MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கஞ்சா, மது போதையை ஒழிக்க போர்க்கால நடவடிக்கை தேவை – அன்புமணி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > கஞ்சா, மது போதையை ஒழிக்க போர்க்கால நடவடிக்கை தேவை – அன்புமணி
தமிழ்நாடு

கஞ்சா, மது போதையை ஒழிக்க போர்க்கால நடவடிக்கை தேவை – அன்புமணி

Admin
Last updated: May 11, 2026 5:16 pm
Admin
Share
SHARE

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியை அடுத்த காட்டுவளவு என்ற இடத்தில் மது போதையில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரு மாணவர்கள் உள்ளிட்ட மூவர் ஒன்று சேர்ந்து கோகுல் என்ற சக மாணவரை சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. மாணவன் கோகுலை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவன் கோகுல், அவருடன் பயிலும் மாணவர்கள் இருவர் உள்ளிட்ட மூவரும் இணைந்து மது அருந்திக் கொண்டிருந்த போது, சாதியின் பெயரை சொல்லி திட்டியதால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் மாணவன் கோகுலை மற்ற மூவரும் சேர்ந்து கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, கொலை செய்யும் காட்சிகளை காணொலியாக பதிவு செய்து கொண்டாடியுள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மூவரையும் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

மது மனிதர்களை எந்த அளவுக்கு மிருகமாக்குகிறது என்பதற்கு மிக மோசமான எடுத்துக்காட்டு இதுதான். தங்களுடன் ஒன்றாக பழகிய நண்பனை கொலை செய்தது மட்டுமின்றி, அதை காணொலியில் பதிவு செய்து கொண்டாடும் அளவுக்கு மது மனிதனை கொடூரனாக மாற்றியிருக்கிறது. மதுவை விட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் மனிதர்களை மேலும் மோசமாக்குகின்றன.

தமிழ்நாட்டில் மதுவும், பிற போதைப் பொருள்களும் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதைத்தான் இந்த நிகழ்வு உணர்த்துகிறது. தமிழ்நாட்டில் மது மற்றும் போதையின் சீரழிவுகள் ஏற்கனவே உச்சத்தை அடைந்து விட்டன. நிலைமை மேலும் மோசமாவதைத் தடுக்க தமிழ்நாட்டில் மது மற்றும் போதையை முற்றிலுமாக ஒழிக்க போர்க்கால அடிப்படையில் புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தரையிறங்கும்போது தீப்பற்றிய விமானம்.. நூலிழையில் உயிர்தப்பிய 288 பேர் | Nepal
Next Article அ.தி.மு.க. பிளவு? 17 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இ.பி.எஸ்.க்கு ஆதரவாக தற்காலிக சபாநாயகரிடம் மனு!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் மோடி யுஏஇ பயணம்: இந்தியா-யுஏஇ இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

பிரதமர் மோடியின் இரண்டு மணி நேர யுஏஇ பயணத்தில், பாதுகாப்பு, பெட்ரோலியம், எல்பிஜி…

May 15, 2026

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மக்கள் மீது மத்திய அரசின் தாக்குதல் – ராகுல் காந்தி

மத்திய அரசின் தவறான கொள்கைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக…

May 15, 2026

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மோடி அரசின் தவறுக்கு மக்கள் ஏன் விலை கொடுக்க வேண்டும்? – ராகுல் காந்தி கேள்வி

பெட்ரோல், டீசல் விலையில் ஏற்பட்ட திடீர் லிட்டருக்கு…

May 15, 2026

ஆந்திராவில் வெள்ளிதோறும் ‘வாகனமில்லா தினம்’: சைக்கிளில் முதல்வர்!

ஆந்திராவில் வெள்ளிக்கிழமை முதல் 'வாகனமில்லா தினம்' கடைபிடிக்கப்படும்.…

May 15, 2026

கேரளாவில் அதிசய நிகழ்வு: கிணற்றில் 53 ஆமைகளை மீட்ட வனத்துறையினர்!

கேரளாவில் பயன்பாட்டில் இல்லாத பொது கிணற்றில் இருந்து…

May 15, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல்வர்கள், சபாநாயகர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள்: முழுமையான பட்டியல்

தமிழ்நாடு சட்டப்பேரவை அமைக்கப்பட்ட 1952 முதல், தற்போதைய முதல்வர் ஜோசப் விஜய் வரையிலான காலக்கட்டத்தில் பதவி வகித்த முதல்வர்கள், சபாநாயகர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் பற்றிய முழுமையான…

1 Min Read
தமிழ்நாடு

Finally மேஜிக் நம்பரை எட்டி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் த.வெ.க. – ஆளுநரை சந்திக்கும் விஜய்…

தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 என்ற மேஜிக் நம்பரை பெறுவதற்காக தமிழக வெற்றிக்கழகம் மேற்கொண்ட முயற்சி கை கொடுத்துள்ளது. கடந்த புதன்கிழமை காங்கிரஸ் கட்சியின் ஆதரவை…

1 Min Read
தமிழ்நாடு

மீண்டும் 2 அணிகளாக உடைந்த அதிமுக: இபிஎஸ்க்கு 17… வேலுமணிக்கு 30 – விரைவில் விஜய்யுடன் சந்திப்பு?

நடந்துமுடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், அதிமுக 47 இடங்களை மட்டுமே பெற்று மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதால், எடப்பாடி தலைமை மீது பெரும் அதிருப்தி ஏற்பட்டது. இதன் விளைவாக…

1 Min Read
தமிழ்நாடு

எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தெரியுமா?

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி சுமார் 5.8 கிமீ…

3 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?