திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மற்றும் அவரது 5 வயது மகன் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காளிமுத்து என்பவர் தனது மூத்த மகன் சின்னராஜ் (12) மற்றும் இளைய மகன் ஜெயராஜ் (5) ஆகியோருடன் நெல்லிக்காய் பறிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு கும்பல் காரில் வந்து காளிமுத்துவின் வாகனம் மீது மோதி அவரை கீழே தள்ளிவிட்டு சரமாரியாக வெட்டியுள்ளது. இதில், காளிமுத்துவின் தலையை மட்டும் நெடுஞ்சாலையின் நடுவே வைத்துவிட்டு அந்தக் கும்பல் தப்பியோடியது. இந்த கொடூர சம்பவத்தில் 5 வயது சிறுவன் ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். மேலும், மூத்த மகன் சின்னதுரை பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன்பு பெருமாள் பாண்டியன் என்பவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழி தீர்க்கும் வகையில் இந்த கொலை நடந்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக காளிமுத்து சேர்க்கப்பட்டிருந்தார். தற்போது, காளிமுத்துவின் தலையை அறுத்து எடுத்துச் சென்ற கும்பல், மூலச்சி ஊருக்குள் வைத்துச் சென்றது. இந்த கொடூர கொலை கும்பலை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
You Might Also Like
நெல்லை: ஒரே நாளில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
நெல்லை மாநகரில் நேற்று ஒரே நாளில் 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு அடக்க காவல்துறை தீவிர…
1 Min Read
வாடகை கார் ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை: விமானப் பணிப்பெண் புகார்
ஹைதராபாத்தில் விமானப் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வாடகைக் கார் ஓட்டுநர் கைது. ஜூலை 20 அன்று பட்டப்பகலில் நடந்த கொடூர சம்பவம். பாதிக்கப்பட்ட பெண் புகார்…
1 Min Read
செவிலியர் வேலை வாங்கித் தருவதாக ரூ.11 லட்சம் மோசடி: மருத்துவமனை ஊழியர் கைது
சென்னையில் உள்ள பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் செவிலியர் பணி வாங்கித் தருவதாகக் கூறி, 10.81 லட்சம் ரூபாய் மோசடி செய்த மருத்துவமனை ஊழியர் ஒருவரை ஆவடி மத்திய…
1 Min Read
திருத்தணி அருகே ஆடு மேய்க்காத சிறுவன் கொலை: பண்ணை உரிமையாளர் கைது
திருத்தணி அருகே ஆடுகளை சரியாக மேய்க்காததால் 15 வயது சிறுவனை பண்ணை உரிமையாளர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பண்ணை உரிமையாளர் உட்பட இருவர்…
1 Min Read
