MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: இபிஎஸ் கொடுத்த பதவியே வேண்டாம்: எஸ்பி வேலுமணி போர்க்கொடி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > இபிஎஸ் கொடுத்த பதவியே வேண்டாம்: எஸ்பி வேலுமணி போர்க்கொடி
தமிழ்நாடு

இபிஎஸ் கொடுத்த பதவியே வேண்டாம்: எஸ்பி வேலுமணி போர்க்கொடி

Admin
Last updated: June 30, 2026 3:44 pm
Admin
Share
SHARE

அதிமுகவில் துணை பொதுச்செயலாளர் பதவி தனக்கு வழங்கப்பட்ட நிலையில், அதை ஏற்க மறுத்து எஸ்பி வேலுமணி மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளார். தன்னை நம்பி வந்த 30 மாவட்ட செயலாளர்களுக்கு பதவி வழங்காமல் தனக்கு மட்டும் பதவி ஏற்பது நியாயமில்லை என்றும், தனக்கு பதவி ஆசை இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கோவையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய எஸ்பி வேலுமணி, 'என்னை நம்பி 30 மாவட்ட செயலாளர்கள் வந்துள்ளனர். அவர்களுக்கு பதவி வழங்காமல் தனக்கு வழங்கப்பட்ட துணை பொது செயலாளர் பதவியை ஏற்க மாட்டேன். தங்கமணி, விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் ஆகியோர்கள் கட்சியில் அந்தந்த மாவட்டத்தின் ஜாம்பவான்கள். என்னை நம்பி வந்த 30 மாவட்ட செயலாளர்களை விட்டுவிட்டு நான் பதவி வாங்குவதற்கு தயாராக இல்லை. நான் மட்டும் துணை பொதுச்செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்ள முடியுமா? எனக்கு பதவி ஆசை இல்லை' என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, அதிமுகவில் உட்கட்சி பூசல் தீவிரமடைந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து எஸ்பி வேலுமணிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்த பதவியை ஏற்க அவர் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

தற்போது, மாவட்ட செயலாளர்களின் நலனை முதன்மையாக கருதி, அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட்ட பின்னரே தனது பதவியை ஏற்பேன் என எஸ்பி வேலுமணி கூறியுள்ளது, அதிமுகவில் மேலும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் நிலவுகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅதிமுகஅரசியல்இபிஎஸ்எஸ்பி வேலுமணி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தங்கம் விலை திடீர் ஏற்றம்: நகை வாங்குவோர் அதிர்ச்சி!
Next Article திலக் வர்மா சுயநலமாக விளையாடினார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆந்திராவில் பழங்குடியினர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார் ஜனாதிபதி முர்மு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, விசாகப்பட்டினம் பழங்குடியினர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று…

June 30, 2026

ஏர் இந்தியா: டெல்லி-மெல்போர்ன் விமான சேவை நாளை முதல் தொடக்கம்

ஏர் இந்தியா, டெல்லி-மெல்போர்ன் இடையே மேம்படுத்தப்பட்ட Boeing…

June 30, 2026

பரீதாபாத் காவல் நிலையத்தில் இருந்து 32 துப்பாக்கிகள் காணாமல் போனது

பரீதாபாத் காவல் நிலையத்தில் இருந்து 32 உரிமம்…

June 30, 2026

நாளை முதல் பெட்ரோல், டீசல் விற்பனைக்கு கட்டுப்பாடு இல்லை

மத்திய அரசு நாளை முதல் பெட்ரோல், டீசல்…

June 30, 2026

பாஸ்போர்ட் முதல் ஆதார் வரை கட்டணம் உயர்வு – நாளை முதல் அமல்!

நாளை முதல் பாஸ்போர்ட் மற்றும் ஆதார் சேவைகளுக்கான…

June 30, 2026

You Might Also Like

தமிழ்நாடு

CSK vs SRH: சென்னை மெட்ரோ சிறப்பு அறிவிப்பு!

ஐபிஎல் 2026 போட்டியை காண வரும் ரசிகர்களுக்காக, சென்னை மெட்ரோ நிர்வாகம் சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணச்சீட்டுடன் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.

1 Min Read
தமிழ்நாடு

‘ஒரே பவர் சென்டர்தான்… ஆட்டம் ஆடலாம் என நினைத்தால்’ – அமைச்சர்களுக்கு விஜய் எச்சரிக்கை

தமிழ்நாட்டின் 14வது முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இப்பதவியேற்பு…

1 Min Read
தமிழ்நாடு

தவெகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு? – திருமாவிடம் கடிதத்தை பெறும் ஆதவ் அர்ஜுனா?

தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் அந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் கட்சி த.வெ.க. வுக்கு ஆதரவு…

1 Min Read
தமிழ்நாடு

டாக்டர் ராமதாஸ் பொதுமக்களை சந்திக்கிறார்: குறைகளை தெரிவிக்கலாம்!

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், நாளை முதல் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் பொதுமக்களையும், கட்சித் தொண்டர்களையும் சந்தித்து குறைகளைக் கேட்டறிய உள்ளார். வாரத்தின்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?