MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: வீடியோ எடுத்தது ஊடகங்கள்: அமைச்சர் கீர்த்தனா விளக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - வீடியோ எடுத்தது ஊடகங்கள்: அமைச்சர் கீர்த்தனா விளக்கம்

தமிழ்நாடு

வீடியோ எடுத்தது ஊடகங்கள்: அமைச்சர் கீர்த்தனா விளக்கம்

Admin
Last updated: ஜூலை 6, 2026 9:30 மணி
Admin
Share
அமைச்சர் கீர்த்தனா விளக்கம் அளிக்கும் காட்சி
அமைச்சர் கீர்த்தனா செய்தியாளர்களுக்கு விளக்கம் அளிக்கிறார்
SHARE

சிவகாசி அரசுப் பள்ளியில் காணப்பட்ட அவலநிலை குறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் கீர்த்தனா, "அந்த வீடியோவை நாங்கள் எடுக்கவில்லை, ஊடகங்கள்தான் பதிவு செய்தன" எனத் தெரிவித்துள்ளார். அரசியல் என்பது உண்மைகளை மறைப்பதல்ல, குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதே முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதுகுறித்து அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், "இது ஒரு பள்ளியின் அவலநிலை மட்டுமல்ல; பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகள் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டன என்பதற்கான சாட்சியம்!" எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் அவர் நேரடியாகக் கேள்வி எழுப்பினார். கழிப்பறை வசதி, உடற்கல்வி ஆசிரியர், கணினி ஆசிரியர் இல்லாமலும், பள்ளி வளாகம் முழுவதும் புதர்கள் மண்டிக்கிடந்த நிலையிலும் அடிப்படை வசதிகள்கூட இல்லாத அரசுப் பள்ளிகள் இருந்தபோது, உங்களுடைய முன்னுரிமை எங்கே இருந்தது? என அவர் வினவினார்.

இன்றைய நிலையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர்களைக் குறை கூறுவதற்குப் பதிலாக, இந்த அவலநிலை ஏன் உருவானது என்பதற்கு மக்களுக்குப் பதில் சொல்லுங்கள். நான் சிவகாசி அரசுப் பள்ளிக்குச் சென்றது அரசியல் செய்வதற்காக அல்ல. அது என் தொகுதி! அந்த மாணவர்களின் குரலை சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கொண்டு சேர்ப்பது என் உரிமையும், கடமையுமாகும் என்றும் அவர் விளக்கினார்.

மேலும், தான் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் படித்தவள் என்றும், இன்று அந்தக் குழந்தைகளில் ஒருத்தியாகவே தன்னைப் பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். உயர்கல்விக்கும், கார்ப்பரேட் உலகிற்கும் சென்றபோது, அரசுப் பள்ளியில் படித்துவிட்டு வரும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைத் தானே நேரடியாக அனுபவித்திருப்பதாகவும், அதனால்தான் இந்த மாணவர்களின் எதிர்காலம் தனக்கு அரசியலைவிட மிக முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் எதிர்காலம் இந்த மாணவர்களின் கைகளில்தான் இருக்கிறது. அவர்களுக்கு அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் விட்டுவிட்டு, உண்மையைச் சொல்பவர்களைக் குறை கூறுவது தீர்வாகாது. இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவை எடுத்தது எங்கள் குழு அல்ல; என்னுடன் வந்திருந்த ஊடகங்கள்தான் அந்தக் காட்சிகளைப் பதிவு செய்தன. ஆகவே, வீடியோவை யார் எடுத்தார்கள் என்பதல்ல இங்கே கேள்வி; அந்த வீடியோவில் ஏன் அப்படிப்பட்ட அவலநிலை இருந்தது என்பதுதான் உண்மையான கேள்வி! என அவர் சுட்டிக்காட்டினார்.

தன் மீது பொய்யான கதைகளைக் கட்டி, மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிப்பதை விடுத்து, பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்துவதே இப்போதைய தேவை. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலிலும், மாண்புமிகு தற்போதைய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்களுடனும் இணைந்து, இந்த நிலையை மாற்றுவதற்காகவே நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம் என அமைச்சர் கீர்த்தனா உறுதியளித்தார். அரசியல் என்பது உண்மையை மூடிமறைப்பது அல்ல; நம் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதுதான் என அவர் தனது விளக்கத்தை நிறைவு செய்தார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Government SchoolsTamil Nadu Politicsஅமைச்சர் கீர்த்தனாஅரசுப்பள்ளிஅன்பில் மகேஷ் பொய்யாமொழிசிவகாசிபள்ளிக்கல்வித்துறைராஜ்மோகன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article யமஹா R2 பைக் அறிமுகம் யமஹா R2: KTM, ஹீரோவுக்கு சவால் விடும் புதிய பைக்!
Next Article நடிகர் அருண் விஜய் தனது 38வது படத்திற்காக உடற்பயிற்சி செய்யும் காட்சி 38வது படத்திற்காக உடலை தயார் செய்யும் நடிகர் அருண் விஜய்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மனைவி ஒருவர் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் தொடர்பான செய்தி

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

3 தொகுதி காலியானதாக அறிவிப்பு: த.வெ.க. அரசுக்கு ஆதரவு

தமிழகத்தில் மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் ஆகிய 3 தொகுதிகள் காலியானதாக அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது. த.வெ.க. அரசுக்கு ஆதரவு தெரிவித்த 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

போலீசுக்கே பாதுகாப்பு இல்லை: உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை கோடம்பாக்கத்தில் சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல், வேளச்சேரியில் பெண்மணிக்கு துன்புறுத்தல், கும்பகோணத்தில் காவலருக்கு கை உடைப்பு போன்ற சம்பவங்களை சுட்டிக்காட்டி, #SofaModelஆட்சியில் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என…

1 Min Read
தமிழ்நாடு

சென்னை-திருப்பதி இடையே சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரத்து: பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே இயக்கப்படும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, தண்டவாள சீரமைப்பு பணிகள் காரணமாக ஜூன் 19, 21 ஆகிய தேதிகளில் ரத்து…

1 Min Read
தமிழ்நாடு

தாய்மார்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த அன்னையர் தின நல்வாழ்த்துகள் – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- இறைவன் நமக்குத் தந்த மிகப்பெரிய கொடையாகவும், தாய்மை எனும் பெருங்குணத்தை ஏந்திய தியாகத்தின்…

0 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?