பாதாம் பருப்பை அதன் தோலுடன் சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விரிவாகக் காண்போம். பொதுவாக, இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்த பாதாம் தசைகளுக்கு வலு சேர்க்கும் என்றும், வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், பச்சையாக தோலுடன் பாதாம் சாப்பிடும்போது சில பக்க விளைவுகள் ஏற்படக்கூடும்.
பாதாம் தோலை நீக்காமல் சாப்பிட்டால், அது நம்முடைய குடலுக்கு செரிமானம் ஆவதற்கு கடினமாக இருக்கும். இதன் காரணமாக, வயிற்று மந்தம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், பாதாம் தோலில் ஆன்டி நியூட்ரியண்ட்ஸ், டானிக் மற்றும் ஃபைடிக் அமிலம் போன்ற பொருட்கள் உள்ளன. இவை உடலில் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதைத் தடுக்கக்கூடும்.
சில சமயங்களில், தோலுடன் பாதாம் சாப்பிடுவது இரத்தத்தில் பித்தத்தின் அளவை அதிகரிக்கவும் செய்யலாம். எனவே, பாதாம் பருப்பை சாப்பிடுவதற்கு முன், இரவு முழுவதும் அதை தண்ணீரில் ஊறவைத்து, அதன் தோலை நீக்கிய பிறகு சாப்பிடுவது நல்லது.
இரவு முழுவதும் ஊறவைத்த பாதாமை தினமும் 5 முதல் 6 வரை சாப்பிட்டு வந்தால், அன்றைய தினம் முழுவதும் ஆற்றல் மிக்கதாகவும், சுறுசுறுப்பாகவும் உணர முடியும். இது உடலுக்குத் தேவையான சக்தியை அளிக்கிறது.
ஊறவைத்த பாதாமானது புரதச்சத்து, நார்ச்சத்து, விட்டமின் ஈ, ஒமேகா 3, ஒமேகா 6, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஜிங்க் போன்ற பல்வேறு முக்கிய ஊட்டச்சத்துக்களை நிறைவாகக் கொண்டுள்ளது. எனவே, தினமும் குறைந்தது 5 பாதாம் பருப்புகளை சாப்பிட்டு வருவதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாட்டைத் தவிர்க்கலாம்.
மேலும், இரவு முழுவதும் ஊறவைத்த பாதாம் மூளை மற்றும் நரம்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது ஞாபக சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. எனவே, பாதாம் பருப்பை அதன் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவது உடல் நலத்திற்கு நன்மை பயக்கும்.
