பொதுவாக மூட்டு வலி ஏற்பட பல காரணங்கள் உள்ளன. சிலருக்கு மூட்டுத் தேய்மானம், வயோதிகம், அல்லது கீழே விழுந்து அடிபடுவதால் வலி வரலாம். யூரிக் ஆசிட் பிரச்சனையால் ஏற்படும் மூட்டு வலியை எப்படி சரிசெய்வது என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
மனித உடலில் இருந்து வெளியேறும் நச்சுக்கழிவுகளில் ஒன்றுதான் யூரிக் ஆசிட். சிறுநீரகம்தான் இதைச் சுத்திகரித்து வெளியேற்றி நம் ஆரோக்கியத்தைக் காக்கிறது. ஒருவேளை சிறுநீரகங்கள் யூரிக் ஆசிடை சரியாக வெளியேற்றவில்லை என்றால், கை, கால் விரல்களின் முட்டிகளில் பாதிப்பு ஏற்படும். இந்த யூரிக் ஆசிட் பாதிப்பால் மூட்டு வலி வராமல் தடுக்க, பாகற்காய் ஜூஸ் குடிப்பது சிறந்த வழியாகும்.
பாகற்காய் சாறில் இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, கால்சியம் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் ஏராளமாக உள்ளன. இந்த பாகற்காய் ஜூஸ் யூரிக் ஆசிட் அளவைக் குறைத்து நம் ஆரோக்கியத்தைக் காக்கிறது. அதுமட்டுமல்லாமல், சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் ஏற்படாமலும் இது தடுக்கிறது.
ஆரோக்கியம் மிகுந்த பாகற்காய் ஜூஸ் செய்வது எப்படி? முதலில் பாகற்காயில் எலுமிச்சை சாற்றைக் கலந்து ஊற வைக்க வேண்டும். பிறகு, பாகற்காயுடன் மாங்காய் துருவல் மற்றும் இஞ்சி சேர்த்து, தண்ணீர் ஊற்றி மிக்சியில் ஜூஸ் பதத்திற்கு அடிக்க வேண்டும். இதை வடிகட்டி, உப்பு சேர்த்து தினமும் அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறையாவது குடிக்கலாம்.
