MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மேகேதாட்டு அணை: சட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்த முதல்வர் விஜய் உத்தரவு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மேகேதாட்டு அணை: சட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்த முதல்வர் விஜய் உத்தரவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - மேகேதாட்டு அணை: சட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்த முதல்வர் விஜய் உத்தரவு

அரசியல்

மேகேதாட்டு அணை: சட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்த முதல்வர் விஜய் உத்தரவு

Admin
Last updated: மே 25, 2026 4:14 மணி
Admin
Share
SHARE

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ள நிலையில், தமிழகத்தின் உரிமையையும் விவசாயிகளின் நலனையும் பாதுகாக்க சட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் காவிரி நதிநீர் வல்லுநர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராக அமையக்கூடிய மேகேதாட்டு அணைத் திட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு இதுவரை மேற்கொண்ட சட்டப் போராட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, கடந்த 30.11.2018 மற்றும் 07.06.2022 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுக்கள் குறித்து ஆராயப்பட்டது.

கடந்த 13.11.2025 அன்று இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேகேதாட்டு அணை திட்டத்திற்கு எந்த அனுமதியும் வழங்கவில்லை என்றும், இது ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், இந்த திட்டம் முந்தைய தீர்ப்புக்கு உட்பட்டதா என்பதை மத்திய நீர்வளக் குழுமமே தீர்மானிக்க முடியும் என்றும் கூறி வழக்கை முடித்து வைத்தது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் 13.11.2025 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து, தமிழ்நாடு அரசால் சீராய்வு மனு 11.12.2025 அன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த சீராய்வு மனு முந்தைய ஆட்சிக் காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் உள்விசாரணை நடைபெற்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு, தற்சமயம் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த தீர்ப்பு விவரங்களைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டவும், விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கவும் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், பொதுப் பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Mekedatu Damகாவிரி நீர்சட்டப் போராட்டம்தமிழ்நாடு அரசுமுதல்வர் விஜய்மேகேதாட்டு அணை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கார்த்தி 30வது படத்தின் பூஜை ஐதராபாத்தில் கோலாகலம்
Next Article மதுரையில் மாணவன் கொலை: செல்வப்பெருந்தகை வேதனை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜம்மு காஷ்மீரில் கைது செய்யப்பட்ட பதிப்பாளர்கள்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை புகழ்ந்த பதிப்பாளர்கள் கைது

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளை பெருமைப்படுத்தும் புத்தகம் வெளியிட்டதால் 3 பதிப்பாளர்கள்…

ஜூலை 13, 2026

ககன்யான் விண்கலம்: 3 சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு

ககன்யான் விண்கலத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்று புதிய சோதனைகள்…

ஜூலை 13, 2026

குதிரை பேரம்: உமர் அப்துல்லா குற்றச்சாட்டுக்கு பாஜக கண்டனம்

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பா.ஜ.க.…

ஜூலை 13, 2026

கணவர் மீது வழக்கு: கோமியத்தை குடிக்க வற்புறுத்தல்

தானே மாநகரில், மனைவியை கோமியத்தை குடிக்க வற்புறுத்திய…

ஜூலை 13, 2026

ஆந்திராவில் மீண்டும் கொரோனா: 2 பேர் உயிரிழப்பு, 8 பேருக்கு தொற்று

ஆந்திராவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.…

ஜூலை 13, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

விவசாயிகளுக்கு குஷியான செய்தி: பயிர் கடன் 100% தள்ளுபடி என முதல்வர் விஜய் அறிவிப்பு!

கூட்டுறவு வங்கிகளில் ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு 100% கடன் தள்ளுபடி என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இதன் மூலம் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள்…

1 Min Read
அரசியல்

தனி சின்னத்தில் போட்டியிட மமக முடிவு: ஜவாஹிருல்லா விளக்கம்

தேர்தல் ஆணையத்தால் பதிவு ரத்து செய்யப்பட்ட சூழலில், மனிதநேய மக்கள் கட்சியின் பதிவை மீட்டெடுக்க தனி சின்னத்தில் போட்டியிடுவது அவசியம் என அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா விளக்கம்…

2 Min Read
அரசியல்

பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிப்பு: தமிழக வெற்றிக் கழக வாக்குறுதிக்கு எதிரானது – இந்திய கம்யூனிஸ்ட் அதிருப்தி

விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிப்பு, தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிக்கு எதிரானது என்றும், இது விவசாயிகளின் கடன் சுமையை முழுமையாக தீர்க்காது என்றும் இந்தியக்…

1 Min Read
அரசியல்

தலித் முதல்வர் ஆக முடியாது – திருமாவளவன் பேச்சு!

தமிழகத்தில் தலித் முதலமைச்சர் ஆவது எளிதல்ல என்றும், திமுக-அதிமுக கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இல்லை என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?