MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் நீக்கம்: 17 ஆண்டு உறவு முடிவு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் நீக்கம்: 17 ஆண்டு உறவு முடிவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் நீக்கம்: 17 ஆண்டு உறவு முடிவு

விளையாட்டு

சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் நீக்கம்: 17 ஆண்டு உறவு முடிவு

Sri Prem Kumar R
Last updated: ஜூலை 13, 2026 12:25 மணி
Sri Prem Kumar R
Share
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்
SHARE

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கை பதவியிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளது. இதன் மூலம் சிஎஸ்கே அணியுடன் கடந்த 17 ஆண்டுகளாக நீடித்து வந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டணி அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது.

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீபன் பிளெமிங், 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் சிஎஸ்கே அணியின் வீரராக இணைந்தார். பின்னர், 2009ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். அவரது நீண்டகாலப் பயிற்சியின் கீழ், சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பையை 5 முறையும், சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பையை 2 முறையும் வென்று சாதனை படைத்துள்ளது.

மேலும், பிளெமிங்கின் பயிற்சியின் போது சிஎஸ்கே அணி 12 முறை பிளே-ஆஃப் சுற்றுகளுக்கும், 10 முறை இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது. இதன் காரணமாக, ஐபிஎல் தொடரின் வரலாற்றிலேயே மிகவும் வெற்றிகரமான பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெமிங் திகழ்ந்தார்.

இருப்பினும், கடந்த மூன்று ஆண்டுகளாக சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. மேலும், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து பெரும் சரிவை சந்தித்தது. இந்தச் சூழலை அடுத்து, பிளெமிங் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பிளெமிங்கின் நீக்கம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ரூபா குருநாத் கூறுகையில், 'எங்கள் அணியின் அடையாளத்தையும் இலக்குகளையும் வடிவமைப்பதில் பிளெமிங் முக்கிய பங்கு வகித்தார். அவரது அர்ப்பணிப்பு மற்றும் தலைமைப் பண்பிற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என்று தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் வெளியிட்டுள்ள குறிப்பில், 'அணியை எப்போதும் முன்னிலைப்படுத்தும் கலாச்சாரத்தை பிளெமிங் உருவாக்கினார். அவரது தாக்கம் மைதானத்தைத் தாண்டியும் நீடிக்கும்' என்று பிளெமிங்கைப் புகழ்ந்துள்ளார்.

சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுவது குறித்துப் பேசிய ஸ்டீபன் பிளெமிங், 'சிஎஸ்கே அணியுடன் பயணித்த இந்த 18 ஆண்டுகள் எனது பயிற்சியாளர் வாழ்க்கையில் கிடைத்த மிகச்சிறந்த கௌரவமாகும். கடினமான காலங்களைக் கடந்து மறக்க முடியாத வெற்றிகளைக் கொண்டாடியுள்ளோம். சிஎஸ்கே அணி எப்போதும் எனது இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும்' என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CSKHead CoachIPLStephen Flemingஐபிஎல்சிஎஸ்கேசென்னை சூப்பர் கிங்ஸ்ஸ்டீபன் பிளெமிங்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி தொடர்பான செய்தி உத்தரபிரதேசத்தில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது
Next Article சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்த செய்தி சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்ச நீதிமன்ற கட்டிடம்

பசு வதைக்கு தடை: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்

தமிழகத்தில் பசு வதைக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை உச்ச நீதிமன்றம்…

ஜூலை 13, 2026

குடியுரிமை விவகாரத்தில் நியாயமான நடைமுறை: உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

குடியுரிமை விவகாரங்களில் நியாயமான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்…

ஜூலை 13, 2026

ரூ.1,000 கடனை ரூ.25,000 ஆக திருப்பித் தந்த கேரளவாசி

1991ல் சவூதி அரேபியாவில் நண்பர்களான கேரளாவைச் சேர்ந்த…

ஜூலை 13, 2026

சபரிமலை விவகாரத்தில் ஐகோர்ட் எல்லை மீறுகிறது – கேரள மந்திரி

சபரிமலை கோவில் நிர்வாக விவகாரங்களில் கேரள உயர்…

ஜூலை 13, 2026

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பெற்றோரின் எஸ்ஐஆர் விவரம் கட்டாயம்

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விரும்பும்…

ஜூலை 13, 2026

You Might Also Like

இலங்கை யு-19 அணிக்கு எதிரான போட்டியில் இந்திய யு-19 அணி வீரர்கள்
விளையாட்டு

ராகுல் டிராவிட் மகன் அன்வே டிராவிட் சதம் வீண்: இலங்கையிடம் இந்திய யு-19 அணி தோல்வி

இலங்கை யு-19 அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், ராகுல் டிராவிட்டின் மகன் அன்வே டிராவிட் 87 ரன்கள் எடுத்தும் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில்…

2 Min Read
விளையாட்டு

மகளிர் டி20 உலகக் கோப்பை: இந்தியா அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு?

மகளிர் டி20 உலகக் கோப்பை: குரூப் ஏ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை. இதில் எந்த இரு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என முன்னாள்…

2 Min Read
விளையாட்டு

IPL 2026: துவம்சம் செய்த ஸ்ரேயாஸ், பிரியான்ஷ்.. மிரண்டு போன டெல்லி கேப்பிடல்ஸ்.. 210 ரன் குவிப்பு

தரம்சாலா: டெல்லி கேப்பிடல்ஸ் பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்து 210 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. குறிப்பாக உலகின் முன்னணி பந்துவீச்சாளரான மிட்செல்…

2 Min Read
விளையாட்டு

இந்திய தொப்பியின் மதிப்பு குறைகிறது: கவாஸ்கர் கண்டனம்

இந்திய கிரிக்கெட் அணியின் தொப்பியின் மதிப்பை குறைப்பதாக பிசிசிஐ-ஐ விமர்சித்த சுனில் கவாஸ்கர், வீரர்களுக்கு ஆண்டுக்கு ஒரு மாதமாவது கட்டாய ஓய்வு வழங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?