MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: வேலூர்: கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபர் – கொலையா? போலீசார் விசாரணை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - வேலூர்: கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபர் – கொலையா? போலீசார் விசாரணை

தமிழ்நாடு

வேலூர்: கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபர் – கொலையா? போலீசார் விசாரணை

Admin
Last updated: மே 9, 2026 3:55 காலை
Admin
Share
SHARE

வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவரது மகன் தினேஷ் (வயது 22). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்றவர் நீண்ட நேரமாக திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால், தினேஷை கண்டுபிடிக்க முடியாததோடு அவரைப்பற்றிய எந்த தகவலும் கிடைக்க வில்லை.

இதையடுத்து தினேஷை கண்டுபிடித்து தரக்கோரி விரிஞ்சிபுரம் போலீசில் தினேஷின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் தினேஷின் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து. அவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா?, தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article Tamil Nadu Government Formation Live Updates: ஆளுநர் மாளிகையில் விஜய்; தொண்டர்களை நோக்கி கை கூப்பியபடி வருகை
Next Article திருச்சி-சரளப்பள்ளி சிறப்பு ரெயில் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தின் அலுவலகம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு இந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

மும்பையில் கனமழையால் குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை மன்குர்ட் பகுதியில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு…

ஜூலை 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

ஒரே மாணவிக்கு ரூ.2.10 லட்சம் சம்பளத்தில் 2 ஆசிரியர்கள்: விளாத்திகுளம் பள்ளி சர்ச்சை

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஒரே ஒரு மாணவிக்காக ரூ.2.10 லட்சம் சம்பளத்தில் 2 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முறையான கல்வி கற்பிக்கப்படுவதில்லை…

1 Min Read
தமிழ்நாடு

டாஸ்மாக் பணியாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்: அமைச்சர் விக்னேஷ்

பயன்படுத்தப்பட்ட காலி மதுபான பாட்டில்களை வெளிமுகமை வழியாக திரும்பப்பெறும் திட்டத்தை ஜூன் இறுதிக்குள் செயல்படுத்தப்படும் என அமைச்சர் விக்னேஷ் அறிவித்துள்ளார். எனவே, டாஸ்மாக் பணியாளர்கள் இன்று முதல்…

1 Min Read
தமிழ்நாடு

முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு இன்று துவங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள்…

1 Min Read
தமிழ்நாடு

மாற்றங்கள் அதிரடி! தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் இடமாற்றம் – முக்கிய நியமனங்கள்!

தமிழகத்தில் 17 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி ஆணையராக டாக்டர் ஜி.எஸ். சமீரன் நியமனம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?