MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தமிழக முதல்-அமைச்சராக இன்று விஜய் பதவியேற்கிறார்: சென்னையில் 20 இடங்களில் விழா நேரலை ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தமிழக முதல்-அமைச்சராக இன்று விஜய் பதவியேற்கிறார்: சென்னையில் 20 இடங்களில் விழா நேரலை ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தமிழக முதல்-அமைச்சராக இன்று விஜய் பதவியேற்கிறார்: சென்னையில் 20 இடங்களில் விழா நேரலை ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு

தமிழ்நாடு

தமிழக முதல்-அமைச்சராக இன்று விஜய் பதவியேற்கிறார்: சென்னையில் 20 இடங்களில் விழா நேரலை ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு

Admin
Last updated: மே 10, 2026 10:56 காலை
Admin
Share
SHARE

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 4-ம் தேதி வெளியானது. அதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதில் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். இதில் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டி இருப்பதால் த.வெ.க.வின் பலம் 107 ஆக இருந்தது. ஆனால் ஆட்சி அமைப்பதற்கு 118 இடங்கள் தேவை.

எனவே த.வெ.க., தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற்று ஆட்சி அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டது. இதில் காங்கிரஸ் முதல் கட்சியாக விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததுடன், அமைச்சரவையிலும் இடம்பெறுவோம் என்று தெரிவித்தது. அந்த கட்சிக்கு 5 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்த ஆதரவு கடிதத்துடன் தமிழக கவர்னர் அர்லேகரை சந்தித்து, ஆட்சி அமைக்க 2 முறை உரிமை கோரினார். ஆனால் போதிய பெரும்பான்மை இல்லை என்று கவர்னர் அனுமதி அளிக்கவில்லை. இதனால் விஜய் பதவி ஏற்பதில் இழுபறி ஏற்பட்டது. இந்த நிலையில் த.வெ.க.வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆதரவு அளித்ததன் மூலம், த.வெ.க.வின் பலம் 116 ஆக உயர்ந்தது. இதையடுத்து 3-வது முறையாக நேற்று முன்தினமும் கவர்னரை விஜய் சந்தித்தார். ஆனால் கவர்னர் தரப்பில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை.

த.வெ.க. ஆட்சி அமைக்க மேலும் 2 இடங்கள் தேவை என்ற நிலையில், 2 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவை பெற த.வெ.க. தரப்பில் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. திருமாவளவன் தரப்பில் தொடர்ந்து மவுனம் காக்கப்பட்டது. இது பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியது. திருமாவளவன் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். நேற்று காலை முதலே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. திருமாவளவன் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். நேற்று காலை முதலே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. தங்களது முடிவை, மாலை 4 மணிக்கு மேல் தெரிவிப்பதாக வி.சி.க. தெரிவித்தது. அதனால் அடுத்து என்னாகும்? என பதட்டம் நீடித்தது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். அதே போல் நீலாங்கரை மற்றும் பட்டினப்பாக்கம் இல்லத்தில் அடுத்தடுத்து கட்சியினருடன் விஜய் தீவிர ஆலோசனை நடத்தினார். மாலை 4.30 மணியளவில் த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தெரிவித்தது. இதற்கான ஆதரவு கடிதத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம் இருந்து, த.வெ.க. தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பெற்றார். த.வெ.க.வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக விடுதலை சிறுத்தை கள் கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் த.வெ.க.விடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை முதல்-அமைச்சர், அமைச்சர் பதவி கேட்பதாக வெளியான தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு மூலம் நேற்று காலை முதல் மாலை 4.30 மணி வரை நீடித்த பரபரப்பு முடிவுக்கு வந்தது. த.வெ.க. பெரும்பான்மைக்கான பலமான 118-யை அடைந்தது.

த.வெ.க.வுக்கு இதுவரை ஆதரவு இல்லை என்று கூறி வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் நேற்று மாலை திடீரென்று த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவிப்பை வெளியிட்டது. எதிர்பாராத இந்த ஆதரவின் மூலம் த.வெ.க.வின் பலம் 120 ஆக உயர்ந்தது. இது பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டிய எண்ணிக்கையாகும்.

இதற்கிடையில் நேற்று இரவு கவர்னர் கேரளா செல்வதாக தகவல் இருந்தது. எனவே விஜய், உடனடியாக பட்டினப்பாக்கம் இல்லத்தில் இருந்து கவர்னர் அர்லேகரை சந்திக்க மக்கள் மாளிகைக்கு அவசர, அவசரமாக மாலை 4.30 மணியளவில் புறப்பட்டார். அவரை ஆதரிக்கும் கட்சிகளின் தலைவர்களும் மக்கள் மாளிகைக்கு வந்தனர். ஆனால் அவர் பாதி தூரம் சென்ற நிலையில் அவருக்கு கவர்னர் சந்திப்புக்கான அனுமதி கிடைக்கவில்லை என்ற தகவல் விஜய் தரப்புக்கு எட்டியதால், அவர் பாதி வழியிலேயே “யு டர்ன்” அடித்து மீண்டும் பட்டினபாக்கம் இல்லம் வந்தார். அதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் கவர்னர் அர்லேகர், திடீரென்று தனது கேரள பயணத்தை ரத்து செய்ததோடு, விஜய் தன்னை சந்திக்க அனுமதி அளித்தார்.

தமிழக கவர்னர் அர்லேகர் விஜய்யை சந்திக்க அனுமதி அளித்ததைத் தொடர்ந்து விஜய் மீண்டும் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு நேற்று மாலை 6.30 மணியளவில் 4-வது முறையாக மக்கள் மாளிகைக்கு வந்தார். அங்கு ஆதரவு அளிக்கும் கட்சி தலைவர்களுடன் கவர்னர் அர்லேகரை சந்தித்து, ஆட்சி அமைப்பதற்கான 120 எம்.எல்.ஏ.க்களின் பெரும்பான்மை பட்டியலை வழங்கினார். இந்த சந்திப்பு சுமார் 1.40 மணி நேரத்துக்கு மேலாக நடந்தது. பின்னர் கவர்னர் அர்லேகர், விஜய்யை ஆட்சி அமைக்க அழைத்ததுடன், அவரை முதல்-அமைச்சராக நியமித்து ஆணை வழங்கினார். இதையடுத்து விஜய், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்கிறார். அதற்கான விழா சென்னை பெரியமேடு நேரு உள்விளையாட்டரங்கத்தில் காலை 10 மணிக்கு நடக்கிறது. கவர்னர் அர்லேகர், விஜய்க்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கிறார். விஜய்யுடன் த.வெ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்கிறார்கள்.

விஜய் பதவியேற்பு விழா நேரலை: சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் இன்று பதவியேற்க உள்ள நிலையில் பதவியேற்பு விழாவை நேரலையில் காண சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி கீழ்காணும் 20 இடங்களில் எல்.இ.டி. மின்னணுத் தொலைக்காட்சிகள் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

4. புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்டிட்ரல் ரெயில் நிலையம்

ஆகிய மேற்சொன்ன இடங்களில் எல்.இ.டி. திரையின் மூலம் பதவியேற்பு விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article CSK: சிஎஸ்கே-வுக்கு வந்த உடன் கேப்டன் பதவி கேட்பதா? நெகிழ வைத்த சஞ்சு சாம்சன்.. என்ன சொன்னார்?
Next Article ஸ்குவாஷில் ரமித், வேலவன் தோல்வி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய பிரதிநிதி பேசும் காட்சி

பாகிஸ்தான் பிரதமரின் உரைக்கு ஐ.நா.வில் இந்தியா பதிலடி

ஐ.நா.வில் பாகிஸ்தான் பிரதமர் உரைக்கு இந்தியா பதிலடி. பாகிஸ்தானில் பொம்மை அரசாங்கம் இருப்பதாகவும்,…

செப்டம்பர் 26, 2026

தேர்தல் ஆணையர் சர்ச்சை: இந்தியா கூட்டணி கூட்டம் அடுத்த வாரம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சர்ச்சை…

செப்டம்பர் 26, 2026

மணிப்பூரில் மியான்மர் கும்பலால் 4 பேர் படுகொலை

மணிப்பூர் மாநிலத்தில் மியான்மர் கும்பலால் 4 பேர்…

செப்டம்பர் 26, 2026

இஸ்லாமிய பெண் வாரிசுகளுக்கும் சொத்தில் சம பங்கு: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

இஸ்லாமிய பெண் வாரிசுகளுக்கும் பூர்வீகச் சொத்தில் சம…

செப்டம்பர் 26, 2026

டெல்லியில் 3 மாதங்களில் 377 குழந்தைகள் நலன் சார்ந்த புகார்கள்

டெல்லியில் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் கடந்த…

செப்டம்பர் 26, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தங்கம் வாங்காதவர்களுக்கு நன்றி: பிரதமர் மோடி நெகிழ்ச்சி

தங்கம் வாங்குவதை தவிர்த்த மக்களுக்கும், கார் பூலிங் முறையை ஊக்குவித்தவர்களுக்கும் பிரதமர் மோடி 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் நன்றி தெரிவித்தார். தற்சார்பு இந்தியா குறித்த சாதனைகளையும்…

2 Min Read
தமிழ்நாடு

மருத்துவர்களின் சேவையை பாராட்டிய எடப்பாடி பழனிசாமி

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவர்களின் பணியை 'உயிர் காக்கும் உயரிய பணி' எனப் பாராட்டியுள்ளார். மருத்துவர்கள் தினம் அனுசரிக்கப்பட்ட நிகழ்வில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

1 Min Read
தொண்டர்கள் நலக் கட்சி அலுவலகம் அல்லது கட்சி கொடி
தமிழ்நாடு

லஞ்சப் புகாரில் நீக்கப்பட்டவரின் மனைவிக்கு பதவி: தவெகவில் பரபரப்பு

லஞ்சப் புகாரில் தொண்டர்கள் நலக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட வீராசாமியின் மனைவிக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. இது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

சி.வி.சண்முகம் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் – முதன்மைச் செயலாளர் தகவல்

தமிழக சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் மயிலம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.வி.சண்முகம் பதவியேற்கவில்லை. சி.வி. சண்முக

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?