MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இந்திய டி20 அணிக்கு தற்காலிக பயிற்சியாளர் ஆனார் விவிஎஸ் லட்சுமண்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இந்திய டி20 அணிக்கு தற்காலிக பயிற்சியாளர் ஆனார் விவிஎஸ் லட்சுமண்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - இந்திய டி20 அணிக்கு தற்காலிக பயிற்சியாளர் ஆனார் விவிஎஸ் லட்சுமண்!

விளையாட்டு

இந்திய டி20 அணிக்கு தற்காலிக பயிற்சியாளர் ஆனார் விவிஎஸ் லட்சுமண்!

Admin
Last updated: ஜூலை 8, 2026 9:30 காலை
Admin
Share
விவிஎஸ் லட்சுமண் இந்திய கிரிக்கெட் அணியின் தற்காலிக பயிற்சியாளராக நியமனம்
இந்திய டி20 அணியின் தற்காலிக தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமண் நியமனம்.
SHARE

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்தடுத்த சர்வதேச தொடர்களை முன்னிட்டு, இந்திய அணியின் தற்காலிக தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பிசிசிஐ-யின் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் விவிஎஸ் லட்சுமண், ஜிம்பாப்வே டி20 தொடர் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாடும் இந்திய அணிக்கு பயிற்சியாளராகச் செயல்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தற்போதைய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் அவரது குழுவினருக்கு ஓய்வளிக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் முடிந்தவுடன் இந்த மாற்றம் நிகழும். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் முடிந்த உடன் மீண்டும் கம்பீர் தலைமையிலான பயிற்சியாளர்கள் குழுவே இந்திய அணியை வழிநடத்தும்.

விவிஎஸ் லட்சுமணுடன் பேட்டிங் பயிற்சியாளராக ஹிருஷிகேஷ் கனித்கரும், பந்துவீச்சு பயிற்சியாளராக சுனில் ஜோஷியும் செயல்படவுள்ளனர். இங்கிலாந்து தொடர் முடிந்த அடுத்த 4 நாட்களில், அதாவது ஜூலை 23 முதல் ஜிம்பாப்வேயில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்கவுள்ளது. இவ்வளவு குறுகிய காலத்தில் அடுத்த தொடர் தொடங்குவதால், கம்பீரின் குழுவிற்கு ஓய்வளிக்கப்பட்டு, லட்சுமணின் குழுவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் உள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஜூலை 14, 16 மற்றும் 19 ஆகிய தேதிகளில் விளையாடவுள்ளது. இந்த தொடர்கள் முடிந்த பிறகு, ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணிக்கு லட்சுமண் தலைமை தாங்குவார்.

இதேபோல், வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களிலும் இந்திய அணிக்கு நெருக்கடியான அட்டவணை காத்துள்ளது. செப்டம்பர் 13 முதல் 19 வரை ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. அதே நேரத்தில், செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 3 வரை ஆசிய விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறவுள்ளன.

இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு லட்சுமண் பயிற்சியாளராகச் செயல்படுவார். அதே நேரத்தில், செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 17 வரை வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நடைபெறவுள்ள 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட வெள்ளைப்பந்து தொடருக்கு கௌதம் கம்பீர் பயிற்சியாளராகச் செயல்படுவார்.

விவிஎஸ் லட்சுமண் இந்திய அணிக்கு தற்காலிக பயிற்சியாளராகச் செயல்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு 2024-ல் சுப்மன் கில் தலைமையில் ஜிம்பாப்வே சென்ற இந்திய அணிக்கும், 2023 ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் லட்சுமண் பயிற்சியாளராகப் பொறுப்பேற்று அணியை வழிநடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கம்பீர் பயிற்சியின் கீழ் 2026 டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி, அடுத்து அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்துள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:BCCICricketGautam GambhirIndian Cricket TeamT20VVS Laxmanஇந்திய கிரிக்கெட் அணிகிரிக்கெட்கௌதம் கம்பீர்டி20பிசிசிஐவிவிஎஸ் லட்சுமண்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கூகுள் பிக்சல் 11 ஸ்மார்ட்போன் அறிமுகம் கூகுள் பிக்சல் 11 இந்தியாவில் ஆகஸ்ட் 12 அறிமுகம்
Next Article திண்டுக்கல் காவல் துறையினர் குற்றவாளிகளை அழைத்துச் செல்லும் காட்சி திண்டுக்கல்லில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: 7 பேர் போக்சோவில் கைது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அயோத்தி ராமர் கோவில் உண்டியல் பணம் திருட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஊழியர்

அயோத்தி ராமர் கோவில் காணிக்கை திருட்டு: காதலிக்கு ஐபோன் வாங்கி கொடுத்த ஊழியர் கைது!

அயோத்தி ராமர் கோவிலில் உண்டியலில் இருந்த பணத்தை திருடி, காதலிக்கு ஐபோன் வாங்கி…

ஜூலை 8, 2026

மகனின் முகத்தை பார்க்க மறுத்த தாய்: மேற்கு வங்க என்கவுண்டர் சம்பவம்

மேற்கு வங்கத்தில் 11 வயது சிறுமி கூட்டு…

ஜூலை 8, 2026

இந்தோனேசியாவின் பிரம்பனன் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு

இந்தோனேசியாவின் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற பிரம்பனன் கோயிலில்…

ஜூலை 8, 2026

மருத்துவர், ஊழியர் மீது கொடூர தாக்குதல்: சிவசேனா பிரமுகர் கைது

சென்னையில் பெண் மருத்துவர் மற்றும் ஊழியர் மீது…

ஜூலை 8, 2026

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிர் தப்பிய மதுரை தம்பதி: வைரலாகும் வீடியோ

கேரளாவின் வயநாடு நிலச்சரிவில் சிக்கி, லாரிக்கு அடியில்…

ஜூலை 8, 2026

You Might Also Like

விளையாட்டு

இந்திய ஏ அணி ஆதிக்கம்: ஜூரல் சதம், இலங்கை ஏ அணிக்கு நெருக்கடி

இலங்கை ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி வலுவான நிலையில் உள்ளது. கேப்டன் துருவ் ஜூரல் சதம் அடிக்க, இலங்கை ஏ அணி…

1 Min Read
விளையாட்டு

IND vs IRE: சாம்சன், அபிஷேக் செய்த வெட்கக்கேடான சாதனை!

அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தேவையற்ற மோசமான சாதனைகளை…

1 Min Read
விளையாட்டு

ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்சி மீது சேவாக் கடும் விமர்சனம்

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் முடிவுகள் மீது முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் கடும் விமர்சனங்களை…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

கவுன்ட்டி கிரிக்கெட்: மானவ் சுதர் முதல் நாளில் 2 விக்கெட்டுகள்

கவுன்ட்டி கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான மானவ் சுதர், தனது முதல் போட்டியின் முதல் நாளிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். வார்விக்ஷயர் அணிக்காக விளையாடும் இவர், தனது…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?