MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மேற்கு வங்கத்தில் 100 திரிணமூல் கவுன்சிலர்கள் ராஜினாமா: பாஜகவில் குவியும் தலைவர்கள்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மேற்கு வங்கத்தில் 100 திரிணமூல் கவுன்சிலர்கள் ராஜினாமா: பாஜகவில் குவியும் தலைவர்கள்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - மேற்கு வங்கத்தில் 100 திரிணமூல் கவுன்சிலர்கள் ராஜினாமா: பாஜகவில் குவியும் தலைவர்கள்

இந்தியா

மேற்கு வங்கத்தில் 100 திரிணமூல் கவுன்சிலர்கள் ராஜினாமா: பாஜகவில் குவியும் தலைவர்கள்

Admin
Last updated: மே 27, 2026 12:40 மணி
Admin
Share
SHARE

மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 100 திரிணமூல் காங்கிரஸ் கவுன்சிலர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, பட்​பாரா நகராட்சியில் ஒரே நேரத்தில் 30 கவுன்சிலர்கள் ராஜினாமா கடிதங்களை அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஹலிசஹர் நகராட்சியில் 16, கஞ்சரபாரா 14, கருலியா நகராட்சியில் 18, நார்ட் பாரக்பூர் நகராட்சியில் 15, கொண்டாய் நகராட்சியில் 14 கவுன்சிலர்கள் என பல நகராட்சிகளிலும் திரிணமூல் கவுன்சிலர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இது திரிணமூல் காங்கிரஸின் உட்கட்சி பூசல்களையும், கட்சித் தலைமை மீதான அதிருப்தியையும் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த கால திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியின் ஊழல் விவகாரங்கள் குறித்து தற்போது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், பல உள்நாட்டு அமைப்புகளில் திரிணமூல் கவுன்சிலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த அச்ச உணர்வின் காரணமாகவே ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது திரிணமூல் காங்கிரஸின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் கொல்கத்தாவில் நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில், திரிணமூல் காங்கிரஸ் எம்பி காக்லி கோஷ் தஸ்திதார் பங்கேற்றார். இவர் சில நாட்களுக்கு முன்பு திரிணமூலின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகினார். மேலும், திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த அனிசூர் ரஹ்மான் பிதேஷ், புர்கானுல் முகாதீன், வீணா மண்டல், அப்துல் மாதின் ஆகிய 4 எம்எல்ஏக்கள் முதல்வரின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். மேலும் சில திரிணமூல் எம்எல்ஏக்களும் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டமன்றத் தேர்தலில் பாஜக 208 இடங்களை கைப்பற்றிய நிலையில், திரிணமூல் காங்கிரஸ் 80 இடங்களை மட்டுமே பெற்றது. எம்எல்ஏக்கள் அணி மாறுவதால் திரிணமூலின் பலம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த சூழலில், கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, 'விரும்பாதவர்கள் கட்சியில் இருந்து தாராளமாக வெளியேறலாம்' என்று தெரிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:West Bengal Politicsஅரசியல்கவுன்சிலர் ராஜினாமாதிரிணமூல் காங்கிரஸ்பாஜகமேற்கு வங்கம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அதிமுகவில் சமரசம்: எடப்பாடி பழனிசாமி – சிவி சண்முகம் அணி இணைகிறதா?
Next Article ஐபிஎல் பிளே ஆஃப்: 10 ஆண்டு சாதனையை முறியடிக்கத் தவறிய விராட் கோலி!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் சாதி இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம் நடைபெறும் காட்சி

டெல்லியில் சாதி இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம்

டெல்லி ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையில் சீர்திருத்தங்கள்…

ஆகஸ்ட் 21, 2026

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை: அமெரிக்க ஆணையத்தின் கோரிக்கைக்கு இந்தியா கண்டனம்

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை விதிக்க அமெரிக்க அரசிடம்…

ஆகஸ்ட் 21, 2026

மும்பை – திருவனந்தபுரம் இடையே ஓணம் சிறப்பு ரயில்: முன்பதிவு நாளை தொடக்கம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு மும்பை - திருவனந்தபுரம்…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லியில் ஒரே நாளில் 114 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு

டெல்லியில் ஆகஸ்ட் 20 அன்று 114 பேருக்கு…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லி போலீஸ் மீது வழக்கு: ராகுல் காந்தி போராட்டம் வெற்றி

டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூலை 20 அன்று…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

தமிழ்நாடு

விஜய் குட்டிக்கதை தவறு இல்லை: நிர்மலா சீதாராமன்

தமிழகத்திற்கு நிதி நிலுவை எதுவும் இல்லை என்றும், முதல்வர் விஜய் குட்டி கதை சொன்னதில் தவறில்லை என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம்…

1 Min Read
இந்தியா

அசாம் மாநில முதல்வராக 2-வது முறையாக நாளை ஹிமந்த பிஸ்வா சர்மா பதவியேற்பு

குவாஹாட்டி: அ​சாம் மாநில முதல்​வ​ராக 2-வது முறை​யாக ஹிமந்த பிஸ்வா சர்மா நாளை பதவி​யேற்க உள்​ளார். அசாம் தேர்​தலில் பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் (என்​டிஏ) கூட்​ட​ணி,…

1 Min Read
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு

யுபிஐ கட்டணம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் – நயினார் நாகேந்திரன்

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
கொல்கத்தா தீ விபத்து நிகழ்ந்த ஓட்டல் கட்டிடம்
இந்தியா

கொல்கத்தா ஓட்டல் தீ விபத்து: 9 பேர் உயிரிழப்பு – ஜனாதிபதி இரங்கல்

கொல்கத்தா ஓட்டல் தீ விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?