MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நெல்லை இரட்டை கொலை: தவெக அரசை வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்தார்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நெல்லை இரட்டை கொலை: தவெக அரசை வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்தார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நெல்லை இரட்டை கொலை: தவெக அரசை வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்தார்

தமிழ்நாடு

நெல்லை இரட்டை கொலை: தவெக அரசை வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்தார்

Admin
Last updated: ஜூலை 3, 2026 7:39 காலை
Admin
Share
SHARE

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மற்றும் அவரது 5 வயது மகன் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டதும், மற்றொரு மகன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டதும் நெஞ்சைப் பதைபதைக்க வைப்பதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "அந்த பிஞ்சுக் குழந்தைகளின் எதிர்காலக் கனவுகள் சிதைக்கப்பட்டு இன்று சமூக விரோதிகளின் கொலைப்பசிக்கு ஆளாகி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சகட்டமாக இன்று ஓர் குடும்பமே அழிந்திருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பழிக்குப் பழி சம்பவங்கள், முன்விரோத சம்பவங்களால் இரத்த ஆறு ஓடுவது சட்டம் ஒழுங்கில் தவெக அரசின் நிர்வாகத் தோல்விக்கு மற்றுமோர் ரத்த சாட்சி என வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார். சட்டம் – ஒழுங்கினைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையின் அலட்சியப் போக்கால் தென்மாவட்டங்கள் சமூக விரோதிகளின் கூடாரங்களாக மாறி கொடூரக் கொலைகளை அரங்கேற்றும் இடங்களாக உருவாகியிருப்பது வேதனை அளிப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

தினந்தோறும் இத்தனை கொலைகள், குற்றங்கள் நடைபெறுவதைக் கண்டு சட்டம் ஒழுங்கினை வலுப்படுத்த வேண்டிய முதல்வர், அதனை விட்டுவிட்டு தனது கூட்டணியை வலுப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறார் என வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். "அந்தச் சிறுவர்களின் மரண ஓலங்கள் உங்கள் காதுகளில் விழவில்லையா முதல்வர் விஜய்?" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈவு இரக்கமற்ற முறையில் இத்தகைய படுபாதகச் செயலைப் புரிந்த குற்றவாளிகளை விரைவில் கைது செய்து கடும் தண்டனை பெற்றுத் தர காவல்துறையை வலியுறுத்துவதாக வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:சட்டம் ஒழுங்குதமிழக அரசியல்தவெக அரசுநெல்லை இரட்டை கொலைவானதி சீனிவாசன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பாராமெடிக்கல் படிப்புகள்: விண்ணப்பிக்க ஜூலை 7 வரை கால அவகாசம் நீட்டிப்பு!
Next Article மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்திக்க இபிஎஸ் திட்டம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

டி-ரெக்ஸ் டைனோசர் எலும்புக்கூடு ஏலத்தில் விற்பனை
தமிழ்நாடு

482 கோடிக்கு ஏலம் போன டி-ரெக்ஸ் எலும்புக்கூடு: உலக சாதனை!

நியூயார்க்கில் நடைபெற்ற ஏலத்தில் 'டி-ரெக்ஸ்' டைனோசர் எலும்புக்கூடு 'கஸ்' சுமார் 482 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உலக சாதனை படைத்துள்ளது. இது முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவது எப்படி…?

தமிழகத்தின் முதல்-அமைச்சராக விஜய் இன்று பதவி ஏற்கிறார். அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்கின்றனர். ஆனால் இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியுடன் த.வெ.க. அரசு தனது பயணத்தை தொடங்கிவிட…

2 Min Read
இயக்குநர் பா.ரஞ்சித் போராட்டத்தில் பேசுதல்
தமிழ்நாடு

விஜய் அதிகாரத்துக்காக சமரசம் செய்கிறாரா? – பா.ரஞ்சித் கேள்வி

விஜய் அதிகாரத்துக்காக சமரசம் செய்கிறாரா? என இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார். நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார்.

4 Min Read
இரண்டு தலைகளுடன் காணப்படும் அரிதான ஆமைக் குஞ்சு
தமிழ்நாடு

5.2 கிராம் எடையில் இரண்டு தலை ஆமை: உலகை வியப்பில் ஆழ்த்திய அதிசயம்!

அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் 5.2 கிராம் எடையில் இரண்டு தலைகளுடன் பிறந்த அரிதான 'டைமண்ட் பேக் டெர்ராபின்' ஆமைக் குஞ்சு கண்டெடுக்கப்பட்டுள்ளது. கேப் வனவிலங்கு மையத்தினர் கண்காணித்து வருகின்றனர்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?