MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அதிமுகவில் சமரசம்: எடப்பாடி பழனிசாமி – சிவி சண்முகம் அணி இணைகிறதா?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அதிமுகவில் சமரசம்: எடப்பாடி பழனிசாமி – சிவி சண்முகம் அணி இணைகிறதா?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - அதிமுகவில் சமரசம்: எடப்பாடி பழனிசாமி – சிவி சண்முகம் அணி இணைகிறதா?

தமிழ்நாடு

அதிமுகவில் சமரசம்: எடப்பாடி பழனிசாமி – சிவி சண்முகம் அணி இணைகிறதா?

Admin
Last updated: மே 27, 2026 12:39 மணி
Admin
Share
SHARE

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக 47 இடங்களை மட்டுமே கைப்பற்றிய நிலையில், கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் எழுந்தன. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒரு அணி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையிலான மற்றொரு அணி என அதிமுக இரண்டாகப் பிரிந்தது, இது கட்சிக்குள் மீண்டும் பிளவு ஏற்படுவதற்கான அச்சத்தை ஏற்படுத்தியது.

சட்டமன்றத்தில் த.வெ.க. ஆட்சி அமைக்க பெரும்பான்மையை நிரூபித்த வாக்கெடுப்பின் போது, எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தரப்புக்கு 25 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்தது. அதே சமயம், எடப்பாடி பழனிசாமி தரப்பு அணியில் 22 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே பங்கேற்றனர். இந்த சூழலில், த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக எம்.எல்.ஏ.க்களின் கட்சிப் பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார். மேலும், கட்சி கொறடாவின் உத்தரவை மீறியதாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் மனு அளித்தார். இதற்கு பதிலடியாக, எஸ்.பி.வேலுமணி தரப்பும் கொறடா உத்தரவை மீறியதாக எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை கோரி சபாநாயகரிடம் மனு அளித்தது.

இரு தரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இரு தரப்பு மனுக்களும் ஆய்வில் இருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்திருந்தார். இதற்கிடையில், சிவி சண்முகம் தரப்பைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். அதேபோல், ஆற்காடு சுகுமார், பண்ருட்டி மோகன், காங்கயம் நடராஜன், சங்கரன்கோவில் திலீபன், அந்தியூர் ஹரிபாஸ்கர் ஆகிய 5 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இது சிவி சண்முகம் தரப்புக்கு ஒரு பின்னடைவாகக் கருதப்பட்டது.

இந்த பின்னணியில், கட்சி மூத்த நிர்வாகிகள் நடத்திய சமரசப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தற்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி அணிகளுக்கு இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅதிமுகஅரசியல்எடப்பாடி பழனிசாமிசிவி சண்முகம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திருமண ஏற்பாடு என கூறி 42 குடும்பங்களை ஏமாற்றிய தம்பதி கைது
Next Article மேற்கு வங்கத்தில் 100 திரிணமூல் கவுன்சிலர்கள் ராஜினாமா: பாஜகவில் குவியும் தலைவர்கள்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போக்குவரத்துறை அமைச்சர் பேருந்தில் ஆய்வு

நடத்துனர், ஓட்டுநரிடம் சிக்கிய போக்குவரத்துறை மந்திரி!

பொதுமக்கள் போல் பேருந்தில் சென்ற போக்குவரத்துறை அமைச்சர், சில்லறை இல்லை என்று கூறி…

ஜூலை 12, 2026

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 நிலநடுக்கம்: ஆந்திராவில் அதிர்வு

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம்…

ஜூலை 12, 2026

மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு

மேகாலயா மாநிலத்தில் இன்று மதியம் ரிக்டர் அளவில்…

ஜூலை 12, 2026

பெங்களூரு: மாசடைந்த காற்று – மாதத்திற்கு 10 சிகரெட் புகைப்பது போல!

பெங்களூருவில் சுவாசிக்கப்படும் மாசடைந்த காற்று, ஒரு மாதத்திற்கு…

ஜூலை 12, 2026

ராமர் கோயில் கொள்ளையர்களை தூக்கிலிடும் வரை ஓய மாட்டோம்: கேஜ்ரிவால்

அயோத்தி ராமர் கோயிலில் கொள்ளையடித்தவர்களை தூக்கிலிடும் வரை…

ஜூலை 12, 2026

You Might Also Like

தமிழ்நாடு

ஏ.ஆர். ரஹ்மானுக்கு அமெரிக்காவின் உயரிய ‘கோல்டன் பிளேட்’ விருது

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு அமெரிக்காவின் மிக உயரிய கௌரவங்களில் ஒன்றான 'கோல்டன் பிளேட் விருது' வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச சாதனையாளர்கள் மாநாட்டில் இந்த விருது அவருக்குக் கிடைத்தது.

1 Min Read
அரசியல்

திமுக கூட்டணியை காக்க எனக்கு வலிமை இல்லை – திருமாவளவன்

தேர்தலுக்குப் பின் திமுக கூட்டணியை காக்கும் வலிமை தனக்கு இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் அரசியல் நெருக்கடியால் இந்த முடிவை எடுத்ததாக அவர்…

3 Min Read
தமிழ்நாடு

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சிறுத்தை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புளி சேகரிக்க சென்ற தொழிலாளி வெள்ளியங்கிரி சிறுத்தை தாக்கி உயிரிழந்தார். வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

இபிஎஸ் கொடுத்த பதவியே வேண்டாம்: எஸ்பி வேலுமணி போர்க்கொடி

என்னை நம்பி வந்த 30 மாவட்ட செயலாளர்களுக்கு பதவி வழங்காமல் தனக்கு துணை பொதுச்செயலாளர் பதவி ஏற்க முடியாது என எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?