MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மருத்துவர் பற்றாக்குறையால் குழந்தை உயிரிழப்பு: விஜய் அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மருத்துவர் பற்றாக்குறையால் குழந்தை உயிரிழப்பு: விஜய் அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - மருத்துவர் பற்றாக்குறையால் குழந்தை உயிரிழப்பு: விஜய் அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

லைஃப் ஸ்டைல்

மருத்துவர் பற்றாக்குறையால் குழந்தை உயிரிழப்பு: விஜய் அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

Admin
Last updated: ஜூன் 10, 2026 11:07 மணி
Admin
Share
SHARE

சென்னை கண்ணகி நகரில் உள்ள சமுதாய நலவாழ்வு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால், பிரசவ வலியுடன் வந்த கர்ப்பிணி பெண்ணின் குழந்தை வயிற்றிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் விஜய் அவர்களைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நயினார் நாகேந்திரன், "ஏழை எளிய மக்களின் உயிர்களின் மீது இத்தனை அலட்சியம் ஏன் திரு. விஜய் அவர்களே? சென்னை கண்ணகி நகரில் உள்ள சமுதாய நலவாழ்வு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாத காரணத்தால், பிரசவ வலியுடன் வந்த கர்ப்பிணி பெண்ணின் குழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டதாக வெளியாகியுள்ள தகவல் கடும் அதிர்ச்சியளிப்பதோடு, மிகுந்த மன வேதனையுமளிக்கிறது. தனது பல மாதக் கனவை கருவிலேயே இழந்து வாடும் அந்தத் தாய்க்கு என்ன ஆறுதல் சொல்லித் தேற்றப் போகிறீர்கள் முதல்வரே?"

மேலும் அவர், "தினசரி ஏதேதோ ஆய்வு செய்வதாக ரீல்ஸ் எடுத்து வெளியிடுவதில் முழுக் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் உங்கள் அமைச்சர்களும் அதிகாரிகளும், கொஞ்சம் பொறுப்புடன் தங்கள் வேலைகளை ஒழுங்காக செய்திருந்தால் இந்த உயிர்பலியை தவிர்த்திருக்கலாமே? எதற்கு இத்தனை பித்தலாட்டங்கள்? எதற்கு இத்தனை விளம்பர நாடகங்கள்? மாயாஜால வார்த்தைகளால் மக்களை மயக்க முயல்வதில் திமுகவை விட நீங்கள் ஒருபடி மேலேறி விட்டீர்கள். உங்களை நம்பி வாக்களித்த மக்களை தினசரி ஏதோவொரு வகையில் காயப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்."

"போதும் திரு. ஜோசப் விஜய் அவர்களே, இனியாவது உங்களை நம்பிய மக்களுக்கு ஏதேனும் நல்லது செய்ய முயலுங்கள்! தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ அமைப்புகளிலும் போதிய மருத்துவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்யுங்கள்!" என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவம் தமிழக அரசு மருத்துவமனைகளின் அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவர் பற்றாக்குறை குறித்து மீண்டும் ஒருமுறை கேள்விகளை எழுப்பியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:குழந்தை உயிரிழப்புதமிழக அரசியல்தமிழ்நாடுநயினார் நாகேந்திரன்பாஜகவிஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 3 செய்தி சேனல் ஒளிபரப்பு நிறுத்தம்: அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
Next Article படிப்பு தான் முக்கியம்: முதல்வர் விஜயை விமர்சித்த சாய் தீனா
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தொடர்பான விவகாரம் குறித்து விவாதிக்க உள்ள 'இந்தியா' கூட்டணி தலைவர்கள்

தேர்தல் ஆணையர் சர்ச்சை: இந்தியா கூட்டணி கூட்டம் அடுத்த வாரம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சர்ச்சை எதிரொலி: 'இந்தியா' கூட்டணி அடுத்த…

செப்டம்பர் 26, 2026

மணிப்பூரில் மியான்மர் கும்பலால் 4 பேர் படுகொலை

மணிப்பூர் மாநிலத்தில் மியான்மர் கும்பலால் 4 பேர்…

செப்டம்பர் 26, 2026

இஸ்லாமிய பெண் வாரிசுகளுக்கும் சொத்தில் சம பங்கு: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

இஸ்லாமிய பெண் வாரிசுகளுக்கும் பூர்வீகச் சொத்தில் சம…

செப்டம்பர் 26, 2026

டெல்லியில் 3 மாதங்களில் 377 குழந்தைகள் நலன் சார்ந்த புகார்கள்

டெல்லியில் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் கடந்த…

செப்டம்பர் 26, 2026

கட்டுப்பாட்டை இழந்த கார்: 6 வாகனங்கள் மீது மோதி பயங்கர விபத்து, 5 பேர் காயம்

சென்னையில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, அடுத்தடுத்து…

செப்டம்பர் 26, 2026

You Might Also Like

பாத்திரத்தில் காபி தூள் மற்றும் லிக்விட் கலந்த பேஸ்ட்
லைஃப் ஸ்டைல்

காஃபி தூள் கொண்டு பாத்திர கறைகளை நீக்குவது எப்படி?

மீதமாகும் காபித் தூளைக் கொண்டு பாத்திரங்களில் படிந்துள்ள விடாப்பிடியான எண்ணெய் பிசுக்குகளையும், கறைகளையும் எளிதாக அகற்றலாம். இது ஒரு சிறந்த இயற்கை உராய்வுப் பொருளாக செயல்படுகிறது.

2 Min Read
கோடைக்காலத்தில் ஏசி பயன்படுத்தும் நபர்
லைஃப் ஸ்டைல்

கோடை வெயில்: ஏசி பயன்படுத்துவோர் கவனிக்க வேண்டியவை!

கோடைக்காலத்தில் ஏ.சி. பயன்படுத்துவோர் கவனிக்க வேண்டிய 7 முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். ஃபில்டர் சுத்தம் செய்தல், மின் இணைப்புகள் சரிபார்த்தல் போன்றவை அவசியம்.

2 Min Read
தமிழ்நாடு

உதயநிதியை துணை முதல்வராக்க காங்கிரஸ் உதவியது: மாணிக்கம் தாகூர்

உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க காங்கிரஸ் உதவியது என்றும், அவர் நன்றி மறந்து பேசுவதாகவும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார். விஜய் முதல்வராவதை தடுக்க உதயநிதி…

1 Min Read
புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணை வெளியீடு
தமிழ்நாடு

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்: அரசாணை வெளியீடு

சென்னை பட்டினப்பாக்கம் அருகே புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டிடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?