MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அதிமுக மகளிரணி: 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அதிமுக மகளிரணி: 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - அதிமுக மகளிரணி: 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

தமிழ்நாடு

அதிமுக மகளிரணி: 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

Admin
Last updated: ஜூலை 2, 2026 7:07 காலை
Admin
Share
SHARE

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மகளிரணியின் செயல்பாடுகள் மற்றும் அதிமுகவின் வளர்ச்சிப் பணிகளில் பெண்களின் பங்களிப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதிமுகவில் உட்கட்சிப் பிரச்சனைகள் உச்சத்தில் இருக்கும் சூழலில், இந்த மகளிர் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

கூட்டத்தில், அதிமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இரவு பகலாக தேர்தல் பணிகளில் ஈடுபட்ட கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி மற்றும் பாராட்டு தெரிவிக்கும் தீர்மானமும் ஒருமனதாக ஏற்கப்பட்டது. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க, தாமதப்படுத்தும் 'பொய்க்கால் குதிரை அரசு' உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

அரசு கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், இளைஞர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இந்த நியமனங்களில் தகுதியானவர்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதிப்படுவதாகவும், இப்பிரச்சினைக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

எதிர்வரும் சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் கண் துஞ்சாமல், கடமை உணர்வோடு பணியாற்றி கட்சிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என மகளிரணி நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் பேசிய அவர், 'துரோகிகள் அதிமுகவை விட்டு வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். அவர்களின் வெளியேற்றம் கட்சிக்கு இழப்பல்ல, மாறாக மேலும் வலுப்படுத்தும்' என்று குறிப்பிட்டார். மேலும், மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்த சட்டமன்ற உறுப்பினர்கள், ராஜினாமா செய்துவிட்டு மாற்றுக் கட்சியில் இணைவது மக்களின் தீர்ப்புக்கு எதிரானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKTamil Nadu Politicsஅதிமுகஎடப்பாடி பழனிச்சாமிதீர்மானங்கள்மகளிரணி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மலச்சிக்கல் தீர, குடல் சீராக: காலையில் வெந்நீர் குடியுங்கள்!
Next Article தமிழகத்தில் ரூ.2500 எப்போது? முதலமைச்சர் விஜய்க்கு வானதி சீனிவாசன் கேள்வி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியர்

அரைகுறை ஆடையுடன் மாணவிகளுடன் குளித்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

மாவட்ட நிர்வாகத்தின் தடை உத்தரவை மீறி, அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர்…

ஆகஸ்ட் 23, 2026

சாலையில் படுத்து ரீல்ஸ்: இளம்பெண் வீடியோவால் பரபரப்பு

சாலையில் படுத்து ரீல்ஸ் வீடியோ எடுத்த இளம்…

ஆகஸ்ட் 23, 2026

ரூ.200 கொடுக்க மறுத்ததால் திருநங்கை கொலை: வாலிபர் கைது

சென்னை: ரூபாய் 200 கொடுக்க மறுத்ததால் தேவி…

ஆகஸ்ட் 23, 2026

மத்திய அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்யுமா? காங்கிரஸ் கேள்வி

பாராளுமன்றக் கூட்டத் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு 10…

ஆகஸ்ட் 23, 2026

வாடிக்கையாளரை உருவ கேலி செய்த காபி நிறுவனம்: மன்னிப்பு கோரிய SUBKO

பெங்களூரு SUBKO காபி நிறுவனம், வாடிக்கையாளரை ரசீதில்…

ஆகஸ்ட் 23, 2026

You Might Also Like

டெல்லியில் கட்டுமானப் பணிகளுக்கு தடை விதித்துள்ள முதல்வர் ரேகா குப்தா
தமிழ்நாடு

டெல்லியில் 42 நாட்கள் கட்டுமானப் பணிகளுக்கு தடை: முதல்வர் அறிவிப்பு

டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த, டிசம்பர் 10 முதல் ஜனவரி 20 வரை 42 நாட்களுக்கு கட்டுமானப் பணிகளுக்கு முதல்வர் ரேகா குப்தா தடை விதித்துள்ளார். விதிமீறல்கள்…

2 Min Read
தமிழ்நாடு

அரசு கலைக் கல்லூரிகளில் 43% இடங்கள் காலியாக உள்ளன – காரணம் என்ன?

தமிழக அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிவடைந்தும், 43 சதவீத இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இதற்கான காரணங்கள் குறித்து கல்வித்துறை ஆய்வு செய்து…

1 Min Read
தமிழ்நாடு

பூவுக்குள் வெடிகுண்டு: இருவர் படுகாயம்!

சென்னையில் பூவுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் இருவர் காயமடைந்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 Min Read
தமிழ்நாடு

வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி கைது

திருப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நிட்டிங் நிறுவன தொழிலாளி சக்திகுமார் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?