MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 3 கொலைகள்: காதலனுடன் சேர்ந்து மகளே செய்த கொடூரம் – பகீர் வாக்குமூலம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 3 கொலைகள்: காதலனுடன் சேர்ந்து மகளே செய்த கொடூரம் – பகீர் வாக்குமூலம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - 3 கொலைகள்: காதலனுடன் சேர்ந்து மகளே செய்த கொடூரம் – பகீர் வாக்குமூலம்

தமிழ்நாடு

3 கொலைகள்: காதலனுடன் சேர்ந்து மகளே செய்த கொடூரம் – பகீர் வாக்குமூலம்

Admin
Last updated: ஜூன் 26, 2026 2:10 மணி
Admin
Share
SHARE

பெங்களூரு அருகே அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த கொடூர தாக்குதலில் தாய், மகள் உட்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலையில் மகளே தனது காதலனுடன் சேர்ந்து ஈடுபட்டதாக வெளியான தகவல்கள் மேலும் பரபரப்பை கூட்டியுள்ளன. பயத்தில் தான் அனைவரையும் குத்தியதாக ஸ்வேதா வாக்குமூலம் அளித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர். புரம் பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் (55) – முத்துலட்சுமி (48) தம்பதியினரின் மூத்த மகள் ஸ்வேதா (24). இவருக்கு ஸ்வேதா தவிர சுப்ரியா (20) என்ற மற்றொரு மகளும் உள்ளார். கடந்த 22ஆம் தேதி இரவு, ஸ்வேதா தனது காதலன் கென்னத்துடன் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு பெற்றோர் மற்றும் தங்கை சென்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தில், ஸ்வேதா தனது காதலன் கென்னத்துடன் சேர்ந்து தாய் முத்துலட்சுமி, தங்கை சுப்ரியா ஆகியோரைக் கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், படுகாயமடைந்த தந்தை சோமசுந்தரத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொடூர சம்பவத்திற்குப் பிறகு, ஸ்வேதாவும் அவரது காதலன் கென்னத்தும் பைக்கில் தப்பிச் சென்றுள்ளனர். தனிப்படை அமைத்து இருவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி புதுச்சேரி ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த ஸ்வேதாவை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில், 'எனது வீட்டில் எனக்கு சுதந்திரம் இல்லை. மன அழுத்தத்தில் இருந்தபோது கென்னத்தை காதலித்தேன். பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களுக்குத் தெரியாமல் காதலனுடன் வாடகை வீட்டில் லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்தேன். வீட்டிற்கு வந்த தாயைக் கொன்ற பிறகு, தங்கை சுப்ரியாவையும், பின்னர் அலறல் சத்தம் கேட்டு வந்த தந்தையையும் பயத்தில் குத்திவிட்டேன்' என்று ஸ்வேதா வாக்குமூலம் அளித்துள்ளார்.

கொலைக்குப் பின் இருவரும் திருவண்ணாமலைக்கு தப்பிச் சென்றுள்ளனர். அங்கு பைக் பழுதானதால், ஸ்வேதாவை மட்டும் புதுச்சேரி பேருந்தில் ஏற்றிவிட்டு கென்னத் தலைமறைவாகியுள்ளார். கென்னத்தை பிடிக்க தமிழ்நாடு மற்றும் கர்நாடக போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். நேற்று இரவு புதுச்சேரி அண்ணா சாலைப் பகுதியில் பதுங்கியிருந்த கென்னத்தை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். ஸ்வேதா தனது வாக்குமூலத்தில் கென்னத் கொலை செய்யவில்லை என நாடகமாடிய நிலையில், தந்தை சோமசுந்தரம் மரண வாக்குமூலத்தில் 'கென்னத்தான் எங்களைக் கத்தியால் குத்தினார்' என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால், கொலையில் கென்னத்தின் நேரடிப் பங்கு உறுதியாகியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Crime Newsகாதலர் ஜோடிகொலைதிருவண்ணாமலைபுதுச்சேரிபெங்களூரு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article டாடா நிறுவனத்தின் அடுத்த 5 மின்சார கார்கள்: குட்டி, பட்ஜெட், அதிக மைலேஜ்!
Next Article முதல்-அமைச்சர் விஜய்: போதைக்கு எதிராக இளைஞர்களுடன் ஓட்டம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவையைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்…

அக்டோபர் 7, 2026

பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரி…

அக்டோபர் 7, 2026

விமானப் படை புதிய தளபதி: அசுதோஷ் தீட்சித் நியமனம்

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஏர்…

அக்டோபர் 7, 2026

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை: 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை தொடர்பாக, வரும்…

அக்டோபர் 7, 2026

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின்…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தமிழ்நாடு

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு விழிப்புணர்வு – சென்னை கலெக்டர் அறிவிப்பு

சென்னையில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பெண்களுக்கான தொழில் நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

1 Min Read
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் உரையாற்றுகிறார்
தமிழ்நாடு

திமுகவை மிஸ் செய்கிறோம் – ஆதவ் அர்ஜுனா அழைப்பு

திமுகவினரை நாங்கள் மிஸ் செய்வதாகவும், மக்களுக்காக சண்டையிட விரைவில் வாருங்கள் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு விடுத்துள்ளார். எதிர்கட்சிகளை எதிரியாக பார்க்க வேண்டியதில்லை என்றும் அவர்…

2 Min Read
வேளாங்கண்ணி கடற்கரை மற்றும் புனித ஆரோக்கிய மாதா பேராலயம்
தமிழ்நாடு

வேளாங்கண்ணி: புனித ஆரோக்கிய மாதா திருவிழாவையொட்டி கடலில் குளிக்க தடை

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழாவையொட்டி, பொதுமக்கள் கடலில் குளிக்க செப்டம்பர் 8ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார்…

1 Min Read
அமைச்சர் ரமேஷ் தீரன் சின்னமலை உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்
தமிழ்நாடு

திமுக ஆட்சி ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை விரைவில்: அமைச்சர் ரமேஷ்

திமுக ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும், கடந்த திமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?