நாம் அன்றாடம் உட்கொள்ளும் பழங்களில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. அந்த வகையில், திராட்சை பழத்தை ஜூஸாகவோ அல்லது அப்படியேவோ சாப்பிடுவது பல்வேறு நன்மைகளைத் தருகிறது. திராட்சை ஜூஸ் அருந்துவதால் வளர்சிதை மாற்றம் (metabolism) மேம்படும், இரத்த அழுத்தம் சீராகும், உடல் எடை குறையவும் உதவும்.
திராட்சை ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகளவில் உள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும். மேலும், இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைச் சீராக்க துணைபுரிகிறது. வைட்டமின் சி-யும் இதில் அடங்கியுள்ளது, இது வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு அவசியமாகும். திராட்சை சாற்றில் உள்ள விட்டமின்கள் உடலில் வெள்ளை இரத்த அணுக்களை உருவாக்க உதவுகின்றன.
புற்றுநோய், அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற நாள்பட்ட நோய்களைத் தடுக்க திராட்சை ஜூஸில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உதவுகின்றன. இவை நமது செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கவும் துணை நிற்கின்றன. மேலும், திராட்சை சாற்றில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிஃபீனால்கள் மூளை ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவை. இதன் ஊட்டச்சத்துக்கள் நினைவாற்றல், அறிவாற்றல் செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
தினமும் திராட்சை சாறு குடிப்பது சருமத்தை இளமையாகவும் பொலிவாகவும் வைத்திருக்க உதவும். அத்துடன், தலைமுடியை வலுவாகவும் பளபளப்பாகவும் பராமரிக்கவும் இந்த ஜூஸ் பயனுள்ளதாக இருக்கும்.