காலை
Admin
Share
SHARE

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக, சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் காலை நேரங்களில் வெயிலும், மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழையும் பெய்யும் என வானிலை ஆய்வாளர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள தீவிர தாழ்வுப்பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் காற்று சுழற்சியுடன் இணைந்து தமிழகத்தின் அருகே நீடித்து வருகிறது. இந்த இரண்டு வானிலை நிகழ்வுகளும் மேற்கு நோக்கி நகர்ந்து செயலிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக கடலோர மாவட்டங்களில் பெய்து வந்த மழை, தற்போது சென்னை உள்ளிட்ட வட கடலோரப் பகுதிகளையும் எட்டியுள்ளது. மேலும், குமரிக்கடல் காற்று சுழற்சியால் கோவை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் மழை தொடர்கிறது.

இன்று (மே 16) செயலிழந்த காற்று சுழற்சி மேற்கு நோக்கி நகரும்போது, தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோரப் பகுதிகளிலும் அவ்வப்போது மழை நீடிக்கும். நாளை (மே 17) முதல் கேரளா, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், கன்னியாகுமரி முதல் நீலகிரி வரை மழை தீவிரமடையும். உள் மாவட்டங்கள் முதல் கடலோர மாவட்டங்கள் வரை மழை பரவலாக இருக்கும். குறிப்பாக மேற்கு மாவட்டங்களில் நல்ல மழையும், கடலோரப் பகுதிகளில் இரவு நேரங்களில் ஆங்காங்கே மழையும் எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மற்றும் திருச்சி உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில், மே 17ஆம் தேதிக்குப் பிறகு, காலை நேரங்களில் வெயிலும், மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழையும் தொடரும். வெப்பச்சலனம் மற்றும் காற்று சுழற்சி இணைந்து மழை தருவதால், அக்னி நட்சத்திர காலத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Chennai RainsTamil Nadu Weatherசென்னை மழைடெல்டா மாவட்டங்கள்வானிலை அறிவிப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article டிரம்ப் சீனா பயணம் நிறைவு: ஈரான் பதற்றம், வர்த்தக ஒப்பந்தங்கள்
Next Article வடலூரில் 103 சவரன் நகை திருட்டு: வெளிநாட்டில் மகன், வீட்டில் தங்கியிருந்தவருக்கு அதிர்ச்சி!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தமிழக முதல்வர் விஜய் கரூர் வருகை

வரும் வெள்ளிக்கிழமை கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய், வரும் வெள்ளிக்கிழமை அன்று திட்டமிட்டபடி கரூர் மாவட்டத்திற்கு வருகை…

ஜூலை 7, 2026

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில்…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

You Might Also Like

அரசியல்

தவெக எம்எல்ஏ-வுடன் வாக்குவாதம்: ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ராயபுரம் பகுதியில் திருமணத்தை தட்டிக்கேட்ட பெண் சமூக ஆர்வலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் சிதம்பரம் பாரதி, காத்திருப்பு பட்டியலுக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.

2 Min Read
அரசியல்

வெளிநாட்டு குடியுரிமை: வாக்களித்தோர் கைது – திமுகMP கண்டனம்!

வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 25 பேர் தமிழக தேர்தலில் முறைகேடாக வாக்களித்ததாக தகவல். திமுக எம்பி வில்சன், வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறையை கடுமையாக விமர்சித்துள்ளார்.

1 Min Read
அரசியல்

திமுக, அதிமுக ஒரே கட்சியாகலாம்: சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் கணிப்பு

திமுக, அதிமுக வருங்காலத்தில் ஒரே கட்சியாக செயல்பட்டாலும் ஆச்சரியமில்லை என சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். இரு கட்சிகளும் கொள்கைகளில் சமரசம் செய்துகொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 Min Read
அரசியல்

திருவள்ளூர்: வெறிநாய் கடித்து 18 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை!

திருவள்ளூர் அடுத்த கக்களூரில் வெறிபிடித்த தெருநாய் ஒன்று ஒரே நாளில் 18 பேரை கடித்து குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் அரசு…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?